என் குழந்தை பேசுவதற்க்கு உதவுங்கள்

வணக்கம். பொதுவா இங்க நிறைய தோழிகள் பகிர்ந்துகொண்ட விஷயத்தை தான் நானும் ஒரு அம்மாவா என்னுடைய வேதனைய பகிர்ந்துக்க விரும்புகின்றேன்.என் பையனுக்கு இந்த july-யோடு 2 வருடம் முடிகிறது. என் பையன் ஒரு வார்த்தைகூட பேச மாட்டேங்கிறான். ஏதெனும் அவனுடன் பேசினால் அதட்டுவது போல் sound மட்டும் போடுகிறான். நான் இதற்கு முன் உள்ள thread-அனைத்தும் படித்துவிட்டேன். இருப்பினும் உங்களிடம் நேரடியாக கேட்டால். எனக்கு புதிய வழியும், உற்சாகமும் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு எழுதுகிறேன்.என் உறவினர்கள் speech therapist-டிடம் அழைத்து செல்ல சொல்கிறார்கள். அது சரி என்றால் துபாயில் tamil speech therapist யாரேனும் தெரிந்தால் கூறுங்கள்.என் மன வேதனை உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

உங்கள்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

மாணிக்கவள்ளி,

கட்டாயம் கூட்டிப் போங்க. எவ்வளவு நேரகாலத்தோடு ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது.

//துபாயில் tamil speech therapist யாரேனும்// எனக்குத் தெரியல.
ஆனால்... என் அபிப்பிராயம்... ஒலி, உச்சரிப்புப் பயிற்சிகள், தசைப் பயிற்சிகள் தான் பொதுவாக இருக்கும். பயிற்சி கொடுப்பவர் எந்த மொழியானாலும் பரவாயில்லை.

என்ன காரணத்துக்காக தமிழ் ஸ்பீச் லாங்வேஜ் தெரபிஸ்ட் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும், சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

உங்களின் குழந்தையின் பீடியாட்ரிஷியன் என்ன கூறினார்? பதினெட்டு மாத செக் அப் சென்ற போது அவரிடம் இதை பற்றி பேசினீர்களா? குழந்தை கோர்வையாக இல்லாமல் ஒன்றிரண்டு வார்த்தைகள் அங்கங்கே பேசுகிறாரா இல்லை எதுவுமே இது வரையிலும் பேசவே இல்லையா? நீங்கள் அவரிடம் பேசும் போது அவர் உங்களின் வாய் அசைவை பார்த்து அதன் படி வாயை அசைக்க முயற்சி செய்கிறாரா? நீங்கள் ஸ்பீச் தெரபிஸ்ட்டிடம் கூட்டி செல்வதற்கு முன்னர் அவரை உங்களின் குழந்தை மருத்துவரிடம் முதலில் காண்பித்து ஒரு ஒபீனியன் கேளுங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர் பேச ஆரம்பிக்க சிறிதளவு உதவி தேவைப்படும் போல தெரிகிறது. இருந்தாலும் நீங்கள் வீட்டில் அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருங்கள். தப்பி தவறி கூட அவர் சரியாக பேசவில்லை என்று அவர் முன்னாள் யாரிடமும் குறை சொல்லாதீர்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா சொல்வது மாதிரி முதலில் பீடியாட்ரீஷன் அபிப்பிராயத்தைக் கேளுங்கள்.

‍- இமா க்றிஸ்

அன்பு தோழி மாணிக்கவள்ளிஅமர்நாத் அவர்களுக்கு,
ஒரு ஒரு குழந்தை ஒரு ஒரு மாதிரி . நீகள் கவலைபடும்படி இது ஒன்றும் குறை இல்லை .. குழந்தை கிட்ட அதிக நேரம் சிலவு பண்ணுங்க .. நல்ல நல்ல கதை சொல்லுங்க, cd போட்டு நீங்களும் அது கூட பாட்டு பாடுங்க, இல்லன ஏத்தாவது பேசிகிட்டே இருங்க .கண்டிப்பா யாராவது ஒருத்தர் அவன் கிட்ட பேசிகிட்டே இருக்கனும் . ஒரு வார்த்தை சொலிட்டு அவன திரும்ப திரும்ப சொல்ல வைங்க . எல்லாம் நம்ம கைலதா இருக்கு பா

Imma அம்மா,
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நான் முதலில் என் குழந்தை மருத்துவரை அனுகி பின் தேவையென்றால் speech therapist-டை அனுகிறேன்.

