இரண்டாவது குழந்தை பற்றிய சந்தேகம்

அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம்..
எனக்கு 2 வயதில் 1 பெண் குழந்தை இருக்கிறாள். எனக்கு 2வது குழந்தை பெற்று கொள்ள விருப்பம் இல்லை. ஏன் என்றால் அவளை மட்டும் மிகுந்த பாசத்துடன் பார்த்து கொள்ள ஆசை. ஆனால் என் கணவர் மற்றும் அம்மா, மாமியார் வீட்டில் 2வது குழந்தை வேண்டும் என்கிறார்கள்.விறுப்பம் இல்லாமல் எப்படி பெறுவது? நான் எப்படி சொல்லி புரிய வைப்பது என்றும் தெரியவில்லை. நீங்கள் உதவுங்களேன்.

நீங்கள் விரும்பாமல் குழந்தை பெற்றுக் கொள்வது சரியே அல்ல..அதை நீங்கள் திருத்தமான விளக்கி விட வேண்டும்..அல்லது அவர்களாவது புரிந்துகொள்ள வேண்டும்.
இருந்தாலும் என்னுடைய அபிப்ராயமும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வசதி இருந்தால் அதற்கும் மேல் என்றாலும் ப்ரச்சனை இல்லை..ஒரு குழந்தை என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியாது..ஒரு குழந்தைக்கே பாசத்தை முழுக்க கொட்டுவதும் அளவுக்கதிமாக அவர்களைப் பற்றிய பயம் கொள்வதும் பின்னாளில் அது அவர்களுக்கே பாசத்தின் மேலே வெறுப்பு வரவும் அல்லது மிஸ்யூஸ் செய்யவும் கூட வைக்கலாம்.
ஒன்றோ இரண்டோ பாசத்துக்கும் உண்டு ஒரு வரையறை.. பாசத்தை பாதுகாப்பு என்ற முறையில் கொடுங்க அவர்களது நல்ல எதிர்காலத்திற்காக மட்டும் பாடுபடுங்க..ஏன் சொல்றேன்னா ஒன்னு வச்சிருக்கவங்க பலரும் பாசமாக வளர்க்கிறேன் என்று மோசமாக வளர்க்கிறார்கள்.இந்த அர்த்தத்தை மட்டும் புரிந்து கொண்டு பெரியவர்களிடம் சொல்லி புரிய வைத்து விடுங்கள்.

நன்றி தளிகா sister

தோழி எனக்கு 2வது குழந்தை எதிர்பாராமலே கிடைத்துவிட்டது, அப்போ நான் யோசித்தேன் 1வ்து குழந்தைக்கு காட்டுற பாசத்தை இந்தக் குழந்தையிடம் என்னால் காட்ட முடியுமா? என்று, ஆனால் அதைச்சுமந்து பெறும் போது அந்தப் பாசம் பொதுவாகிவிடுகின்றது, இந்தக்குழந்தைக்கு மேலாக அந்தக்குழந்தையையும் அந்தக்குழந்தைக்கு மேலாக் இந்தக்குழந்தையையும் நேசிக்கும் பாசம் தானாக வந்து விடும். இன்னொரு குழந்தை பிறந்ததற்காக 1வ்து குழந்தை மேலுள்ள பாசம் ஒரு போது குறையாது, கணவன் ஆசைப்படி இன்னொன்றைப் பெற்றெடுங்க

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று உங்க கமென்டுக்கு ஒரு லைக் போடுகிறேன்..நானும் இரண்டாவதை கர்ப்பமானவுடன் என்னென்னவோ சிந்தித்தேன் ஆனால் இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது.இப்போ இருவரும் சேர்ந்து விளையாடும்பொழுது ரொம்ப சந்தோஷப்படுகிறேன்

உங்களுகு பிடிகலன வீட்டில் இருகரவக கிட்ட சொல்லி புரிய வையிகள்.என்னோட கருத்து, நீங்கள் உங்க side மட்டும் பார்க்க வேண்டாம் pa. உங்கள் பாபா பத்தியும் think பன்னா நல்லது. அவளுகும் ஒரு துணை வேண்டும், ஒரு stage க்கு அப்பரம் உங்க கிட்ட share பன்ன முடியாததை அவக கிட்ட பன்னுவா... நல்ல யோசிச்சி decide பன்னுங்க pa. Now shez 2 yrs only, therez time to think and decide..... Take care....

ஆமா தளிகா சிலர் நெற்யவே கேப் விடுறாங்க இது குழந்தகளிடத்தில் நெருங்கிப் பழகுவதையும் குறைக்கின்றத்கு, அவர்களீடத்திலே பாசத்தையும் குறைக்கின்றாதாக நினைக்கின்றேன்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

தோழிகள் அனைவருக்கும் நன்றி..உங்கள் பின்னூட்டம் என்னை இந்த கோனத்திலும் யோசிக்க வைக்கிறது..நன்றி

மேலும் சில பதிவுகள்