பட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

பட்டிமன்றம்-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?

இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த திரு கதா கல்பனா அவர்களுக்கு நன்றி.
பட்டிமன்றத்தின் விதிமுறைகள்:
1.மதம் ஜாதிபற்றி பேசுதல் கூடாது.
2..யாரையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ தாக்கி பேசுதல் கூடாது.
3.நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
4.அதிகபட்சம் தமிழில் டைப் செய்யவும்.
5.கண்டிப்பாக இங்கே அரட்டை தடை செய்யப்பட்டுள்ளது.
6.எதிரணியே இல்லாத பட்சத்தில் முடிவு உடன் மற்ற அணிக்கு சாதகமாக அறிவிக்கப்படும்
7.வெற்றி பெற்ற சிறந்த பேட்சாளர் இந்தியாவிற்குள் இருந்தால் என் கவிதை புத்தகம் ஒன்று இலவசமாக அனுப்பி வைக்கப்படும்

8.சிறப்பாக வாதாடும் நபருக்கு வுமன் ஆஃப் பட்டிமன்றம் அல்லது சிறப்பாக வாதாடும் ஆணிற்கு மேன் ஆஃப் பட்டிமன்றம் விருதும் வழங்கப்ப்படும்.
(உபயம்:ஆமினா)

இதோஉங்கள் வாதங்களை தொடருங்கள்.

ஷேக் அண்ணா உங்களை எப்படி பாராட்டுறதுனே தெரியல, கைபேசியிலேயே இவ்வளவு சிறப்பாக பட்டியை நடத்தி வெற்றி கண்டுட்டீங்க சூப்பர் பலத்த கைத்தட்டல் அண்ணா உங்களுக்கு. நான் எதிர்பார்த்த தீர்ப்பு தான் அண்ணா ரொம்ப தெளிவான நடுநிலையான தீர்ப்பு அண்ணா. இந்த பட்டியை ரொம்ப ஸ்வாரஸ்யமா அதிலும் எல்லாருக்கும் ஒரு பட்டத்தை வழங்கி கெளரவிச்சு இருக்கீங்க அண்ணா அது ரொம்ப அருமை என்னையும் மதிச்சு எனக்கும் ஒரு பட்டமா? நன்றி அண்ணா நீங்க வழங்கிய விருதுக்கு. விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்

நடுவர் அவர்களுக்கு வாழ்த்துகள். நான் இந்த பட்டிக்கு சரியாக வர முடியவில்லை. என் பதிவு இரண்டு மட்டுமே நான் இங்கு கொடுத்திருந்தேன். அதிலும் எந்த வாதமும் இல்லை. அப்படியிருக்கும் போது கூட என்னை இங்கு ஒருவாராக பாவித்து எனக்கு சிறந்த எதிரணி உறுப்பினர் விருதினை கொடுத்ததற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக அடுத்த பட்டியில் கலந்துக் கொண்டு உங்களிடமிருந்து சிறந்து பேச்சாளர் விருந்தினை வாங்க நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து உடனே வாருங்கள்.

உங்கள் தீர்ப்பு மிகவும் சரி. நல்ல தீர்ப்பையே கொடுத்திருக்கின்றீர்கள். எது நமக்கு தீர்ப்பாக வரும் என்று தெரிந்திருந்தும் எதிரணியுடன் சண்டை போடுவது மிகவும் ஜாலியாக இருக்கின்றது. உங்கள் தீர்ப்பிற்கு இந்தாங்க ஒரு அழகான பூச்சண்டும் சந்தன மாலையும் எங்கள் அணி சார்ப்பாக உங்களுக்கு அன்போடு அணிவிக்கின்றோம்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

முதலாவது என்னுடைய பாரட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன். அதோடு அழகான ரோஜா பூக்களால் ஆனா பூங்கொத்து பிடிங்க.மீண்டும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....................

ஹாய் ஷேக் அண்ணா சூ................ப்பர் அண்ணா பட்டிய கலக்கிட்டிங்க. நல்ல அழகா தீப்பு சொல்லி இருக்கிங்க.அதிலும் நீங்க ஒவ்வொருவருக்கும் கொடுத்து இருக்கும் பட்டதை பார்க்கும் போது எனக்கு ஆசையா இருக்கு.அண்ணா ;))
இந்த பட்டியின் தலைப்பு பார்த்தயுடனே நான் பேசவேண்டும் என்று நினைத்தேன்.அடுத்து நீங்க நடுவரா இருக்கும் பட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆவலா இருந்தேன்.அடுத்து நீங்க கொடுக்கும் பரிசுக்காயாவது கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது.
இப்படி கலந்து கொள்ள வேண்டும் என்று காரணங்கள் இருந்தாலும் நான் கலந்துகொள்ள முடியாததற்க்கு அதிக காரணம் இருக்கு.

