அன்பு தோழிகளே! பார்டிக்கு சமைக்க உதவி கிடைக்குமா !!!

நான் ஜெர்மனியில் இருக்கேன்.அடுத்த வாரம் என் பொன்னு சஷ்டிகாவுக்கு பிறந்த நாள்.என் கணவர் பார்டிக்கு கலிக்ஸ் பேமிலி,பேச்சுலர்ஸ் நு 40 பெரை கூப்பிடனும் ப்லான் போட்டு இருக்கார்.பட் பார்டிக்கு என்ன ஸ்பெஷலா சமைக்கரதுனு ஒரெ குழப்பம்.அதனால உங்ககிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு தோனிச்சு.ஸ்னாக்ச்,மெயின் டிஸ்
ரென்டுக்கும் ஐடியா குடுங்கப்பாஅ..ப்லீஸ்

WITH LOVE
PRIYANANDA.

இந்த லிங்க்கில் பார்ட்டி மெனு இட்ம்ஸ் கொடுத்து இருக்காங்க பா....... உங்களுக்கு யூஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன்.......

http://www.arusuvai.com/tamil/node/7757
http://www.arusuvai.com/tamil/node/13917

உங்க தலைப்பில் எதற்கான உதவி என்பதை குறிப்பிட்டால், மற்ற தோழியர்கள் பதில் சொல்ல உதவியாக இருக்கும்....

நானும் பார்தேன் தீப்ஸ் பட் உங்க அனுபவம் கிடைச்சா ஹெல்ப் புல்லா இருக்கும்.உங்க பார்டி அனுபவத்த ஷேர் பன்னுங்கப்பா.

ஹி ஹி ஹி....... என்னய்யா கேட்டிங்க????....... நான் அதை எப்படி சொல்லுவேன்.......
வந்து...... வந்து...... நா இது வரைக்கும் யார்க்கும் பார்ட்டி கொடுத்தது இல்லங்க......
என்னையும் மதிச்சு கேட்டு இருக்கீங்க... அதனால சொல்றேன்....

என் பையன் முதல் பிறந்த நாளுக்கு சமையலக்கு ஆள் வைத்து சமைத்தோம்....
ரொம்ப சிம்பிள் ஆனா ஐடம்ஸ் தான்....
சிக்கன் பிரியாணி, ஆனியன் ரைத்தா, கத்திரிக்காய் கிரேவி, பைன் ஆப்பிள் கேசரி, வெனிலா ஐஸ் கிரீம்....

எங்க சகல கலாவள்ளி வனிதாவை கேட்டிங்கன்னா பெரிய்ய லிஸ்ட் கொடுப்பாங்க...... அவங்க தான் இதில் கிங் குய்ன் எல்லாம்....

அட பாவி அதனால தான் லிங்க் கொடுதியா?ஒகெ வனிதா கிட்ட கேப்போம்!

ஹலோ வனி இங்கே வாங்கலேன்

வனிதா எனக்கு உங்க உதவி வேனும்.

என்னையா வளை போட்டு தேடுறீங்க??? இங்க பவர் கட்... பிள்ளைகள் ஆட்டம்.. சொல்லுங்க.. பார்ட்டிக்கு உங்க ப்ளான் என்ன? சைவமா அசைவமா? எத்தனை வகை? ஒரே கோர்ஸ்’அ இல்ல 3 கோர்ஸ்’அ? லன்சா டின்னரா? என்ன என்ன அசைவம் சமைப்பீங்க? அதாவது இறால், சிக்கன், மட்டன் இப்படி... வருபவர்கள் எந்த ஊர் மக்கள்? நம்ம இந்தியர்களா? வெளிநாட்டு ஆட்களா? காரமெல்லாம் எப்படி? எல்லாம் டீடைல்ஸ் சொல்லுங்க, ஒரு மெனு போடுவோம். :)

நான் வழக்கமா பிறந்த நாள் எல்லாம் பார்ட்டி வைக்குறது இல்லை... அன்று முழுக்க ப்ரைவசி... மற்ற பார்ட்டிகள் மாதத்தில் ஒன்னாவது உண்டு. மெனு வரும் நபர்களை பொறுத்தது. அதுக்கு தான் மேலே அத்தனை கேள்வி கேட்டேன். முதல் பார்ட்டிகளில் இதெல்லாம் தெரியாம சம சொதப்பு சொதப்பிருக்கேன். இப்போ வரும் ஆட்களுக்கு என்ன பிடிக்கும், என்ன மாதிரி உணவு வகை சாப்பிடுறவங்கன்னு தெரிஞ்சு சமைக்க ஆரம்பிச்சதுல, பார்ட்டீஸ் சுப்பரா போகுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடா வந்துட்டீங்களா.ஒன்லி சைவம் தாம்பா.ஸ்னாக்ஸ் அன்ட் லைட் டின்னர்.ஒன்லி indians.ஐடியா குடுங்கப்பா.நா உங்கலுக்கு பார்சல் கூட அணுப்பரென்.

சைவம் மட்டுமா...

ஸ்னாக்ஸ்... சமோசா, வடை(கீரை, மசால் வடை, உளுந்த வடை... உங்க விருப்பம்), பக்கோடா, சிப்ஸ், பஜ்ஜி, இல்லன்னா நார்த் இந்தியன் சாட் ஐடம்ஸ், இது போல் சூஸ் பண்ணுங்க. கூட சட்னி தேங்காய் சட்னி, க்ரீன் சட்னி, இனிப்பு சட்னி...
இது கூட எதாவது ஜூஸ்.

லைட் டின்னர்...

எதாவது ஒரு வகை ரைஸ்
ரொட்டி வகை ஒன்னு
ஃப்ரை வகை ஒன்னு
கிச்சடி - ரவை, சேமியா எதாவது ஒரு வகை
ரைஸ் வகை பிரியாணியாக இருந்தா கூட ஒரு ரைத்தா
மிக்ஸ்டு வெஜிடபில் சாலட்
ரொட்டி வகைக்கு ஒரு சைட் டிஷ் - க்ரேவி
பிரியாணி இல்லாம வேறூ வகை ரைஸ்ன்னா கூட எதாவது ஃப்ரையம்ஸ்

கடைசியாக எதாவது ஒரு வகை ஸ்வீட், பழங்கள் சாலட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னச்சு?? உதவுச்சா மெனு?? இல்ல குழப்பிட்டனா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்