மைக்ரோவேவ் சந்தேகம்

அன்புத்தோழிகளே.. எனக்கு மைக்ரோவேவ் பற்றி பலத்த சந்தேகம் உள்ளதுப்பா.. நான் Microwave Oven வாங்கலாம் என்று உள்ளேன். என்னுடைய சந்தேகம் இது தான்.

Oven Toaster - Oven இரண்டும் ஒன்றா? இரண்டும் ஒன்று என்றால் என்னெவெல்லாம் செய்யலாம்? என்னிடம் ஒரு அவன் டோஸ்டர் உள்ளது. ஆனால் இது நார்மல் டைப். வெறும் டோஸ்ட் மட்டுமே செய்யமுடியும். டெம்பரேச்சர் அட்ஜஸ்மெண்ட் கிடையாது. top or bottom or both top and bottom இதில் எதாவது ஒன்று மட்டுமே செலக்ட் பண்ண முடியும். டைமிங் அட்ஜஸ்ட் பண்ண முடியும். அவ்வளவே

Microwave Oven வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன? தயவுசெய்து கூறுங்கள்பா. மைக்ரோவேவ் வெறும் கன்வெக்ஷன் மோட் மட்டுமே உள்ளது வாங்கலாமா அல்லது கன்வெக்ஷன் மற்றும் க்ரில் மோட் உள்ளது வாங்கலாமா? எந்த ப்ராண்ட் வாங்கலாம்? Panasonic or sharp or LG எது சிறந்தது?

கேக், பிஸ்ஸா மற்றும் பிஸ்கட் வகைகள் செய்ய எந்த மாதிரியான microwave oven வாங்க வேண்டும். நான் அறுசுவையில் மைக்ரோவேவ் பற்றிய சந்தேகங்கள் உள்ள குறிப்புகளை தேடி படித்து பார்த்தேன். ஆனாலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இமா, இளவரசி, வனிதா எல்லாரும் அவன் பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லைப்பா. சற்று உதவுங்களேன் ப்ளீஸ்..

என்ன aswatha இப்படி சொல்றீங்க . சென்னைல எவ்ளவோ electronics கடை இருக்கு . எந்த பொருள் வாங்கினாலும் கடைக்கு கடை விலை மாறுபடும். பேரம் பேசி வாங்கினாதான் நமக்கு விலை மலிவா கிடைக்கும் . நான் வாங்கினது currimbhoys parrys cornerla தான் . அவர்கள் 3990 ifb சொன்னார்கள் மற்றொரு கடையில் விசாரித்ததில் 3300 கிடைக்கும் என்று சொன்னதால் அதை சொல்லி குறைத்து கேட்டோம் அதனால் அதன் விலையை குறைத்தார்கள்.
otg அவன் 5800 சொன்னார்கள் கம்மி பண்ண சொனதால் 5500 கொடுத்தார்கள் .

இவ்வளவு விஷயம் இருக்காப்பா நாங்க கம்பெனி ஐடெம் என்ன விலை சொல்றாங்களோ அத வாங்கிடிவோம்பா .குறைத்து கொடுபார்கல்ன்னு தெரியாதுப்பா .நன்றிபா சொன்னதுக்கு.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நாங்க usualla என்ன பொருள் வாங்க வேண்டும் என்றாலும் 4 , 5 கடைகளில் விசாரித்து விட்டு எதில் குறைவாக உள்ளதோ அங்கு தான் வாங்குவோம். குறிப்பாக தொலைகாட்சியில் எங்ககிட்ட வாங்க , எங்கள விட கம்மி எங்கயும் கிடையாது என்று விளம்பரம் வரும் கடைகளுக்கு தப்பியும் போக மாட்டோம் . அங்கே அதிகமாக சொல்வார்கள் .

அஸ்வதா
ரம்யா சொல்ற மாதிரி எந்த கடைக்குபோய் பொருட்கள் வாங்கினாலும் அதன் விலையை குறைத்து வாங்க பழகுங்கள். பேரம் பேசினால் தான் நம் ஊரில் பிழைக்க முடியும். நாங்க போன வருடம் ஊருக்கு சென்றபோது ஃபிரிட்ஜ் வாங்க முடிவு செய்து கிட்டத்தட்ட 7 கடைகள் போய் விசாரித்து எந்த கடையில் நல்ல தரமாகவும் விலை நியாயமானதாகவும் உள்ளது என்பதை கம்பேர் பண்ணி வாங்கினோம். அதனால் எது வாங்குவதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை விலை கேட்டு விசாரித்து பேரம் பேசி வாங்குங்கள்.

ரம்யா
நான் அவன் வாங்கிவிட்டு உங்களுக்கு தான் முதல்ல சொல்லுவேன்பா. உங்க இன்பர்மேஷனுக்கு மிக்க நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு தோழிகளே,
microwave oven -ல் combination mode உபயோகம் என்ன? தெரிந்தவர்கள் கொஞ்சம்
உதவுங்களேன் ப்ளீஸ்.....

நான் oven வாங்கலாம்னு இருக்கேன், எப்படி வாங்கலாம்னு புரியல, otg and solo வா, convection டைப் வாங்கலாமா? நீங்க யூஸ் பண்ற மாடல் பத்தி சொன்னா கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்கும், (Lg and ifb,) ப்ளீஸ் யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க,
நான் பழைய இழையை தேடி தான் வந்து இருக்கேன். எல்லாரும் otg and solo சொல்றாங்க, ஆனா என் kitchen கொஞ்சம் சின்னது, pls do reply for this.

thanks in advance.
Priya

நான் அறுசுவைக்கு புதிது ,தோழிகள் எனக்கு கொஞ்சம் உதவுங்கள் ,என்னிடம் microwave oven [micro/grill/combi] உள்ளது.அதில் பப்ஸ் எப்படி செய்வது oven யை preheat செய்ய வேண்டுமா? அப்படி செய்ய வேண்டுமென்றால் எப்படி preheat செய்ய வெண்டும்?

யாருமே ஆன்லைன் ல இல்லையா. ஒருத்தரும் பதில் போடல. யாராச்சும் சொல்லுங்கப்பா கொஞ்சம் அர்ஜென்ட்

பிரியாமகேஷ் ,
நானும் ஒரு மைக்ரோ ஓவன் சோலோ , otg அவன் கேக் செய்யும் ஆசையில் வாங்கினேன் . ஆனால் recipe புக் பார்த்து செய்தால் நன்றாக வரவில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் . உங்களுக்கு otg அவன் பயன்படுத்த தெரிந்தாலோ அல்லது அது பற்றி உங்களுக்கு சொல்ல அருகில் யாரேனும் இருந்தாலோ , நீங்கள் அதனை தேர்ந்தெடுக்கலாம் .

ரம்யா
நான் கேக் செய்யனும்தான் வாங்கலாம் நினைக்கிறன், OTG வாங்கலாமா?

நான் IFB20sc2 மாடல் வாங்கலாம் னு நினச்சேன். LG தான் நல்ல இருக்கும்னு படிச்சேன். confuse ஆய்டிச்சு இப்போ. நீங்க சோலோ என்ன Brand வாங்குனீங்க

மேலும் சில பதிவுகள்