மறக்க முடியுமா

மறக்க முடியுமா
அந்த நினைவுகளை?
ஆற்றங்கரையிரங்கி
ஆழம் தவிர்த்து குளிக்கும்போது
அயிரமீனொன்று மர்ம உறுப்பில் கடிக்க
பயத்தில் கரைக்கு
பாய்ந்தோடிய பொழுதுகளையும்
தண்ணீரில் சப்பைகல்லால்
தவளை எறிந்து ரசித்ததையும்
கிளம்பும்போது தெரியாது
பள்ளி நெருங்க நெருங்க
கண்ணீரால் கண்களை
கரைத்த சோகத்தையும்
எப்போது முடியும்
என்று நினைக்கும் சிறைகைதி போல்
பள்ளி பருவத்தில்-வீடு செல்ல
மணியடிக்கும் ஓசைக்காக ஏங்கிய
மாலை பொழுதுகளையும்
மறக்க முடியுமா?
ஒரு மழைக்கால் வேளையில்
கல்மாரி பொழிந்த பிறகு
பாத்திரத்தில்
திருட்டுத்தனமாக மறைத்து-பின்
திறந்து பார்த்து ஏமாந்த நினைவுகளையும்
அந்த வயதிலேயே
ஆசையோடு வேஷ்டி கட்டி
கண்ணாடி முன் ரசித்தபோது
'கலிகாலம்' என அப்பா அம்மா
களிப்புற்று ரசித்த நிமிஷங்களையும்
மறக்க முடியுமா?
ஆக்கர்வைத்து பம்பரம் உடைப்பட்டதால்
வலிப்பு வந்துவிட்டதோ-என எண்ணும்படி
மண்ணில் புரண்டழுது
மண்புழுவாய் துடித்ததையும்
புத்தகத்தின் நடுவே
மையிலிறகை வைத்து
வளர்ந்திருக்கும் என்றென்னி
என்றோ ஒருநாள் திறந்துபார்த்து
ஏமாந்த கதைகளையும்
கண்ணாமூச்சி விளையாட்டில்
அடிக்கடி மாட்டியதால்
வேறுவழியின்றி-கண்பொத்தும்போது
விரல்வழியே பார்த்து
வெற்றிகொண்ட நிமிஷங்களையும்
குச்சிக்கம்பு விளையாடும்போது
பக்கத்துவீட்டு மாமியை
பதம் பார்த்ததால்
விளையாட்டை ஒத்திவைக்க
ஆறு நாட்களுக்கு
ஆணை பிறப்பித்ததையும்
பள்ளி கட்டடிக்க
காச்சல் வந்ததாய் அம்மாவிடம் நடிக்க
நெடுநேரம் வெயிலில்
நின்றதை யாரோ சொல்லி
தூக்கிபோட்டு மிதித்து
தூணில் கட்டிவைத்து
இடுப்பிற்கு கீழே
இஞ்சி மிளாகாயரைத்து அம்மா பூசியதையும்
பஞ்சு மெத்தை, அரசமர நிழல்,
ஏன் ராஜாவின் ஆசனம் என
எத்தனையிருந்தாலும்
அம்மாவின் மடிக்கு ஈடாகாது என்
கண்டறிந்த கனங்களையும்
நேற்றுவரை என்னோடு விளையாடிய
முத்தம்மாள் திடீரென
சடங்கான சங்கதிகேட்டு
சங்கடப்பட்ட வேளையையும்
ஆற்று வெள்ளத்தில்
ஆர்வக்கோளாறில் தூண்டில் போட்டு
மீனுக்குபதில்
பாம்பு வந்ததால்
பதறியோடியதையும்
கடவுளின் தாகம் தீர்க்கமறுத்த
கதைகேட்டு ஓணானை
துரத்திபிடித்து
தூக்கிலிட்டு கொன்றதையும்
திருட்டுத் தனமாக
தென்னைமரம் ஏறி
இரவு பொழுதுகளில் நண்பர்களோடு
இளநீர் குடித்ததையும்
நெடுநேரம் கொக்குபோல் நின்று
நொண்டி விளையாடியதையும்
'லைட்டா லாம்பா'
பாட்டுப் பாடி
பாண்டி விளையாடியதையும்
சாமான் வாங்க கடைக்கு போக
சந்தடி சாக்கில்
கள்ளக் கணக்கெழுதி
களவாடி தின்ற பொழுதினையும்
பேருந்தி பயணம் செய்ய
ஜன்னலோரம் அமர்ந்து
மரங்கள் ஏன் இப்படி ஓடுகிறதென
மடத்தனமாய் சிந்தித்ததையும்
குதிரையேற்ற கனவுடன்
மாட்டின் மேலேறி
தவறி போய்
தலைகீழாய் விழுந்ததையும்
யார் திட்டியோ-அம்மாவிடம்
முளைச்சி மூனு இலை விடலன்னா என்னவென்று
விடைதெரியாமால்
வினாவிய வினாக்களையும்
பம்பு செட்டில்
பாதி நிர்வாணாமாய் குளித்து
யார் வந்ததாலோ ஓடி
முற்புதர் தாண்ட முயற்சித்து
முட்டி உடைத்த ரணங்களையும்
மறக்க நினைத்தும் முடியவில்லை
அப்படி
மறப்பதென்றால்
மரணத்திற்குப் பிறகுதான்!
- ஷேக்

Comments
ஷேக்
ஷேக்
மறக்க முடியாது தான்.. அத்தனையும் வாழ்வில் கண்டு ரசித்து வந்ததை போல எழுதியுள்ளீர்கள். சில வரிகள் மிகவும் கவர்ந்தன. கல்மாரி கான்ஸப்ட் அழகு.. வாழ்த்துக்கள்.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
நன்றி ரம்யா மேடம்...
