அமானுஷ்ய அனுபவங்கள்

தோழிகளே, தனி இழை தொடங்கி ரொம்ம்ம்ம்ப நாளாச்சு... அதை நினைச்சு மனசுக்கு ரொம்பவே வருத்தமா போச்சு... அந்த வருத்தம் போக்கவே இந்த இழை... எதுக்குன்னு கேக்கறீங்களா? நீங்க கேக்க மாட்டீங்க நானே சொல்றேன்... நாம் கடந்து வந்த வாழ்க்கையில் ஆங்காங்கே சில அமானுஷ்ய நிகழ்ச்சிகளை சந்தித்திருப்போம். அல்லது மற்றவர் அனுபவங்களை கேள்விபட்டிருப்போம். அது போன்று நீங்கள் சந்தித்த அனுபவங்கள் அல்லது கேட்டறிந்த நிகழ்ச்சிகள் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் கொஞ்சம் நடுநடுங்கி போறோமே... என்ன தோழிகளே நான் சொல்றது? என்ன எல்லாரும் பயப்பட ரெடியா?

தோழிகளே, நம் தோழிகள் இந்த அளவில் ஊக்கத்தோடு பதிவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அறுசுவையில் சமீபகாலமாக கேட்ட கேள்வியையே கேட்டு இழை தொடங்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் அறுசுவைக்கு வழக்கமாக வரும் பழைய தோழிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பல தோழிகள் அறுசுவைக்கு வராததன் காரணமும் இதுவே. அதற்காக இந்த இழை ஒன்று தான் சரியான தீர்வு என்று நான் சொல்ல மாட்டேன். இது போல வித்தியாசமாக இழைகளை தொடங்கினால் பழைய மற்றும் புது தோழிகளின் ஆர்வமுடன் பார்வையிட்டு அடிக்கடி வருவார்கள் என்று நம்புகிறேன். அதன் அடிப்படையில் தான் இந்த இழை தொடங்க வேண்டியதாகி விட்டது. நீங்கள் மன்றத்தில் தேடிப்பார்த்தால் இதற்கு முன்பு இது போன்ற ஒரு இழை தொடங்கப்பட்டே இராது.

இதில் அனைவரும் கண்டிப்பாக பதிவிட்டே ஆக வேண்டும் என்றோ கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்றோ நான் யாரையும் வற்புறுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்களும், மனம் திடம் உள்ளவர்களும் வந்து படித்து அவர்களின் அனுபவங்களையும் தாராளமாக பதிவிட்டு போகலாம். நம் தோழிகள் சொல்வதை போல,அவரவர்க்கு வேண்டியதை அவரவர் எடுத்து போகட்டும் அதை விடுத்து, இது இங்கிருந்தால் அனைத்து பெண்களுக்கும், கர்ப்பிணி/மனதிடம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் எப்படி? அவ்வாறு நினைப்பவர்கள் படிக்காமல் தவிக்கலாமே. அறுசுவைக்கு வருபவர்கள் அத்துணை பேரும் பலவீன இதயம் கொண்டவர்கள் என்று நினைக்க முடியாது.

இந்த இழையை மேலும் தொடர உற்சாகமளித்த நம் அனைத்து அறுசுவை தோழிகளுக்கும், ஊக்கமளித்த அட்மின் அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :) பிறகென்ன வாங்க தோழிகளே எல்லாரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குவோம் :))

கல்ப்ஸ் நான் கேட்ட கதையை சொல்றேன் பா :(

எங்க ஊர்ல (அம்மா வீடு)நடந்தது 5 இல்ல 6 வருசத்துக்கு முன்னாடி பக்கத்து வீட்டில்(எங்க வீட்டுக்கு நேர் எதிர் வீடு) ஒரு அண்ணா மருந்து குடிச்சிட்டு இறந்துட்டாங்க காலயாணம் ஆகாத பையன் நல்ல பையன் பா.

