இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. :)

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. :)

என்னை கவர்ந்த கவிதை,...

(சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து)

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

அன்னையை போலொரு தெய்வமில்லை.
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை.
-அன்னையர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

உங்களின் அன்னையர் தின கவிதை அருமை.
//இந்த வாழ்க்கை நிர்பந்தங்கள்தான் வலுக்கட்டாயமாக என் சிறகுகளை பிடுங்கி வெள்ளை அடிக்கின்றன.// உன்மைதான்...

அன்புடன்
THAVAM

தாயே எனக்காக என்று நீ
செய்தவை ஏராளம்
உனக்காக என்று நான்
எதைத்தான் செய்யப்போகிறேன்
என்னதான் செய்தாலும்
உன் கருவரையில் எனை சுமந்ததிற்கீடாகுமா?//

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சில வீட்டு விலங்குகளும்
விளங்கியிருக்கிறது உன் பெயரை

உன் பத்துமாதவயிறின்
உவமை பொருள் இந்த
உலக உருண்டை

உன்னால்மட்டுமெப்படி என்னை வயிறுக்கு
உள்ளேயும் வெளியேயும்
சுமக்க முடிகிறது?

உன் மடியில் வீடு தந்த உனக்கு
நானென்ன ஈடு செய்வது?
ஆனாலும் சொல்கிறேன வாழ்த்துக்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்னையே,
உண்மைகள் உனக்கு தெரியாதது,
உறவுகள் உனக்குப் புரியாதது,
என்று கூறினாய்,ஆகையால்
கருவறயிலேயே நான்
ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்...!

கஷ்டங்கள் உனக்குத் தெரியும்வரை
கருப்பையுள்ளே கண்ணுறங்கென்றாய்...!
கண்ட கனவுகளை எல்லாம்
கருப்பையுள்ளேயே இருட்டடைப்பு செய்யவா....?

உலகைப் பார்க்க பயந்த என்னை,
கருவரையில் ஒளிந்துகொள்ளச் செய்தாய்.....!

என்னை பாதுகாத்து உலகைப் புரியவைத்து,
வெளியனுப்பிய உனக்கு
என்னசெய்வேன் கைமாறாக.....
என்னிடம் கைமாறு எதிர்பார்ப்பவளா நீ...!?

அம்மா.....அம்மா.........
உலகம் உனக்கு புதிதல்ல
ஆனால்,புரியாதது என்றாய்..,

புரியாதது மட்டுமல்ல..,
பூதாகரமானதும்போல என,
பயந்து நடுங்கிய என்னையும்கூட...,
சுமந்து வழியனுபவித்து
பெற்றெடுத்த அன்னையே.......!

பயத்தைப் போக்கி வீரனாக்கும் உன் பேச்சு.....!
தீயவற்றை தூரத்தள்ளி நல்லவனாக்கும் உன் வளர்ப்பு......!

"நல்லன்னை வாங்கிய சத்தியம்
நம் உலகிற்கு ஈன்றது மகாத்மாவை........"

"இன்னும் எத்தனை மகாத்மாக்களோ.......!?
இன்றைய அன்னைகளான நம் வளர்ப்பிள்..........!"

உலகிற்கே அன்னையான நம் அன்னை தெரசா மற்றும் என் அன்னையான சுமதியின் பாதம் வணங்கி "என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் அனைவருக்கும்.........."
(ஸ்பெஷலா என் அம்மாவிற்கும் இந்தக் கவிதை)........

தாய்மையை போற்றி கருத்துக்கள்,கவிதைகள் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்