கலாட்டா கிச்சன் அசத்தலான பகுதி - 9

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம். வந்தாச்சு தோழிகளே நீங்கள் எல்லாரும் வந்து ஆஜராகும்படி கேட்குக் கொள்கிறோம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

chithra - 94
gandhiseetha - 88

இவற்றில் இருந்து வரும் Mar 07 ஆம் தேதி முதல் Mar 14 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

கணக்குபிள்ளை யாழினி செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கிறார். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

ஆரம்பமாயிடுச்சு. இன்னைக்கே குறிப்புகளை பார்த்து வாங்க வேன்டியதை வாங்கிடுங்க தோழிகளே. சரியா? இம்முறை நிரைய சமைச்சு கொண்டு வரணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

good

ஹாய் வனிக்கா..... இந்த திங்களும்,செவ்வாயும் பகலில் என்னிடம் லேப்டாப் இருக்காது....என்னடா பன்னன்னு யோசிச்சிட்டு இருந்தேன்...நல்ல வேளை இன்னைக்கே குடுத்துட்டீங்க...நாளைக்கு செய்ய வேண்டியதை எழுதி வைத்து விட்டேன்....நன்றி வனிக்கா...

காலை ப்ரேக்ஃபாஸ்ட்

லப்ஸி அல்வா- சித்ரா
முழு உளுந்து அடை- சித்ரா
முள்ளங்கி சட்னி- காந்தி சீதா
லஞ்ச்

நெந்திரம் பழ மோர்க்குழம்பு- காந்தி சீதா
வெண்டைக்காய் சிப்ஸ்- காந்தி சீதா
டின்னர்

வெஜிடபுள் கோதுமை தோசை- காந்தி சீதா
தக்காளி , பீட்ரூட் இனிப்பு பச்சடி- சித்ரா

சுமதி... மிக்க நன்றி. முதல் ஆளாய் வந்துட்டீங்க. சீக்கிரம் சமைச்சு கொண்டு வாங்க.

கோமு.. ஆரம்பமே இவ்வளவா??? கலக்கறீங்க. பட்டத்தை வாங்காம விடுவதில்லை.

யாழினி எங்கே??? யாராவது பார்த்தா வர சொல்லுங்கப்பா. நான் இல்லாதப்போலாம் நேரத்துக்கு வந்துடுவாங்க, நான் இருந்தா காணாம போயிடறாங்க. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி... என் கணக்கு:

சீதாவின் - வெஜ்டபுள் கோதுமை தோசை, அவசர தக்காளி சட்னி

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னங்க... ஏன் யாரும் வரல? தலைப்பையே தேடும் அளவு விட்டுட்டீங்களே!!! வருத்தமா இருக்கு.... நாளுக்கு நாள் இதில் வரும் பதிவுகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகுது. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படியோ என்னால முடிஞ்சதை செய்துட்டேன்:

சித்ராவின் - வாழைப்பழத் தோசை, சேனைக்கிழங்கு மோர் குழம்பு, டீ மசாலா

யாழினி... கணக்கில் எடுத்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆரம்பமாகிவிட்டதா சூப்பர் வனிக்கா இங்கு நெட் கனெக்ஸன் பிரச்சனை சரியாக வொர்க் செய்யவில்லை
முடிந்தால் செய்துவிட்டு பதிவிடுகிறேன்..நன்றி
தோழிகள் அனைவரும் வந்து கலந்துகொள்ளூமாறு கேட்டுக்கொள்கிறேன்..நன்றி

வாழு, வாழவிடு..

வனிதா,
கலாட்டா கிச்சன் பகுதி 9 தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.

இன்று என் கணக்கு,
திருமதி.காந்திசீதா அவர்களின் புளிகுழம்பு மற்றும் உருளை கிழங்கை மைக்ரோ அவனில் சுலபமாக வேக வைக்கும் முறை.

யாழினி என் கணக்கில் குறிச்சுக்கோங்க.

மேலும் சில பதிவுகள்