ஒரு நாள் காலையில என் அம்மா திண்ணையில் நின்னாங்களாம் அப்ப அந்த அண்ணா அவங்க வீட்டு தின்னையில் உக்காந்து என் அம்மாவ பாத்துக்கிட்டே உக்காந்து இருந்துச்சாம் கொஞ்ச நேரத்துல பாத்தா வயலுக்கு போய் மருந்துகுடிச்சிட்டு செத்துப்போய்ட்டான்னு எல்லோரும் ஓடி பாத்துருக்காங்க இது நடந்தது 5 இல்ல 6 வருசத்துக்கு முன்னாடி. :(
அந்த அண்ணா எங்க ஊர்ல்யே இருந்தது இல்ல சின்னவயசு இருந்தே அவங்க அத்தை வீட்டுல இருந்துதான் படிச்சாங்க அப்பப்ப வந்துட்டு போவாங்க,ஊர்ல நிறைய பேருக்கு அந்த அண்ணாவ தெரியாதுன்னு கூட சொல்லலாம் :(

இப்ப ஒரு மாசத்துக்கு முன்னாடி என்ன நடந்துருக்குன்னா எதிரி வீட்டில் இருக்கும் ஒரு அண்ணிக்கு (அவங்க கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க) பேய் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களாம் ஏதேதோ பன்னுச்சாம் அவங்களுக்கு சரின்னு பேய் ஓட்டனும்னு ஒருத்தரை அழைத்து வந்துருக்காங்க

அவர் வந்து வேப்பிலையால அடிச்சு நீ யாருன்னு சொல்லு சொல்லுன்னு விடாம கேட்டுருக்காங்க எந்த பதிலும் இல்லயாம் திரும்பவும் பேய் ஓட்டரவர் கேட்டாராம் நீ எந்த நாதியத்த பயன்னு சொல்லுடான்னு கேட்டாராம் உடனே அந்த பொண்ணு ஒரே அழுகையாம் ஆனால் குரல் மட்டும் ஆன் குரலில் அழுதுச்சாம்.

உடனே சொன்னுச்சாம் நான் ஒன்னும் நாதியத்தவன் இல்ல சுத்தியிலும் (சுற்றிலும் அக்கம் பக்கத்தவர்கள் அதில் என் அம்மாவும் இருந்தாங்கலாம் வேடிக்கை பார்க்க )என் சொந்தக்காரங்களாம் இருக்காங்க என்னை போய் இப்படி சொல்லிட்டியேன்னு தேம்பி தேம்பி அழுதுச்சாம் :( சுத்தி இருந்தவங்களுக்கே அழுகை வந்துடுச்சாம் அது அழுதது :((

சரி நீ யாருன்னு சொல்லுன்னு ரொம்ப அடிச்சு கேட்டாங்களா உடனே நான் இந்த ஊருக்கு விருந்தாழியாதான் வருவேன் என்னை யாருக்கும் தெரியாதுன்னு சொல்லுச்சாம்

உன் பேர் என்னன்னு கேக்கவும் அந்த அண்ணா பேரை சொல்லிருக்கு நான் தெரியாத்தனமா இப்படி பன்னிட்டேன் நான் சாக போகும்போது கூட எதிர் வீட்டு சின்னம்மாவ( என் அம்மாவ) பாத்துட்டுதான் போனேன்ன்னு சொல்லி அழுதுச்சாம் என்னை யாருமே நினைக்கல மறந்துட்டீங்க அதான் இந்த அண்ணி கொல்லைக்கு வந்தப்ப என் காத்து பட்டுடுச்சி அப்படின்னு சொல்லி நான் ஒன்னும் பன்னமாட்டேன் பயப்படாதீங்க எனக்கு ஒரு பேண்ட் & சட்டை எடுத்து ஆற்றில் விடுங்கன்னு கேட்டுச்சாம் பா :((

இது என் அம்மா சொல்லும்போது எனக்கு செம ஆச்சர்யமா இருந்துது பா பாவமாவும் இருந்துது அந்த அண்ணாவ நினைத்து :((

