வாந்தி வர இல்லை

நான் கர்ப்பம் ஆகி 8 வாரம் முடிந்து விட்டது. அனால் எனக்கு இன்னும் வாந்தி வரவில்லை. குமட்டல் மட்டும் இருக்குது. இதுக்கு என்ன காரணம்.

வாழ்த்துக்கள். கர்ப்பமா இருக்க எல்லாருக்கும் வாந்தி வரனும்னு ஏதும் இல்லை தோழி... வரலன்னா சந்தோஷப்படுங்க :) ஒரு சிலருக்கு 3 மாதம் மட்டும் வாந்தி இருக்கும், அப்பறம் இருக்காது, ஒரு சிலருக்கு டெலிவரி வரைக்குமே வாந்தி இருக்கும்... ஒரு சிலருக்கு வாந்தியே இருக்காது... உடல் வாகு... வேறு ஒரு காரணமும் இல்லை. அதனால் பயம் வேண்டாம். நல்லது தானே வாந்தி வரலன்னா நல்லா சாப்பிடலாம், நல்லா ஆரோக்கியமா இருக்கலாம், குழந்தையும் ஆரோக்கியமா வளரும். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் தோழியே... மஹா லக்ஷ்மி நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க பா... நான் 3 மாதமா வாந்தி எடுத்துகிட்டு இருக்கேன் வாந்தி இல்லன்னா நல்ல சாப்ட்டு ஆரோகியமா இருங்க... வனிதா மேடம் சொன்ன மாதிரி ஒவ்வொருவருக்கும் உடல் நிலை மாற்றம் தான். வாந்தி வராம இருக்கும்போதே நல்ல சாப்புடுங்க...

அன்புடன் அபி

அன்புடன் அபி

தேங்க்ஸ் வனிதா அண்ட் அபிராமி. இப்ப இருந்தே வாக்கிங் போலாமா பா???

madhu

ஹாய் மகாலட்சுமி அவர்களே, வாழ்த்துக்கள். சிலருக்கு மாசமாக இருக்கும் போது வாந்தியலாம் வராது. குமட்டல் மட்டுமே இருக்கும். நான் மாசமாக இருக்கும் போது வாந்தி வரவில்லை. மனதை போட்டு குழப்பி கொள்ளதீர்கள். நன்றாக சாப்பிடுங்கள்.

ஹாய் மஹா ,
எனக்கு 6 வது வாரம். எனக்கு குமட்டல் வாந்தி எதும் கிடையாது . அத பத்தி கவலை படாதீங்க .
நல்லா சத்துள்ள உணவா சாப்பிடுங்க . மாதுளம் பழம் சாப்பிடுங்க .

நன்றி தோழிகளே வாக்கிங் பத்தி சொலுங்க. நான் கோயம்புத்தூர் பா. இங்க செங்கலியாப்பன் மருத்துவமனை ல செக் பண்றேன். இங்க 4 மாதங்கள் கு பிறகு தான் appointment date கொடுத்ருகாங்க அது வரைக்கும் போலிக் அசிட் tablets தான் கொடுத்தாங்க. இப்ப நான் 8 வீக்ஸ் முடுஞ்சது. ஸ்கேன் panalaa பா. டாக்டர்ஸ் 4 மாதங்கள்பிறகு தான் பற்பனகள பா. யாராவது சொலுங்கள். இப்ப தான் டைப் பண்ண கத்துகுரேன்.

madhu

ஹாய் மகா,
என்ன ஒற்றுமை? எனக்கும் 8 வாரங்கள் ௩ நாட்கள் ஆகிறது. சில சமயங்களில் குமட்டல் மட்டும் இருக்கிறது, ஆனால் வாந்தி வருவது இல்லை.
தோழிகளே,
எனக்கு இப்போதெல்லாம் என்ன சாப்பிட்டாலும் செரிமானம் ஆவது இல்லை, இந்த பிரச்சினைக்கு எதாவது வழிமுறைகள் இருக்கிறதா? ப்ளீஸ் சொல்லுங்களேன்.

நன்றியுடன்,
மகாசங்கர்

அன்பு தோழி... வாக்கிங் இப்போ தேவை இல்லை. இந்த நேரத்தில் அதாவது 5 மாதம் வரை அதிகமா ஸ்ரெஸ் இல்லாத வேலைகளை மட்டும் செய்யுங்க. 7 மாதத்தில் இருந்து வாக்கிங் போதுமானது. எனக்கு 3 மாதத்துக்கு மேல் ஃபோலிக் ஆசிட் கூட விடமின், அயர்ன் சேர்த்தாங்க... 3வது மாசம் ஸ்கேன் பண்ணாங்க... நீங்க சொல்றது புதுசா இருக்கு. கோயமுத்தூரில் இப்படியா??? பொதுவா என் தங்கைக்கு கூட முதல் மாசம் கன்ஃபர்ம் பண்ண ஒரு ஸ்கேன், அப்பறம் 3வது மாசம், அப்பறம் 5வது மாசம், பின் 8வது மாசம், 9வது மாசம் டெலிவெர்ய்க்கு ஒரு வாரம் இருக்கும்போது பண்ணாங்க. கேட்டு பாருங்க, வேறு டாக்டரிடம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கும் வாழ்த்துக்கள். டாக்டரிடம் சொல்லுங்க பசிக்கல, செரிக்கலன்னு... மருந்து கொடுப்பாங்க. சாப்பிடும் முன் குடிக்க. அதை குடிச்சா பசிக்கும், ஜீரணம் ஆகும். கவலை வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi வனிதா நிசமா தான் பா. இங்க sengaliappan ல 3 months கு அப்புறம் தான் பெரிய டாக்டர் ah பார்க்க முடியும். அது வரைக்கும் அங்க இருக்குற OP டாக்டர்ஸ் தான் பார்கனும. என்ன பண்றதுன்னு தெரில. அதுனால எங்க அத்தை வேற பக்கம் குட்டிட்டு போனாக அங்க ஸ்கேன் pananga

madhu

மேலும் சில பதிவுகள்