உணவு பொருத்தம்

தோழிகளே!
நம் வீட்டில் சாதாரணமாக உணவு தாயாரிக்கும் போது இதுக்கு இது தான் காம்பினேஷன் என்று நாம் வைத்திருப்போம்....
சில சமயம் அதை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்திருக்கும்..
அவர் அவர் காம்பினேஷனை முதலில் எழுதுவோம்..
பின் மாற்ற முடிந்தவற்றை மாற்றிப் பார்ப்போம்.......

அதில் அவர் அவர் கொடுத்த குறிப்புகளின் லிங்க்கையும் கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.....

எடுத்துக்காட்டாக,
லெமன் சாதம்
http://www.arusuvai.com/tamil/node/6442
அதற்கு சரியான சைட் டிஷ் நான் செய்வது ::
1.கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிகூட்டு --
http://www.arusuvai.com/tamil/node/4912
2.கொண்டைக்கடலை மசாலா --
http://www.arusuvai.com/tamil/node/4905
3.உருளைக்கிழங்கு வறுவல் --
http://www.arusuvai.com/tamil/node/5266

காம்பினேஷன் மெனுவுக்கு உணவு பொருத்தம் என்ற சரியான வார்த்தையை எழுதிய சுபாவிற்கு பாராட்டுக்கள். இதோ எனக்கு தெரிந்த சில காம்பினேஷன் மெனு.
1. முருங்கை சாம்பார், உருளை வருவல், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி.
2. கொண்டைகடலை குழம்பு, கீரை பொரியல், அப்பளம்.
3. காலிஃபிளவர் உருளை குருமா, கத்தரிகாய் வதக்கல், கேரட் தயிர் பச்சடி.
4. வத்தகுழம்பு, பருப்பு துவையல், வெஜ் கதம்ப பொரியல்.
5. கருவாட்டு குழம்பு, முட்டை ஆம்லட், முருங்கைகீரை துவட்டல்.
எங்கே ஜலீலா நான்வெஜ் மெனுவிலேயே விதவிதமான காம்பினேஷனில் போட்டு அசத்துவீங்களே அசத்துங்க.

நேற்றே பார்த்தேன் ஆனால் சர்வர்பிராப்ளம் ஆகையால் எழுதல.
கழ்டபட்டு டைப்பண்ணுவோம் பிறகு புஷ்ஷுன்னு போய்விடும்.
இதேல்லாம் கல்யாணம் முடிந்து மாப்பிள்ளைக்கு செய்து கொடுப்பது.

1. ரொட்டி கால் பாயா, ஹரிரா பால், இடியாப்பம்.

2. பகாறா கானா, கறி உருளை கிழங்கு சால்னா,தால்சா,கறி கூட்டு. ஸ்வீட் (கேரட் (அ) தக்களி ஹல்வா
இப்போதைக்கு இரண்டு பிறகு அனுப்பு கிறேன் சூப்பரா ஆனா ஜொல்லு விட கூடாது, செய்து பர்க்கனும் ஒகே வா//
ஜலீலா

Jaleelakamal

எங்கப்பா இந்த தளிகாவை காணோம். மனோகரி, மனோ, செல்வி, சரஸ்வதி, முத்துலட்சுமி எல்லோரும் எழுங்கம்மா. உணவு பொருத்தம் என்பது ஒரு நல்ல, உபயோகமான தலைப்பு இல்லையா?

வெஜ்டேரியன் காம்பினேஷன் எனக்கு அவ்வளவா தெரியாது வெஜ் புலிகளே கொஞ்சம் சொல்லுங்கப்பா.

மருந்து சோறு,வஞ்சிரமீன் சால்னா(குழம்பு) , மீன் பிரை, பிளெயின் தால்,அப்பளம், அவித்த முட்டை.
பீட்ரூட் ஹல்வா.

ஜலீலா

Jaleelakamal

எப்படி ஜலீலா இப்படி கஷ்டமான மெனுவை எல்லாம் தினப்படி சமையலில் செய்து அசத்துறீங்க? சூப்பர்! இன்னும் எழுதுங்க.

மனோகரி! மனோகரி! மனோகரி! மூன்று தடவை கூப்பிட்டாச்சி. வரமாட்டேங்கிறாங்க. இன்னிக்கு எப்படியாவது அழைச்சிகிட்டு வந்து இந்த தலைப்பில் ஒரு மெனு எழுதாமல் விடுவதில்லை.

மாலதி ய்க்காவ் தினப்படி இப்படி செய்து சாப்பிட்டால் வீட்டினுள் நுழைய இரண்டு கதவை திறந்து வீடு சுவரையும் கொஞ்சம் பேத்து எடுத்தால் தாஅன் நாம் நுழைய முடியும் ,
இது மதிரி காம்பினேஷன் விஷேஷங்களில் செய்வது.
என்ன யாரையும் காணும் போர்

ஜலீலா

Jaleelakamal

ஆஹா இப்படி சூப்பர் கம்பினேஷனா கொடுத்து நல்லா நா ஊர வச்சிட்டீங்க.
வெங்காய குழம்பு, செளசெள கூட்டு, கோஸ் பொரியல், அப்பளம்
புளிசாதம், தேங்காய் துவையல், உருளை வறுவல், வடாம்.
முள்ளங்கி சாம்பார், வாழைக்காய் வறுவல், காரட் பொரியல், தயிர் பச்சடி
தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய், சேப்பங்கிழங்கு ப்ரை(இது என்னொட favourite)

பஞ்சி(செட்) தோசை , வெள்ளை பீர்னி(ரவை கஞ்சி கீர்),மஞ்சள் பீர்னி, மிளகு கோழி.

முட்டை ரொட்டி(கொத்து கறி) முட்டை வட்லாப்பம், இடியாப்பம்.

ஆனால் வீட்டில் சாதாரணமாக
மொரு மொரு தோசை, பொட்டு கடலை துவையல், கேரட் சாம்பார்,சிம்ம்பிள் ரவைகஞ்சி கீர்(பாதம் முந்திரி அரைக்கமா,கண்டெண்ட் மில்க் சேர்க்காமல்)

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்