அன்னிக்கு முழுக்க அந்த பையனை பறிகொடுத்தவங்க வீட்டில் எல்லோரும் அழுதுட்டே இருந்தாங்களாம் :((

இதுமாதிரி மத்தவங்க சொல்லும்போது நம்பினதில்லை பா ஆனால் என் அம்மாவே நேரில் பாத்து அத்தனை பேரும் அழுதுட்டோம்னு சொல்லும்போது எப்படி நம்பாம இருக்கமுடியும் :((

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ்..
இப்படி ஒரு இழையை ஆரம்பிக்கனும்ன்னு நா ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன்.... என் தோழி நீங்களே ஆரம்பிச்சுடீங்க.... எனக்கு ரொம்ப சந்தோசம்.... ஏன்னா எனக்கு இந்த மாதிரி அமானுஷ்ய அனுபவங்கள் நிறைய இருக்கு......

நா நேரடியா அனுபவிச்சு மிகவும் பயந்த நிகழ்ச்சி...... என் பிரசவத்திற்கு பிறகு, சிசேரியன் என்பதால் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்..... அந்த மருத்துவமனை பகலில் நிறைந்த ஆள் நடமாட்டத்துடன் எப்பொழுதும் ஜே ஜே என்று இருக்கும்.... ஆனால் இரவில் அதற்கு நேர் எதிர்......

சற்று இருட்ட தொடங்கியது அங்கு தானாக ஒரு அமானுஷ்யம் ஆக்ரமிக்க தொடங்கி விடும்...... இரவில் எப்பொழுதும் நான் அட்மிட் ஆகி இருந்த ரூம்க்கு வெளியில் உள்ள வராண்டாவில் ஜல் ஜல் என்ற சத்தம் அடிக்கடி கேட்டு கொண்டே இருக்கும்......

குழந்தை பிறந்து மூன்றாவது நாள் நள்ளிரவு நான் டாய்லெட் உபயோகிப்பதற்காக என் அம்மாவை எழுப்பி குழந்தையை பார்த்துக்கொள்ளும் படி சொல்லி விட்டு... அந்த வராண்டாவில் கடைசியில் இருக்கும் டாய்லெட் நோக்கி மெதுவாக நடந்து சென்றுக் கொண்டிருந்தேன்..... தூரத்தில் அந்த ஜல் ஜல் ஒலி கேட்க தொடங்கியது.....

இவ்வாறு இரவில் ஒலி எழுப்புவது ஒரு வகை பூச்சு என்று எங்கோ படித்த ஞாபகம்.... அதனால் அது பூச்சியின் சத்தம் தான் என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டு டாய்லெட்டினுள் சென்றேன்.... இப்போது அந்த ஜல் ஜல் ஒலி மிக தெளிவாக கேட்க தொடங்கி இருந்தது...... உள்ளுக்குள் பயம் பரவினாலும், பயம் தான் அறிவின் எதிரி என்று அந்த சிந்தனையை உதறி அங்கிருந்து என் ரூமிற்கு திரும்பினேன்......

ரூம் வாசலில் என் அம்மா மிக பதற்றமாக காத்துக் கொண்டிருந்தார்...... நா என் அம்மாவை பார்த்து ஏனம்மா இப்படி வெளிய நிக்குற என்றேன்.....
அவர், நீ போய் நேரம் ஆகிடுச்சு அதான்...
சரி உள்ளே வா என்று கதவை அடைத்து விட்டார்....
நான் கட்டிலில் சென்று படுத்து, நடக்க இருக்கும் ஆபத்தை அறியாமல் சிறிது நேரத்தில் உறங்கி விட்டேன்.....

