கர்ப்ப சந்தேகங்கள்- 36வது வாரம் அவசரமாக உதவவும்

ஹாய் தோழிகளே,
எனக்குசில சந்தேகங்கள் இருக்கிறது,

எனக்கு இப்பொழுது 36வது வாரம் இன்று காலையில் இருந்து அடிவயிற்று பகுதியில் சுருக் சுருக் என்று குத்திக்கொண்டே உள்ளது,அதாவது சூடு பிடித்தால் எப்படி வலிக்குமோ அப்படி வலி இருக்கிறது,யூரின் போகவேண்டும் போலவே உள்ளது,தாங்க கூடிய அளவுதான் என்றாலும் பயமாக உள்ளது,இது எதனால்?தொப்புளிலும் எப்பொழுதாவது லேசான வலி உள்ளது.இதற்கு என்ன காரணம்,பிளீஸ் தோழிகளே சீக்கிரமாக சொல்லுங்கள்
சில நேரங்களில் அடிவயிற்றை குழந்தை இழுத்து பிடித்தால் எப்படி இருக்குமோ அது போன்ற உணர்வு இருக்கிறது

எனக்கு 9வது மாதம் தொடங்கி 1 வாரம் முடிந்துவிட்டது
1.குழந்தை வயிற்றில் நகரும் போது வலி ஏற்படுமா?எனக்கு சில நேரங்களில் குழந்தை நகரும் போது வலி ஏற்படுகிறது.மேலும் பிரசவ வலி வரும் போது குழந்தை நகர்வது நமக்கு தெரியுமா?

2. 9வது மாதத்தில் வயிறு கீழிறங்கும் என்று கூறி இருக்குறார்கள்,வயிறு இறங்குவதை எப்படி அடையாளம் காண்பது?

3.சிசேரியன் செய்தால் எத்தனை நாட்கள் கழித்து பெல்ட் போடலாம்?

4.சில பேர் பிரசவம் ஆனதும் நிறைய தண்ணீர் அருந்தக்கூடாது,அப்பொழுதுதான் தொப்பை விழுகாமல் இருக்கும் என்கிறார்கள்.இது உண்மையா?அப்படி நீர் அருந்தாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படாதா?
யாராவது விளக்கமாக கூறுங்கள் தோழிகளே

ஹாய் மஞ்சு எப்படி நலமா? இப்ப கொஞ்சம் வலி இருக்கும்ப்பா.மேலும் பிரசவ வலி வரும் போது குழ்ந்தை நகர்வது எங்களுக்கு தெரியாது ஏன்னா வலி அப்படி இருக்கும்.9வது மாதத்தில் வயிறு கீழிறங்கும் .அது உங்க டாக்ரர் சொல்லுவாங்க. பார்க்கவே தெரியும் நீங்கள் மேல் வயிற்ற பாருங்க உங்களூகே தெரியும்.மற்ற கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது மஞ்சு தோழிகள் வந்து சொல்வாஙக

அன்புடன்
ரமா

Hi friends,

Now i am 8 month pregnant, kindly tel the sleeping position and how to type in Tamil.

Until you try,doesn't know what you do.
ALL IS WELL

http://www.arusuvai.com/tamil_help.html type in Tamil

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ஹாய் ரமா,
லேட்டாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் ரமா,டாக்டரிடம் கேட்டேன் தலை குழந்தைக்கு இறங்கி இருப்பதாக சொன்னார்கள்.எனக்கு இது 9வது மாதம் 2வது வாரம் தொடங்கி உள்ளது,வேறு தோழிகள் வந்து சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

மஞ்சு எப்படி இருக்கீங்க? 1 .உங்களுக்கு ஒன்பது மாதம் ஆனதுனால லேசா வலி தெரியுது. பயப்படவேண்டாம். 2. பிரசவ வலி எடுக்கும் போது உங்க கவனம் எல்லாம் வலி மேல தான் இருக்கும். அப்ப குழந்தை நகர்ந்தாலும் உங்களுக்கு தெரியாது. 3. சிசேரியன் ஆனால் ஒரு மாதம் கழித்து பெல்ட் போடலாம். அப்போதுதான் சிசேரியன் புண் உலர்ந்து தோல் சேர்ந்துவிடும் .எதற்கும் டாக்டரிடம் கேட்டு போடுவது நல்லது. ஏன் என்றால் ,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.எனக்கு உங்க கடைசி கேள்விக்கு பதில் தெரியவில்லை. நான் இதற்க்கு முன் இப்படி கேள்வி பட்டதில்லை. பொதுவாக குழந்தைக்கு பால் கொடுத்தாலே நாக்கு உலர்ந்து தாகம் எடுக்கும்.அந்த சமயத்தில் வயிறு முட்ட தண்ணீர் குடிக்காமல் ,தாகத்திற்கு ஏற்ற தண்ணீர் குடித்தாலே போதும் என்று நினைக்கிறேன். உங்களுடைய பாதுகாப்பான பிரசவத்திற்கு வாழ்த்துக்கள் மஞ்சு.

