வயிற்று வலி please help

எனது மகளுக்கு 18 மாதம் ஆகிறது. 2 நட்களாக மோஷன் போகவில்லை. குழந்தைக்கு வயிற்று வலிக்கிறது ஆனால் மோஷன் போகமுடியவில்லை.மிகவும் அழுகிறால்.please anybody help me..........

ரசீகா,

காய்ந்த திராட்சையை தண்ணில கொத்திக்கவெச்சு, மசிச்சி, அந்த தண்ணிய குடுங்க. சரியாயிடும் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ரசீகா,
இப்போதைக்கு திராட்சை தன்னியும்,கட்டி ஆகாரத்தை தவிர்த்து லூசா ஏதாவது கஞ்சியோ கூழோ கொடுங்க...பழ ஜூஸ் நிறைய கொடுங்க...நல்ல ஓடி விளையாட விடுங்க..இன்னைக்கும் சரியாகாட்டி காத்திருக்காம டாக்டர்ட போயோ இல்ல ஃபார்மசில கேட்டோ இதுக்குன்னு இருக்கற சப்போசிடரி வாங்கி யூஸ் பன்னுங்க இல்லாட்டி நாள் போக போக குழந்தை ரொம்ப கஷ்டப்படும்...நல்ல பப்பாளிப் பழம் கெடச்சா அதை மசிச்சு கொடுங்க..நல்ல பலன் கொடுக்கும்..
தினம் செய்யக் கூடாத வைதியம் இருக்கு ஆனால் இதை பழக்க வேண்டாம்..1/2 ஸ்பூன் விளகென்னையை விழுங்க வெய்யுங்க..கொஞ்ச நேரத்தில் சரியாயிடும்.

Jaleela Kamal

ரசிகா
1. வயிற்றில் சூடுபடுத்திய விளக்கெண்ணை (அ) ஏதாவது ஒரு எண்ணை தடவுங்கள்.
2.இளம் சூடாக வெண்ணிர் குடிகவையுங்கள்.
3. சோம்பை வருத்து ஒன்றும் பாதியுமா திரித்து வெண்ணீரி கொதிக்க வைத்து கொடுங்கள் குடக்கவில்லை என்றால் எப்படியாவது குடிக்கவையுங்கள். உடனே சரியாகும்.
ஜலீலா

Jaleelakamal

குழந்தைகளுக்கு மோஷன் போகவில்லை என்றால்,
1.ஓம வாட்டரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குடிக்க கொடுக்கலாம், வயிற்று வலி சரியாகிவிடும்.
2.இரண்டு சொட்டு விளக்கெண்ணையை வாயில் தொட்டு வைக்கலாம். மோஷன் வந்து விடும். (இது கொடுக்கலாம் தவறில்லை)
3.கொஞ்சம் வெது வெது வென தண்ணீர் கொடுக்கவேண்டும். வயிறை ஃபுல்லாக நிரப்பும் அளவு ஏதாவது சாப்பிட கொடுத்தால் மோஷன் வந்து விடும்.
4.ஆரஞ்ச் ஃப்ரஷ் ஜூஸ் கொடுக்கலாம்.
5.வாழைப்பழம் கொடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்