அதில் முக்கியமானது தமிழ் font இல்லாதது. நான் எழுத்தவியில் தான் இப்போது பயன்படுத்துகிரேன். நான் டவுன்லோட் பண்ணி வெச்ச எல்லா சாப்ட்வெரும் டெலிட் ஆயிட்டு
கம்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆயிடுத்து. கண்டிப்பா அடுத்த பட்டியில் கலந்து கொள்கிரேன் அண்ணா.;)

இந்த தலைப்புக்கு நீங்க(ஆண்) நடுவரா இருந்து எங்களுக்கு தீர்ப்பு சொல்லி இருப்பது எங்களுக்கு எல்லையில்லா சந்தோஷம்.

அண்ணா கை குடுங்க. வாழ்த்துக்கள் அண்ணா ஹா ஹா....

உன்னை போல பிறரையும் நேசி.

நடுவர் அவர்களே மிக்க நன்றி.அருமையான(உண்மையான).. தீர்ப்பு.சபாஷ்

சகோ ஷேக், பட்டியை வெற்றிகரமாக நடத்திச் சென்று அற்புதமான தீர்ப்பை தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள். நான் நடுவராக இருந்த சமயத்தில் என்னால் கூட தொடந்து வாதத்திற்கான கருத்துக்களை பதிவிட முடியாமல் போனது. ஆனால் நீங்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற கூற்றை நிரூபித்து செல்போனிலேயே உடனுக்குடன் கலக்கலாக பதிவிட்டு பட்டியை அருமையாக நடத்தி சென்றீர்கள். பட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பட்டங்களை வாரி இறைத்து மகிழ்வித்தீர்கள்.

பட்டியில் எம் அணியிலும், எதிர் அணியிலும் பங்கேற்று வாதாடிய தோழிகளின் வாதங்கள் அனைத்துமே முத்தான முத்துக்கள். பட்டியில் பங்கேற்ற பெரும்பாலான தோழிகள் நெருக்கமான தோழிகள் என்பதால் யாரையும் தனியாக குறிப்பிட்டு பாராட்ட முடியவில்லை. அவர்கள் அனைவருக்குமே வாழ்த்துக்களுடன் பூச்செண்டுகளையும் அளிக்கிறேன் :)

அடுத்த நடுவர் சுகிக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு தங்கை யாழினி.....நன்றி உனது வாழ்த்துகளுக்கு...ஒரு வேளை நீ நடுவராக இருந்தால் இதைவிட சிறப்பாக இருந்திருக்கும் என் நினைக்கிறேன்..உன் அளவுக்கு என்னால முடியாதுப்பா....அடுத்தபட்டில சிறந்த பேச்சாளர் விருது வாங்கானும் சொல்லிபுட்டன் ஆமா...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரேவதி முதலில் உங்களுக்கு என் நன்றி...என்ன ரேவதி உங்களுக்காக இதுகூட செய்யமாட்டேனா என்ன?உங்களுக்காக அடுத்த பட்டிமன்றத்தின் நடுவராக எனக்கு சம்மதமே!ஆனால் பாருங்கள்..அங்கே வரிசையில் நின்று கொண்டிருபவர்களை தெரிகிறதா?அடுத்த பட்டியில் நீங்கள் சிறந்த பேச்சாளராக வர இப்போதே என் வாழ்த்துக்கள் சகோதரி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அய்யோ தேவி கைய விடுங்க பா...கை எலும்பு உடஞ்சி சுக்கு நூறா போய்டுச்சு..ஜிம்மிற்கு போகும் பழக்கம் உண்டா?ஓ..உங்களுக்கு தமிழ் ஃபான்ட் பிராப்ளமா?சாரி... ஆடுத்த பட்டில மிஸ் ஆனிங்கனனா இருக்கு உங்களுக்கு!பயங்கரமா டென்ஸன்...ஆகிவிடுவேன் ஓக்கே...எனிவே ஒரு வார்த்தைனாலும் ஓகோன்னு சொன்னிங்க..வாழ்த்துக்கள் சகோதரி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இனியா நன்றி உங்கள் பாராட்டிற்கு...சரி நீங்க ஏன் தொடர்ந்து வரல?எப்படியும் ஒரு காரணம் வச்சுருப்பிங்க...அடுத்த பட்டியில் சிறப்பாக வாதம் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் சகோதரி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

காதாசிரியர் கல்பனா நன்றி நன்றி நீங்கல் பட்டியில் சிறப்பாக வாதாடியதற்கும்,வாழ்த்தியதற்கும்..எல்லாம் இருக்கட்டும்..உங்கள் கதை என்ன ஆனது மேம்?உங்களுக்கு ஒன்னு தெரியுமா?பட்டி முடிந்த பிறகுதான் கம்ப்யூட்டர் இல்லாதது எவ்வளவு பெரிட டிஸட்வான்டேஜுன்னு.மொபைல என்ன பிரச்சனைனா ..காப்பி பேஸ்ட் பன்ன முடியாது...பன்னலாம் ஆனா கஸ்டம்.....இந்த பட்டிமன்றம் இவளவு சிறப்பா போனதற்கு உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டேன்..ஆனால் இறைவனை மறந்து விட்டேன்..இறைவா! .என்னை மன்னிப்பாக!எல்லாப் புகழும் இறைவனுக்கே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்