உறங்கிய சிறிது நேரத்தில் எனக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது..... நான் சுவாசிப்பதை யாரோ தடுப்பது போல் மூச்சு விட திணறிக் கொண்டிருந்தேன்..... என் மீது யாரோ படுத்து கொண்டிருப்பது போல் என் உடல் முழுவதும் ஒரு அழுத்தம்...... என்னால் நகர முடியவில்லை உதவி என்று குரல் எழுப்ப முடியவில்லை அப்படி ஒரு ஆக்கிரமிப்பில் சிக்கிக் கொண்டிருந்தேன்.....

சிறிது நேர முயற்சியில் என்னால் கையை அசைக்க முடிந்தது..... என் கையை உயர்த்தி காற்றில் துளாவியது தான் தாமதம்....... ஆயிரம் வாட்ஸ் கரண்ட் ஷாக் அடித்தது போல் ஒரு அதிர்ச்சி...... என் கையில் தட்டு பட்டது ஒரு வாயிற்று பகுதி....... பொசு பொசுவென்ற ரோமத்துடன்..... ஐய்யோ...... நான் அருவருப்பில் நடுங்கி விட்டேன்...... என் காதில் ஒரு அமானுஷ சிரிப்பொலி கேட்க தொடங்கியது.....

சிரிப்பு சத்தம் காதில் கேட்டவுடன் நான் காண்பது கனவு இல்லை என்பதை என் மூளை உணர்த்தியது..... சிக்கி இருக்கும் ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து விடுபட கந்த சஷ்டி கவசம் மனதில் சொல்ல தொடங்கினேன்.... சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே என் மேல் அழுத்தும் பாரத்தை முழுசக்தியுடன் தள்ளிக் கொண்டு எழுந்து அமர்ந்தேன்.....

நான் எழும் போது எழுப்பிய கூச்சலில் என் அம்மா தூக்கத்தில் இருந்து முழித்து வேகமா லைட்டை போட்டார்.....
வெளிச்சத்தில் நான் முதலில் தேடியது என் குழந்தையைதான்... அவன் அமைதியாக அம்மாவின் படுக்கையில் உறங்கி கொண்டிருந்தான்..... அப்பா..... என்ற நிம்மதி மூச்சோடு என் அம்மாவிடம் நடந்ததை கூறினேன்..... இதை கேட்டவுடன் அம்மா பயத்தில் உறைந்து விட்டார்......

பிறகு நான் உறங்குவதற்கு முன் நடந்த நிகழ்ச்சியை விவரித்தார்..... அது எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.......

அதிர்ச்சிகள் தொடரும்..........

அன்புள்ள கல்பனா.. மற்றும் தோழிகளே... என்னுடைய அனுபவத்தைக் கேளுங்கள்.

இது நடந்தது 12... 13 வருஷத்திற்கு முன். எங்க பெரியம்மா ஒரு ஃபிளாட்ஸில் முதல் மாடியில் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு நேர் மேலே 2வது மாடியில் எங்க சித்தி குடியிருந்தார்கள். பெரியம்மா வீட்டில் இரவில் அடிக்கடி ஏதோ சத்தம் கேட்கும். சில சமயம் கொலுசு சத்தம், சில சமயம் யாரோ நடப்பது போல, சில சமயம் பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்கும். சில சமயம் நிஜமாகவே பாத்ரூமில் தண்ணீர் பைப் திறந்து பக்கெட்டில் தண்ணீர் போய்க்கொண்டிருக்கும். பெரியப்பா போய் ஆஃப் செய்வார்.

ஒரு தடவை பெரியம்மா பசங்க ஹாலில் உட்கார்ந்திருந்த போது பால்கனியில் (ஹாலில் உள்ளது) பெரியம்மா நடந்து போனார்களாம். ஆனால் சிறிது நேரத்தில், வேறு அறையிலிருந்து வெளியே வந்தார்களாம். அவரைக் கேட்டதற்கு, 'நான் இங்கே தானே இருந்தேன். இப்போ தானே வெளியில வரேன்!' என்றாராம். (அப்போ பால்கனியில் நடந்து போனது???!!!)