முதலில் கவிதை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி!
நன்றி ரம்யா மேடம்...
இந்த கவிதைக்கு ஆறிலிருந்து அறுபது வரை என்று தலைப்பு வைத்திருக்கலாம்.இல்லையா!
உங்கள் அன்பான பாராட்டுதலுக்கு நன்றி!
எல்லா புகழும் இறைவனுக்கே!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் அண்ணா....
ஷேக் அண்ணா.... சிறு வயதில் உங்களுக்கு நடந்ததை அப்படியே கவிதையாக்கிட்டீங்களா?..... நல்லாருக்கு.......மேலும் எழுதுங்க..
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
சகோ ரங்கா..ஆமாம் என்று நான்
சகோ ரங்கா..ஆமாம் என்று நான் சொன்னால் வம்பாகிவிடும்..இன்னொருமுறை கவிதை படித்துப் பார்த்தால் உனக்கே புறியும்..சிலவை அனுபவங்கள்...சில நண்பனின் அனுபவங்கள்!
நன்றி பா
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்சார்.
வரிக்கு வரி இளமைக்கால அனுபவங்களின் ரசனைகளை சுவைபட சொல்லி
உள்ள அழகு. அருமை.இந்தக்கவிதையே வரிக்குவரி ஒரு பெண் எழுதினால்
எப்படி வந்திருக்கும் என்று யோசிக்கவைத்த கவிதை.
ஷேக்
இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. காட்சிகள் கண்முன்னாடி வந்து ரசிக்க வைத்தது. இக்கவிதைப் போலவே மேலும் பல கவிதை எழுதி எங்களுக்கு படிக்க அனுப்புங்கள். வாழ்த்துக்கள். பிற்காலத்துல கவிதை தொகுப்பு புத்தகம் அடிக்கும் போது இக்கவிதையை சேர்க்க மறக்காதிங்க.
தலைப்பு எல்லாம் மாத்தாதிங்க இதுதான் பொருத்தம்.
Don't Worry Be Happy.
கவிதை அழகு....ஷேக்
கவிதை அழகு....ஷேக்
அத்தனையும் வாழ்வில் கண்டு ரசித்து வந்ததை போல எழுதியுள்ளீர்கள்.
இதைத்தவிர எனக்கு சொல்ல ஏதுமில்லை..............
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நன்றி கோமு மெடம் இளமைகாலம்
நன்றி கோமு மெடம்
இளமைகாலம் என்பதைவிட சிறுபருவம் என்று சொன்னால் சரியாக இருக்கும்...
ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் ஒரு பெண் எழுதினாலும் நன்றாகத்தான் இருக்கும்..ஆனால் அந்த அனுபவங்களில் எனக்கு அனுபவம் இல்லையே!மனைவியிடம்தான் கேட்டு எழுத வேண்டும்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
நன்றி ஜயலக்ஷ்மி
நன்றி ஜயலக்ஷ்மி சகோதரி!
பிற்காலத்துல நான் புத்தகம் வெளியிடுவதாய் யார் சொன்னது?
ஏற்கபவே அப்படி ஒரு முயற்சி எடுத்து தோல்வியாகி விட்டது...
சரி புத்தகம் வெளியிட நான் ரெடி..வாங்க நீ தயாரா?
கீப் ரீடிங் மை ஸ்டோரிஸ் அன்ட் போயம்ஸ்..தேங் யூ
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
நன்றி யோகராணி அக்கா
நிச்சயமாய் என் வாழ்வில் நிகழ்ந்தவை சில...
நீங்கள் கவிதை அழகு என்று சொன்னதும் எனக்கு கண்ணுக்கு மை அழகு பாடல்தான் நினைவுக்கு வருகிறது!
அட என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள்?ஏதும் ரெண்டு வார்த்தைகள் சொல்லுங்களேன் அக்கா!
நன்றி அக்கா உங்கள் பாராட்டிற்கு!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
இரண்டு வார்த்தைகள் என்ன
இரண்டு வார்த்தைகள் என்ன இரண்டு வரிகளே சொல்லி விருகின்றேன் ஷேக் தம்பி.
"காற்றைக் கையில் பிடித்து அதில் சிற்பங்கள் செய்துகொடுப்பது போன்றது
மனவெளி எண்ணப் பின்னல்களை வார்த்தைகளாக்கி வரிகளாக்கிக் கோர்ப்பது..." உங்கள் கவிதைகள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மறக்க முடியுமா
நல்ல கவிதை வாழ்த்துக்கள்
இதுக்கு இந்த தலைப்பு தான் சரியாக இருக்கு. ஆறிலிருந்து அருபது வரை என்றால் எல்லா நிலைகளையும் விவரித்தால் மட்டுமே சாத்தியம் சரிதானே? :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஷேக்
ஷேக் மறக்க முடியுமா கவிதை, உங்க நினைவுகளில் ஓடும் எண்ணங்களை கவிதையா எழுதி அனுப்பி வைச்சிட்டீங்களா. நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
கவிதை ரொம்ப நல்லாருக்கு
கவிதை ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்
-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤
மறக்க முடியுமா - ஷேக்
எழுதியிருப்பது கவிதையா ?
அல்லது கால சக்கரமா ?
நிகழ்காலத்தில் இருந்த
என்னை
கடந்தகாலத்திற்கு
இழுத்து செல்கிறதே !!!
நினைத்தாலே இனிக்கும்
கடந்துபோன வாழ்க்கையில்
நாம் இழந்துவிட்ட காலம் !!!
அழகு !!!
வாழ்த்துக்கள் ஷேக்
என்றும் அன்புடன்
முத்தமிழன்