ஆறு வாரத்தில் ஸ்கேன் பண்ணலாமா?

அன்பு தோழிகளே, நான் 6 வாரம் கற்பம். எனக்கு ஒரு சந்தேகம் ப்ளிஸ் ஹெல்ப் பண்னுங்க, 6 வாரத்தில்(INTERNAL SCAN) இன்டெர்னல் ஸ்கேன் பண்ணலாமா. எனக்கு ஸ்கேன் பண்ணாங்க ஆனால் மனதிற்குள் ஒரு பயம் அதான் கேட்டேன். இதனால் ஏதும் பிரச்சனை ஆகுமா.?

கெளரி, முதன்முதலாக தாயாகப்போகும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :) நான் முதலில் கர்ப்பம் ஆனபோதும் கன்பார்ம் செய்ய 42ம் நாள் தான் டாக்டரிடம் சென்றேன். அன்றே ஸ்கேன் செய்து பார்த்து சொன்னார்கள். மறுபடி ஒரு பத்து நாட்கள் கழித்து ஸ்கேன் பண்ணி கன்பார்ம் பண்ணார்கள். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமான மனநிலையோடு இருங்கள். உங்களை செக்கப் செய்யும் டாக்டரே எப்போது ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் சொல்வார். நல்லதே நடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

dont worry gowri 6 th week la scan pannalam. enakum paninanga no problem pa. be happy and eat well. take care gowri.

avila

நான் முதலில் கர்ப்பம் ஆனபோதும் என்னுடைய டாக்டர் 45ம் நாள் ஸ்கேன் செய்து twins என்று சொன்னார். அதனால் மாதம் ஒரு முறை ஸ்கேன் செய்தேன். என் குழந்தைகள் இருவரும் இப்பொது நன்றாக உள்ளார்கள். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்பனா சொன்னது போல் சந்தோஷமான மனநிலையோடு இருங்கள். டாக்டர் சொல்வதை பின்பற்றவும்.

ஹலோ, கல்பனா அக்கா மிக்க நன்றி. என் சந்தேகம் தீர்ந்து விட்டது

Thank u so much vincy.my doubt was cleared

ஹலோ, அகிலா அக்கா உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

கெளரி, உங்கள் சந்தேகம் தீர்ந்து தெளிவு பெற்றது குறித்து மகிழ்ச்சியே. நீங்கள் என்னை பேர் சொல்லியே அழைக்கலாம். அறுசுவையில் பேரன் பேத்தி எடுத்தவர்களையும் பெயர் சொல்லி தான் அழைப்போம். அது அவர்களுக்கு பிடிக்கவே செய்கிறது. அன்போடும், மரியாதையோடும் பெயர் சொல்லியே அழையுங்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ok sure

மேலும் சில பதிவுகள்