அதை விட, ஒரு நாள் இரவு (11 மணிக்குமேல்) எங்க பெரியம்மா மகன், மாமா மகன், அவர்களுடைய 4 நண்பர்கள் (மொத்தம் 6 பேர்) மொட்டை மாடியில் மிதமான விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுடைய நிழல் எதிர் பக்கத்தில் விழுந்திருக்கிறது. (அதாவது அவர்கள் பார்க்கும்வண்ணம்.) அப்போது, அவர்களுள் ஒருவன், பேசிக்கொண்டே யதேச்சையாக நிழல்களை எண்ணியிருக்கிறான். 7 உருவங்கள் இருந்திருக்கிறது. அவர்களையே எண்ணும்போது 6 பேர் தான் இருந்திருக்கிறார்கள். இதை அவன் அவர்களிடம் சொன்ன போது அவனை கின்டலடித்திருக்கிறார்கள். பிறகு அவர்களே மீண்டும் எண்ணிப் பார்த்தபோது.... எடு ஜூட்...! வீடு வந்து அடங்கியிருக்கிறார்கள்.

இது மாதிரியே சில மாதங்கள் கழிந்தது. திடீரென பெரியம்மாவுக்கு மைல்ட் அட்டாக் வந்தது. பிறகு பெரியம்மா மகள் எதைப் பார்த்தாலும் பயந்து யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தாள். அதனால் அவர்கள் மேலே சித்தி வீட்டில் இரவு படுத்துக் கொண்டார்கள். அப்போதுதான் அவர்கள், இந்த வீட்டில் ஏதோ தீய சக்தி இருக்கிறது என்று நம்பினார்கள். அதுவரை, பேயாவது, பிசாசாவது, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றிருந்தார்கள்.

அந்த சமயத்தில் தான் நான் விடுமுறைக்காக பெரியம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன். முக்கால்வாசி மேலே சித்தி வீட்டில் தான் அனைவரும் இருப்போம். கீழே பெரியம்மா வீடு பூட்டித்தான் இருக்கும். மாலை மட்டும் யாராவது சென்று விளக்கு ஏற்றி வைத்து சிறிது நேரம் திறந்து வைத்துவிட்டு பிறகு மீண்டும் பூட்டி விடுவார்கள். அன்று மாலை நானும் சித்தி மகளும் விளக்கேற்ற கீழே சாவியுடன் சென்றோம். ஆனால் நாங்கள் சென்றபோது வீடு திறந்து இருந்தது. அதற்கு சற்று முன் தான் சித்தப்பா வெளியே கிளம்பி போனார். சரி, அவர்தான் திறந்திருப்பார் என்று எண்ணி நானும் அவளும் தைரியமாக (பயத்தோட:)) உள்ளே சென்றோம். ஆனால் யாரும் இல்லை. சித்தப்பா பூட்ட மறந்திருப்பார் என்று நினைத்து, விளக்கு ஏற்றி விட்டு மேலே சென்று விஷயத்தை சொன்னோம்.

அதன் பின்....

தொடரும்....

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

hello friends...

அட போங்க பா 2 கதை read பன்னதுக்கஎ எனக்கு பயமா இருக்கு நான் வரல பா சாமி.....

அன்புடன் அபி

தீபு என்னப்பா நீங்களே அனுப்பவிச்சதா அச்சச்சோ கேட்கவே பயமா இருக்குப்பா அந்த நேரம் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் :((

ஆர்த்தி உங்க கதையல்ல நிஜம் அதைவிட பயமா இருக்குப்பா..

ஆனால் ரெண்டு பேரும் இப்படி தொடரும் போட்டுட்டு போய்ட்டீங்களே இது நியாயமா??? சீக்கிரமா வந்து சொல்லுங்கப்பா நான் காத்துக்கொண்டு இருக்கேன்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்பனா... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான இழையை ஆரம்பித்துள்ளீர்கள்.அருசுவையில் திகில் சுவையையும் சேர்த்தாச்சு............ வாழ்த்துக்கள்.

