தேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம்

தேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம்? எப்ப சாப்பிட கூடாது? ..எடை குறைய வெண் நீரில் தினமும் காலை சாப்பிடுகிறார். என் மனைவி .இது பற்றி அறிந்தவர்கள் சொல்லுங்கள். இது பற்றி முன்பே பதிவு இருந்தால் சொல்லுங்கள் ? சௌமியன் .

தோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் ?சௌமியன்

தோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் ?சௌமியன்

தோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் ?எனது இந்த பதிவுக்கு யாருமே பதில் தரவில்லை .மிகவும் வருத்தமாக உள்ளது .நாங்கள் நானும் மனைவி மட்டும் தனியாக வசித்து வருவதால் வேரூ யாரிடமும் கேட்க முடிய வில்லை .ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்க .எங்களுக்கு டாக்டர் பார்க்கவேண்டியது அடுத்த மாதம் முதல் வாரம் தான்.அது வரை தேன் சாப்டலாம சொல்லுங்க .சௌமியன் .

சகோதரர் சௌமியன் அவர்களே..,நலமா?தங்கள் மனைவி எப்படி இருக்காங்க?
யாரும் பதில் சொல்லவில்லை என்று வருந்த வேண்டாம் சகோதரரே... சரியாக தெரியாத விஷயத்தில் எப்படி சொல்வது என்று இருந்திருப்பார்கள்.
எனக்கு தெரிந்து தேன் ஒரு நல்ல மருந்துதான்.இருப்பினும் வெய்ட்டை குறைப்பதற்க்காக காலையில் தண்ணீரில் சாப்பிடுவதாக சொல்லியிருக்கின்றீர்கள்.மாதவிடாய் பிரச்சனை தீரவும் மாத்திரை எடுத்து வருவதாகவும் சொல்லியிருக்கின்றீர்கள்.அப்படியிருக்க நீங்கள் இப்போதைக்கு தேனை தண்ணீரில் சாப்பிடுவதை நிறுத்தி வைப்பது நல்லது என்றே தோன்றுகின்றது.
இரைவனின் உதவியால் தங்கள் மனைவியின் மாதவிடாய் பிரச்சனை தீர்ந்து நல்ல செய்தியும் நடக்கட்டும்.நீங்கள் இருவரும் நினைத்தபடி குழந்தை நல்ல விதமாக உண்டாகி பிறந்தவுடன் அதன் உடல் எடையை குறைக்க முற்படலாம் என்பது என் அபிப்ராயம்.
இன்னொன்று வரும் மாதம் டாக்டர் செக் அப் போகும் வரை நிறுத்தி வைய்யுங்கள்.பிறகு மருத்துவரிடம் விரிவாகவே ஆலோசனை கேளுங்கள்.அவர் எப்படி சொல்கிறாரோ அதன் படியே நடந்து கொள்ளுங்கள்.ஏற்கனவே தைராய்டு இருப்பதாக சொன்ன நினைவு எனக்கு உண்டு(நான் சொல்வது சரியா..?) அதுவே உடலை பலகீனபடுத்தும்.இப்போதைக்கு உடல் ஆரோக்யம்தான் முக்கியம் என்றே நான் கருதுகிறேன்.அரோக்யம் இருந்தால் தான் நீங்கள் இருவரும் நினைப்பதும் நல்லபடியாக நடக்கும்.எனவே கவலைபடவோ,மனதை போட்டு குழப்பி கொள்ளவோ வேண்டாம்.மனசை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு நீங்கதானே எல்லாம்... எனவே தைரியமாக இருங்கள் சகோதரரே...நமக்கு யாரும் இல்லையே என்று அடிக்கடி எண்ணி வருந்த வேண்டாம்.சரியா.....?இறைவன் செய்பவை எல்லாம் நன்மைக்கே...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தோழி appufar அவர்களுக்கு எனது வணக்கம். நான் சில மாதம் முன்பு எனது மனைவி இன் தைராய்டு பிரச்சனை பிரச்சனை பற்றி எழுதியதை இம் நினைவாக சொல்லி உள்ளீர்கள் .மிக்க நன்றி தங்கள் ஆலோசனைகளுக்கு ..எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் நல்ல தகவலை பதிவு இடுகிறேன். எங்கோ பிறந்து முகம் அறியா நல்ல உள்ளங்கள் உள்ள அறுசுவை தளத்தின் உறப்பினர் என்ற ஒரே காரணத்திற்காக அன்போடு ஆலோசனைகளை தரும் உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களை பாராட்ட இனி என்னிடம் வார்த்தைகள் இல்லை.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி .சௌமியன்

ஹாய் சகோதரர் செளமியன் அவர்களே கவலை வேண்டாம்.தைரய்ட் இருந்தால் மாதந்திர பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.கருனையுள்ள இறைவன் நல்லதே செய்வான்.தைரய்ட் இருப்பதால் உணவில் கோஸ்.காலிப்பளேவர்.முள்ளங்கி.தவிர்த்து விடுங்கள.

நாடுபவை எல்லாம் நல்லவையானால்
நடப்பவை அனைத்தும் நன்மையாகும்

மேலும் சில பதிவுகள்