வயிற்றின் உள்ள குழந்தைக்கு எடை அதிகரிக்க

ஹாய் தோழீஸ் நான் இப்போது 7மாத கர்ப்பமாக உள்ளேன். அது உங்க எல்லோருக்கும் தெரியும். எதுக்கு சொல்றேன்னா பதில் போடும் போது அதற்க்கு ஏத்தார்ப்போல சொல்லுவிங்களா அதான்.:)) . நான் என்ன சாப்ட்டாலும் எனக்கு தான் எடை போடுகிறது. குழந்தையின் எடை அதிகரிக்க நான் என்ன என்ன சாப்ட வேண்டும். நான் கடேசி ஒரு மாதத்தில் 4கிலோ எடை அதிரிகத்து உள்ளேன். டாக்டர் சொல்ராங்க, நீங்க சாப்டுரது உங்களுக்கு தான் எடை போடுகிறது. குழந்தைக்கு எடை போடு உணவு சாப்டுங்க என்று. எனக்கு எடை போடாமல் என் குழந்தைக்கு எனை போட வேண்டும். அதற்க்கு நான் என்ன சாப்டுரது. நான் முதல் மாத கர்ப்பத்தின் போது 50கிலோ இருந்தேன் இப்போது 62 கிலோ வந்து விட்டேன். 7வது மாதத்தில். நான் உயரமும் கிடையாது. ரொம்ப குட்டையா தான் இருப்பேன். தோழீஸ் வந்து ஆலோசனை கூறுங்கள்.

முக்கியமான விஷயம். எனக்கு வயிறும் நிறைய வேண்டும். ஆனால் எடையும் அதிகரிக்க கூடாது. என் குழந்தையின் எடை மட்டும் அதிகரிக்க வேண்டும். ஆப்பிள் சாப்டால் நம் எடை அதிகரிக்கும்மா. அதன் பின்னர் குங்கும பூ எந்த மாததில் இருந்து சாப்பிட வேண்டும். எந்த நேரம் எதில் கலந்து சாப்பிட வேண்டும். என் உடம்பு ரொம்ப ஹீட் இதை நினைவில் வைத்து பதில் தரவும். ப்ளீஸ். கேட்கிறதே உதவி இது ஆயிரம் கண்டிசன் வேர அப்படினி என்ன எல்லாரும் மனதில் திட்டுரது எனக்கு தெரியுது. :))))))))))

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஏழு மாத்திற்கு மேல் பிள்ளைக்கு வெய்ட் தானாகவே ஏறும்,கவலைவேண்டாம்.குங்குமப்பூ ஒருபின்ச் பாலில் கலந்து இரவில் குடிக்கலாம்.இந்தநேரத்தில் யாரும் திட்ட மாட்டாங்க,அதனால் தைரியமா உங்க சந்தேகங்களை கேளுங்க.

எப்படி இருக்கீங்க? அறுசுவையில் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது... குட்டி பாப்பா என்ன சொல்லுது? எங்க வீட்ல அத்தை சொன்னாங்க... 6,7 மாதத்திற்கு பிறகு சாப்பிடுவது எல்லாம் குழந்தைக்குதான் போகும்... பிறகு பாப்பா weight போட்டு சிரமம் ஆகிடும்னு... ஆனால் சரியா தெரியலை... யாராவது வந்து சரியான டயட் சொல்வாங்க... Take care...