ஸ்வர்ணா...தீபா...ஆர்த்தி...
ஹோ................படிக்கவே பயமா இருக்கு. பேய் படத்தை கூட ரொம்ப தைரியமா என் ரெண்டு கையால முகத்தை மூடிகிட்டு விரல் இடுக்கு வழியா தான் பார்ப்பேன். உங்கள் அனுபவங்கள் அனைத்தும் இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் படிக்கிற மாதிரி த்ரில்லிங்கா இருக்கு... திகில்களை தொடருங்கள்.... காத்திருக்கிறேன்....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஒரே horror and thriller சப்ஜக்ட்டா இருக்கே!!! ;( எனக்கு ரொம்ப பயம்... துக்கம் கூட வராது. ஒரு பதிவை கூட படிக்கவே இல்லை மன்னிச்சுடுங்கோ. நான் பார்க்க தாங்க தைரியம்!!! ரொம்ப பயந்தவ பாவம்!!! வனிதா வந்து பதிவு போடலன்னு கோவிச்சுக்காதீங்க யாரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு பா இந்த டாபிக்...நான் உண்மையா சொல்லவா அறுசுவையில் எந்த ஒரு இலையும் இந்த நான்கு வருடத்தில் இவ்ளோ ஒரு இன்ட்ரஸ்ட் டாக படித்ததே இல்லை இலையை ஆரம்பித்த கல்பனாவிற்கு வாழ்த்துக்கள்... எனக்கும் இதுபோல நெறைய அனுபவம் இருக்கு சொல்றேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சுவா, பயம் கலந்த சந்தோஷம் பா. முதல் பதிவை நீங்களே சுபம் போட்டு தொடங்கி வச்சிருக்கீங்க. அது உண்மையா பொய்யான்னு தெரியல. அல்ப ஆயுசுல சாகுறவங்க இப்படிதான் ஆசை அடங்காம அலைவாங்களாம். ஏறக்குறைய நீங்க சொன்ன மாதிரி தான் எங்க பக்கத்து வீட்ல ஒரு அக்காவும் தற்கொலை பண்ணிட்டு செத்து போனாங்க. காலைல வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு, தோட்டம் எல்லாம் பெருக்கி, பின்னாடி வந்து உட்கார்ந்து எங்க வீட்டையே பார்த்துட்டு இருந்தாங்க. அப்ப நான் கிணத்துல தண்ணி எடுத்துட்டு இருந்தேன். அப்புறம் என் வேலைய முடிச்சுட்டு ஆபிஸ் போய்ட்டேன். போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என் தங்கை போன் பண்ணி சொல்றா, அந்தக்கா தூக்கு போட்டுட்டு செத்து போய்ட்டாங்கன்னு.. எப்படி இருக்கும்? காலைல பார்த்தேன். கேக்கவே ரொம்ப கஷ்டமா போச்சு. நான் சின்ன பொண்ணா இருக்கும் போது அவங்க வீட்லயே தான் இருப்பேன். எனக்கு தலை பின்னி, பூ வச்சி எல்லாம் அழகு பார்ப்பாங்க அவங்க. மனசுக்கு ரொம்ம்ம்ப வருத்தமா போச்சு. உடனே அரை நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா இறந்து போன அந்தக்காவோட முகத்தை ஒருமுறை கூட போய் பார்க்கல.. அவங்க ரொம்ப நல்லவங்க. யாரையும் பயமுறுத்த வேணாம்னு ஆவியா யார் கண்லயுமே படல.