அன்பு லாவண்யா அவர்களுக்கு,

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நான் முதலில் என் குழந்தை மருத்துவரை அனுகி பின் தேவையென்றால் speech therapist-டை அனுகிறேன்.உங்கள் பதில் எனக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது.நன்றி

அன்பு Raji-அவர்களுக்கு,
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.உங்கள் பதில் எனக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது.நன்றி

தோழி... குழந்தை பேச 2.5 வயது வரை காத்திருக்கலாம்னு மருத்துவர்கள் சொல்வாங்க. கூடவே ஒரு வார்த்தையாவது பேசுகிறானா?? இல்லையா?? என்பதையும் கேட்பாங்க. பேசவில்லை என்றாலும், நாம் பேசுவதை புரிந்து கொள்கிறானா, கூப்பிடால் திரும்பி பார்க்கிறானா என்பது போல் சில கேள்விகளும் இருக்கும். உங்க பீடியாட்ரிஷன் பார்த்து அவர் ஆலோசனை கேட்டு பின் ஸ்பீச் பேதாலஜிஸ்ட் பாருங்க. அவங்க குழந்தை பேசாத காரணத்தை கண்டு பிடிப்பாங்க. அவங்க தேவை என்று சொன்னால் மட்டுமே ஸ்பீச் தெரபிஸ்ட் பார்த்தால் போதுமானது.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க... குழந்தை பேச முதல் படி அம்மா தான்!!! நீங்க பேச்சிட்டே இருங்க. சில விஷயங்கள் குழந்தை ஜாடை செய்து கேட்டால் கொடுக்காதீங்க... ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக உச்சரித்து சொல்லி சொல்லி பேசுங்க. கண்ணாடி பார்த்து பேச சொல்லி கொடுங்க. தண்ணி கொடுத்தா கூட “அம்மா உனக்கு தண்ணி குடுக்கட்டா??” “டம்ளர்ல ஊத்தி கொடுக்கட்டா??” இப்படி ஒவ்வொரு செயலையும் விளக்கமா பேசி கொடுங்க. அப்போ அது குழந்தையை கவனிக்க வைக்கும், உடனே பேசவில்லை என்றாலும் அவர்கள் கவனத்தில் நிக்கும். முயற்சி செய்து பாருங்கள்... நிச்சயம் பலன் இருக்கும். கவலை வேண்டாம்... விரைவில் பேசுவான்... பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi,

dun worry,,i too also had the same problem with my son.my son is now 2yrs 11 months.he also doesn't speak till 2yrs.now he is speaking a lottt...now we r asking him to keep quiet.. too much of talking. When he did not speak I asked my family doctor,he said that u have to allow him to talk with small children of his age. Even if we speak a lot to him they won't catch it...they do lip reading only with small children.Since he is the only child in my house he couldn't speak well.So i allowed him to play and talk with children of his age...Now what a change he is not closing his mouth at all....so allow ur child to play with small children..if this doesn't work take him to speech therapist..i think sure it will work....since I have experienced it. But pls wait till 2 yrs 6 months sure he will talk then u r going to say plss stop...my child..

leave ur child to talk and play with small children..wait atleast for a month...sure u will c a change in him...

take care

with luv
jerry

அன்பு வனிதா அவர்களுக்கு,
உங்கள் பதிவை கண்டபின் என் மனதில் புது நம்மிக்கை பிறந்திருக்கிறது.நன்றி . நீங்கள் கூறியவாறு பின்பற்றிகிறேன்.

மேலும் சில பதிவுகள்