ஹாய் சோனியா
கவலைப்படாதீங்க ஏழு மாதத்திற்கு பிறகு தான் குழந்தையின் எடை அதிகரிக்கும் . நிறைய கீரை , பருப்பு , தானிய வகைகள் , பால் , சிக்கன், முட்டை சாப்பிடுங்கள் . இதனால் குழந்தையின் எடையும் கூடும் அதோடு குழந்தையின் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். இது என் சொந்த அனுபவம். எனக்கு கற்பகால சக்கரை இருந்தது அதனால் மிக கடினமான டயட் கடைபிடிக்க வேண்டி இருந்தது . அவ்வாறு இருந்ததால் குழந்தையின் எடை ஆரோகியமானதாகவும் இருந்தது , சுக பிரசவம் ஆனது . இதுவரை என் குழந்தைக்கு பெரிதாக எந்த உடல் நல குறைவும் வந்ததில்லை . நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருக்கிறாள். எனவே குழந்தையின் எடை அதிகமாக நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை . உண்ணும் உணவை அதிகப்படுத்தவும் தேவையில்லை . சாதம் குறைவாக சாப்பிட்டு மேல் குறிப்பிட்டுள்ள வற்றை அதிகமாக எடுத்து கொள்ளவும் .குழந்தை ஆரோக்கியமாக வளரும் . நீங்கள் சுக பிரசவம் செய்ய என் வாழ்த்துக்கள் .

ஹாய் ரீம், அக்சரா, அன்புதோழீ உங்களுக்கு என் நன்றிகள்பா. இனி குழந்தைக்கு தான் எடை கூடும் என்றால். என் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லைதானே. ஏன் என்றால் மறுபடியும் . இனி குழந்தைக்கு தான் எடை போடும் என்று நான் நல்ல சாப்ட ஆரம்பித்து விடுவேன். அதான் கேட்டேன். நான் ஓக்கிங்க் போகலாம் என்று இருக்கேன். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஓக்கிங்க போகலாம். அது மாலை போகலாமா காலை போகலாமா. குங்கும பூ பற்றி கேட்டு இருந்தேன். எதற்க்காக கேட்டேன் என்றால். என் உடம்பு ரொம்ப சூடுபா குங்கும பூ ரொம்ப சூடுனி இங்கு படித்து இருக்கேன். எனக்கு ரொம்ப வெள்ளை படுது. டாக்டர் டெஸ்ட் பன்னி பார்த்து அதில் எந்த ஒரு இன்பெக்‌ஷன் இல்லனி சொல்லிடாங்க, ஆனாலும் வெள்ளை படுதலுக்கு மாத்திரை கொடுத்து இருக்காங்க., அந்த சூடோடி நான் குங்கும பூ சாப்டலாம.ப்ளீஸ் பதில் தாருங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா குழந்தையின் வெயிட் ஏற தினமும் ஒரு பாதம், ஒரு (வெள்ளையா சிப்பி மாதிரி இருக்கும் அதனுல் ஒரு பருப்பு இருக்கும் சாரிப்பா பெயர் தெரியவில்லை) அது சாப்பிடுங்க கண்டிப்பா குழந்தையின் வெயிட் ஏறும். அப்புரம் என் அக்காவிடம் கேட்டு சொல்லிகிறேன். சோனியா நான் முதல் குழந்தைக்கு கும்குமபூ சாப்பிட்டேன் ஆனால் குழந்தை கருப்பாதான் பொறந்தது.

வாழு இல்லை வாழவிடு

சுமி... பரவாயில்லை நீங்க சொல்றது பிஸ்தா.

சோனியா.. அரோகியமா சாப்பிடுங்க போதும், குழந்தை எடை 7 மாதத்துக்கு பின் தான் ஏறும். ரொம்ப மெனகிட்டு ஓவரா வளந்துடுச்சு பாப்பானு வைங்க, நார்மல் டெலிவெரி கஷ்டமாயிடும். அதனால் வழக்கம் போல் நல்ல சத்தான உணவா சாப்பிடுங்க போதுமானது. குங்குமப்பூ'கு ஒரு எஃபெக்ட்டும் எனக்கு தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் பதில் தந்தமைக்கு நன்றி. ஓக்கிங் போரது பத்தி கேட்டு இருந்தேன். அதற்க்கு பதில் யாரும்மே சொல்ல வில்லை. ஏன்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா நீங்க தினமும் எப்ப முடியுமோ அப்ப வாக்கிங் போங்க, ஆனால் நைட் போனிங்கனீனா ரொம்ப நல்லா இருக்கும்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்