பாட் டிசைன்

தேதி: April 25, 2011

5
Average: 4.6 (13 votes)

 

பானை
சாக் பவுடர்
பெவிக்கால் டிடிஎல்
பெவிக்கால்
கோல்டுநிற மெட்டாலிக் பெயிண்ட்
ஃபேப்பரிக் பெயிண்ட் - கறுப்பு & பேர்ல் நிறம்
ப்ரஷ்
கத்தரிக்கோல்
தேங்காய் எண்ணெய்

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பானை முழுவதும் கறுப்புநிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிடவும்.
2 மேசைக்கரண்டி சாக்பவுடர், ஒரு மேசைக்கரண்டி பெவிக்கால், டிடிஎல் கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைத்துக்கொள்ளவும். முதலில் கரண்டியால் குழைந்து விட்டு பின்னர் கையில் தேங்காய் எண்ணெய் தொட்டு பிசைந்து வைத்து கொள்ளவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்து வைத்துள்ள சாக்பவுடரை சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
பானையின் நடுப்பகுதிக்கீழ் சிறிதளவு பெவிக்கால் வைத்து இந்த சாக்பவுடர் உருண்டையை வைக்கவும்.
அடுத்து அதே அளவு மாவை எடுத்து தட்டையாகி திலகம் போல் செய்துக் கொள்ளவும். இந்த அளவில் மொத்தம் எட்டு திலகம் செய்யவும்.
இப்போது அந்த நடுவட்டத்தை சுற்றி செய்து வைத்துள்ள திலகத்தை இதழ் போல வரிசையாக ஒட்டவும்.
சாக்பவுடர் மாவை மெல்லிய குச்சிப் போல் திரட்டிக் கொள்ளவும்.
அதனை பானையின் கழுத்தை சுற்றி பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். பின்னர் அந்த வட்டத்தை சுற்றி பெவிக்காலால் சின்ன சின்ன வளைவுகள் வரையவும்.
இந்த வளைவுகளின் மேல் குச்சிப்போல் திரட்டிய மாவையும் வளைவு வளைவாக வைத்து சிறிது நேரம் காயவிடவும்.
பின்னர் பூக்களுக்கு கோல்டுநிற மெட்டாலிக் பெயிண்டை அடிக்கவும். வளைவுகளும் பெயிண்ட் செய்யவும். அதன் இடையில் சிறிய முத்துமணி அளவில் மாவை உருட்டி பெவிக்கால் வைத்து ஒட்டி விடவும்.
அவை ஒவ்வொன்றிற்கும் ஃபேர்ல்நிற பெயிண்டை அடிக்கவும். பூக்களின் இடைவெளியில் நெளி போல் வரைந்து சின்ன சின்ன அரும்புகள் வரையவும்.
பாட் டிசைன் ரெடி. விருப்பமான மலர்களை சொருகி அலங்கரிக்கவும்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த பாட் டிசைன் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அசத்திட்டீங்க. சொன்னா நம்ப மாட்டீங்க... இன்னைக்கு டிவில யாரோ பேசிட்டு இருந்தாங்க, அவங்க பின்னாடி இருந்த பூ ஜாடி இது போல் வேலைபாடு உள்ளது... பார்த்ததும் இதை நாம செய்யலாமேன்னு நினைச்சேன்... அதையே நீங்க செய்து காட்டி அசத்திட்டீங்க. ரொம்ப அழகா இருக்கு. சூப்பர். நவீனா நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு பாட் இருக்கு, இதே போல செய்யப் போறேன். ;)

‍- இமா க்றிஸ்

செண்பகா

சூப்பரா இருக்கு. நான் இதே போல் எம்.சீல் வைத்து செய்தேன். வடிவம் சரியாக வரவில்லை. டி.டி.எல் என்பது லிக்விட்டா? இது ஹார்டுவேர் கடைகளில் கிடைக்குமா?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரொம்ப அழகா இருக்கு.. ப்ளாக்ல கோல்டன் கலர் நல்ல காம்பினேஷன்.. நவீனா நலமா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செண்பகா ரொம்ப அழகா இருக்கு.....நான் கூட கிளே என்று தான் நினைத்தேன்.....இதை பார்த்ததும் எனக்கும் செய்து பார்க்கனும்னு ஆசை வருது....கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் செண்பகா உங்க பாட் டிசைன் ரொம்ப அழகா இருக்கு....வாழ்த்துக்கள் செண்பகா.....

முதலில் வந்து வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றி வனிதா. நவீனா நல்லா இருக்கா. யாழினி, குமரன் எப்படி இருக்காங்க? //இன்னைக்கு டிவில யாரோ பேசிட்டு இருந்தாங்க, அவங்க பின்னாடி இருந்த பூ ஜாடி இது போல் வேலைபாடு உள்ளது... பார்த்ததும் இதை நாம செய்யலாமேன்னு நினைச்சேன்... //வேற பாட் பெயிண்ட் செய்து அனுப்புங்க.

ரொம்ப நன்றி அம்மா. //ஒரு பாட் இருக்கு, இதே போல செய்யப் போறேன்// கண்டிப்பா செய்து பாருங்க.

ரொம்ப நன்றி மஞ்சுளா. fevicol DDL லிக்விட்டாதான் இருக்கும். ஹார்டுவேர் கடையில் கிடைக்கும்.

ரொம்ப நன்றி ரம்யா. நவீனா நல்லா இருக்கா.

ரொம்ப நன்றி லாவண்யா. கண்டிப்பா செய்து பாருங்க.

ரொம்ப நன்றி சுமதி.

senbagababu

குழந்தைகள் நலம். //வேற பாட் பெயிண்ட் செய்து அனுப்புங்க.// - ம்ஹூம்... ;) நான் செய்தா உங்க அளவுக்கு அழகா இருக்காது, அதனால் மாடலுக்கு ஒன்னு அழகா இதுவே போதும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

WAY TO THE TOP - EASY FOR SOME, DIFFICULT FOR SOME BUT OPEN FOR ALL