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

சில நேரங்களில் சிலருக்கு வலி எற்ப்படும். இந்த மாதத்தில் குழந்தைக்கு உள்ளே உதைத்து விளையாட இடமிருக்காது. காலை குறுக்கிக் கொண்டு பாவமாக தான் இருக்கும். அப்படியாக இருக்கும் அதிகம் மூவ்மெண்ட்ஸ் தெரிய வாய்ப்பில்லை தான். அதற்காக பயப்பட வேண்டாம். இருந்தாலும் குழந்தையின் அசைவு உங்களுக்கு நன்றாக தெரியும். குழந்தை உள்ளே வளர வளர உடலில் உள்ள மற்ற உறுப்புகள் அனைத்தும் ஒரு ஓரத்திற்கு தள்ளப் படும். அதனால் தான் சிறிது சிறிதாக சாப்பிடனும் என்று கூட சொல்கின்றனர். அதனால் தான் நெஞ்சு கரிப்பெல்லாம் ஏற்ப்படும். அதெல்லாம் சகஜமே. உங்களால் தாங்கிக்கவே முடியாத அளவுக்கு வலியிருந்தால் கண்டிப்பாக உங்க மருத்துவரை அணுகவும்.

சிசேரியன் என்றால் உங்களின் மருத்துவர் தான் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். அவருக்கு தான் தெரியும் காயம் நன்றாக ஆரி விட்டதா இல்லையா என்று. அதனால் நீங்கள் இதில் மற்றவரின் அறிவுரையை விட அவரின் ஆலோசனைப்படி செய்யவும். என்னவாக இருந்தாலும் என்ன பெல்ட் போட்டாலும் அப்படி ஒன்றும் உள்ளே சென்றாக தெரியாவில்லை. (அது பெல்ட் போட்டவர்கள் சொன்னது...) நீங்கள் உங்களின் உடைநிலை தேறிவிட்டது என்று மருத்துவர் சொன்னதும் அவரிடமே கேளுங்கள் உடற்பயிற்சி எப்பொழுது ஆரம்பிக்கலாமென்று....அதற்கேற்றார் போல் நீங்கள் உடல் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டால் எல்லாம் சரியாகும். எதற்கும் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரையில் காத்திருக்கலாம் (இது என் தனிப்பட்ட கருத்து தான்). நம் உடலில் மாற்றம் ஏற்ப்பட பத்து மாதமானது அது சரியாகவும் திரும்பவும் பழையபடி ஆகவும் அவ்வளவு நாளெடுக்கும்.

என் மருத்துவர் நிறைய தண்ணீர் அருந்த சொன்னார். இருந்தாலும் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து க்ளாஸ் தண்ணீருக்கு (சாப்பிட்ட பின் குடிப்பதையும் சேர்த்து) மேல் அருந்த வேண்டாம். அப்படி செய்தால் பாலின் சத்துக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. குழந்தை பிறந்த பின் பழங்கள் காய்கறிகள் என்று நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். பால் கொடுக்க வேண்டும் என்று அதிகம் சாபிடாமல் தேவையான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இரும்பு சத்து அதிகம் எடுத்துக் கொண்டாலே பால் நன்றாக் சுரக்கும்.

வாழ்த்துக்கள். சீக்கிரமே நல்ல செய்தியை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

டியர் ஜெயா,உங்க பதிலுக்கு நன்றி,
லாவண்யா,விளக்கமாக பதில் சொல்லி இருக்கீங்க,நான் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறேன்,ரொம்ப நன்றி

டியர் பிரண்ட்ஸ்,
எனக்கு இப்பொழுது 36வது வாரம் இன்று காலையில் இருந்து அடிவயிற்று பகுதியில் சுருக் சுருக் என்று குத்திக்கொண்டே உள்ளது,அதாவது சூடு பிடித்தால் எப்படி வலிக்குமோ அப்படி வலி இருக்கிறது,யூரின் போகவேண்டும் போலவே உள்ளது,தாங்க கூடிய அளவுதான் என்றாலும் பயமாக உள்ளது,இது எதனால்?தொப்புளிலும் எப்பொழுதாவது லேசான வலி உள்ளது.இதற்கு என்ன காரணம்,பிளீஸ் தோழிகளே சீக்கிரமாக சொல்லுங்கள்

i think ungaluku delivery pain a irukum...same pain tha enakum iruthathu...next day delivery achu...nalla water kudiga...neega doctor ta ponga manju....ok va...

Hope is necessary in every condition:)

ஹாய் ரேகா ,
எனக்கு டெலிவரி பெயினாக இருக்கும் என்று தோன்றவில்லை,ஏன்னா,இது பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை,வலி கூடவும் இல்லை,எப்பவாவது அது போல் லேசாக வலிக்கிறது,மேலும் குழந்தையின் அசைவை என்னால் நன்றாக உணர முடிகிறது

சில நேரங்களில் அடிவயிற்றை குழந்தை இழுத்து பிடித்தால் எப்படி இருக்குமோ அது போன்ற உணர்வு இருக்கிறது

மேலும் சில பதிவுகள்