//உடனே சொன்னுச்சாம் நான் ஒன்னும் நாதியத்தவன் இல்ல சுத்தியிலும் (சுற்றிலும் அக்கம் பக்கத்தவர்கள் அதில் என் அம்மாவும் இருந்தாங்கலாம் வேடிக்கை பார்க்க )என் சொந்தக்காரங்களாம் இருக்காங்க என்னை போய் இப்படி சொல்லிட்டியேன்னு தேம்பி தேம்பி அழுதுச்சாம் :( சுத்தி இருந்தவங்களுக்கே அழுகை வந்துடுச்சாம் அது அழுதது :((//

சுவா, நீங்க சொல்லும் போது எனக்கே அழுகை வருதுப்பா :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தீபு, உன் அனுபவம் உண்மையாவே பயம்மா தான் இருக்கு பா. நீ விவரிச்ச விதம் அருமையா இருந்தது தீப்ஸ். இந்த ஜில் ஜில் சவுண்டு எங்க வீட்ல எப்பவுமே கேக்கும் பா. தீடீர்னு அந்த சவுண்டு கூடும், திடீர்னு குறையும். இன்னைக்கு வரைக்கும் அது என்ன சவுண்டுன்னு ஆராய்ச்சில எல்லாம் நான் இறங்கினதில்ல. அதுக்கு தில்லும் இல்ல தீப்ஸ்.

நீ சொன்ன அனுபவம் எனக்கும் நடந்திருக்கு. ஆனா பிரசவத்தின் போது இல்ல. நல்லவேளை அந்த சமயம் எங்க ரூம்லயே டாய்லெட் இருந்தது. அதனால நான் தப்பிச்சேன். தவிர ரெண்டு நாள் என்னால பெட்டை விட்டே அசைய முடியல. 3வது நாள் வீட்டுக்கு ஜூட்ட்ட்ட் விட்டேன். அதனால இந்த அனுபவம் அங்கே கிடைக்கல.

ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி எனக்க் பெரியம்மை போட்டிருந்தது. அந்த சமயத்துல தூங்கினா ஒரே கெட்ட கெட்ட கனவா வரும்னு வேற பீதிய கெளப்பிட்டாங்க. நானும் எவ்வளவோ தூக்கத்தை கண்ட்ரோல் பண்ணேன் முடியல. ஒரு நாள் மதியம் ரூம்ல வெறும் தரைல, தலைக்கு மட்டும் ஒரு மரப்பலகைய வச்சுட்டு படுத்தேன். பக்கத்துல யாரோ படுத்த மாதிரி ஒரு ஃபீலிங்க். கண்டிப்பா யாரோ படுத்த மாதிரி இருந்தது. நான் அப்ப தூங்கவே தொடங்கல. அதனால அந்த உணர்வை நான் நல்லாவே உணர்ந்தேன். யார்டா அதுன்னு திரும்பி கையை போட்டேன் பாருங்க... அப்பப்பா.... உங்க வீட்டு ஷாக்கா? எங்க வீட்டு ஷாக்கா அப்படி ஒரு ஷாக்க்க் அடிச்ச மாதிரி இருந்தது... கையை வேகமா எடுக்கனும்னு பார்க்கறேன் முடியல.. அம்மா, எதிர்லயே தான் போய்ட்டு இருக்காங்க கூப்பிட வாய் எடுக்கறேன் பேச்சு வரல. ஒரு சில மணித்துளி அசைவே இல்லாம இருந்து, பிறகு நார்மல் நிலைக்கு வந்தேன். இப்ப வரைக்கும் ஏன் அப்படி ஆச்சுன்னு தெரியல.

அமுக்கரா பிசாசுன்னு ஒண்ணு இருக்காம்... அது இப்படிதான் ஏறி உக்கார்ந்து அழுத்துமாம். அப்ப பேச்சு,மூச்சே வராதாம். உண்மை தான் போல... நான் மட்டும் எத்தனை நாளைக்கு தனியா பயந்துட்டு இருக்கறது, வாங்க எல்லாரும் கும்பலா பயப்படலாம் என்ன நான் சொல்றது கோழீஸ் ;))

தீப்ஸ், தொடரும்னு போட்டுட்டு 6 மாசம் கழிச்சு வந்து சொல்லாதே... உடனே வந்து சொல்லு... இல்லாட்டி.....இல்லாட்டி.....ஜில்....ஜில்...ஜில்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்