தேதி: September 20, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தேங்காய் - ஒரு கப்
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 3/4 கப்
ஏலக்காய்- 6
முந்திரி பருப்பு- 15
தேங்காயை நல்ல வெள்ளையாகத் துருவிக் கொள்ளவும். 4 தேக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் 1 1/2 கப் சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து பாகாக்கவும்.

கையால் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம் வந்ததும், துருவிய தேங்காயை அதில் சேர்த்து கிளறவும். வறுத்த முந்திரி பருப்பு, பொடித்த ஏலப்பொடியை சேர்க்கவும்.

தேங்காயும், பாகும் சேர்ந்து கெட்டியானதும் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் பர்ஃபி பதம் வந்ததும் தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

கண்ணைக் கவரும் வெண்ணிற தேங்காய் பர்ஃபி நீங்கள் சாப்பிடவும், பரிமாறவும் ரெடி.

Comments
hi ms. radha
இப்பவே சாப்டனும் போல இருக்கு, சூபர் போங்க .....!
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
hi ms. radha
இப்பவே சாப்டனும் போல இருக்கு, சூபர் போங்க .....!
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
தேங்காய் பர்ஃபி
வாவ் சூப்பர்ங்க;-)
நான் பொட்டுக்கடலை மட்டும்தான் போடுவேன். நீங்க சாதாரண தேங்காய் பர்ஃபிய ரிச்சாக்கிட்டீங்க;-) எனக்கு ரொம்ப ஃபேவரிட்டான ஸ்வீட் இது;-) வாழ்த்துக்கள்;-)
Don't Worry Be Happy.
radha aunty
சூப்பர்.பர்பி அசத்திட்டீங்க . வாழ்த்துக்கள்.
பேஷ் பேஷ்
சூப்பர் பர்பி..பேத்தி பிறந்ததுக்கு இப்படி எல்லாருக்கும் ஸ்வீட்டா?ரொம்ப சூப்பரா இருக்கு..எனக்கு அப்படியே சாப்பிடணும் போல இருக்கு,எங்க அம்மா பண்ற மாதிரியே இருக்கு வெள்ளையா..எனக்கு பார்சல் ப்ளீஸ்..
இதுவும் கடந்துப் போகும்.
ராதாம்மா
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்வீட் இது,நாகூர் சைடு இது அதிகமா கிடைக்கும்,செய்து காண்பித்ததற்க்கு ரொம்ப நன்றி!
Eat healthy
ஆன்ட்டி
ஆன்ட்டி எங்கம்மா செய்ற மாதிரி இருக்கு ஆன்ட்டி எங்க வீட்டுக்கு போய் சாப்பிடணும் இல்லனா அம்மாவ செஞ்சி கொண்டு வர சொல்லணும் ஆன்ட்டி
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
அசத்தல் குறிப்பு
அசத்தல் சமையல் போங்க....
எங்க ஊர் தேங்காய் கேண்டி மாதிரி இருக்கு.....
- அன்பே சிவம் -
தேங்காய் பர்ஃபி சூப்பர்!
அசத்தலா இருக்கு தேங்காய் பர்ஃபி! இது என்னோட ஆல்டைம் ஃபேவரைட்! வீட்டில அம்மா அடிக்கடி செய்து தருவாங்க, அதை நியாபகப்படுத்திட்டிங்க! :) வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுஸ்ரீ
Hi Aunty
Thank you for posting this tasty recipe. Added to my fav list.
99% Complete is 100% Incomplete.
friends ghee pota tha
friends ghee pota tha nallarkkuma... enta ghee ippa illaye... canola oil use pannalama???
அன்புடன் அபி
தேங்காய் பர்பி
ஆண்டி முதல் டிஷ் இனிப்போட ஆரம்பிச்சுடிங்க எனக்கு தேங்காய் பர்பி எப்பவும் ரொம்ப பிடிக்கும் இப்பவே நாக்கு ஊருது கலக்கிட்டிங்க ஆண்டி
நன்றி தோழிகளே
நன்றி...நன்றி...நன்றி தோழிகளே...அங்கை,ஜெயா, நசீம், அஸ்வினி, ரஸியா, ரேணு, சுஸ்ரி, கோடி, மெர்ஸானா, கலா, அபி---அத்தனை பேருக்கும் மிக்க நன்றி....அபி...நெய் சேர்த்து செய்தால்தான் நன்றாக இருக்கும்...பாவம் மாசமாயிருக்கும்போது உன் ஆசையைக் கிளப்பி விட்டதா இந்த ஸ்வீட்?
தேங்காய் பர்ஃபி
ஆண்டி இனிப்பா ஆரம்பிச்சுட்டீங்க தேங்காய் பர்ஃபிஎழிமையா இருக்கு எல்லா ஜாமனும் இருக்கு இன்னைக்கு சின்னவன் தூங்குன பிறகு செய்ய போரேன் எப்படி இருந்ததுன்னு அரட்டையில் சொல்ரேன்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்
ராதா
பார்க்கவே கடையில் இருப்பது போல இருக்கு..
நல்லா செய்து இருக்கிங்க.. வாழ்த்துக்கள் ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ராதா ஆண்ட்டி
ராதா ஆண்ட்டி சூப்பர் தேங்காய் பர்பி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா அடிக்கடி செய்வாங்க. இங்க நீங்க செய்து காண்பித்ததை பார்த்ததும் சாப்பிடனும் போல இருக்கு. சூப்பரா ஸ்வீட்டோட ஆரம்பிச்சுட்டீங்க. இன்னும் உங்க சமையல் கைவண்ணத்த காமீங்க உங்க ஸ்பெஷல் ரெசிப்பிலாம் கொடுங்க கத்துக்க ஆவலா இருக்கு.
ராதா ஆன்ட்டி
ஆன்ட்டி பர்பி Superb எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க.. இன்னைக்கு வீட்ல போய் அம்மாவ செய்து தர செல்லனும்.. ரெம்பா தாங்ஸ் ஆன்ட்டி.. இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் ஆன்ட்டி...
எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை
radha aunty
barfi pakave supera iruku.................ipave sapdanum polarku...................
romba alaga iruku
madam
recipe super .........liked it a lot
ராதா மேடம்
உங்க முதல் குறிப்பு இனிப்போடு ஆரம்பிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள். வெள்ளைநிறத்துடன் பார்க்க தேங்காய் பர்பி சூப்பரா இருக்கு. சமையல் மட்டுமல்லாது அறுசுவையின் மற்ற பகுதியிலும் உங்க பங்களிப்பு இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்
தேங்காய் பர்ஃபி
தேங்காய் பர்ஃபி இன்னைக்குதான் செதேன் ஆண்டி நல்லா வந்தது இதுதான் முதன்
முதலில் நல்லா சூப்பரா இருந்தது தேங்ஸ் ஆன்டி
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்
Thanks to all...
எல்லாருக்கும் ரொம்ப நன்றி...பல்கிச், ரம்யா, யழினி, புன்னகை, வினோ, லின்சி.....இனி எனக்குத் தெரிந்த வித்யாசமான ரெசிபிக்களை அனுப்பறேன்...
ராதா
இன்னைக்கு தான் இந்த குறிப்பு என் கண்ணில் படுது... போன மாதம் முழுக்க அறுசுவை பக்கம் வரலயே.. அதான் பார்க்கல போல. ரொம்ப சூப்பர். எனக்கு பிடிச்ச பர்ஃபி. நல்ல குறிப்புகள் கொடுக்கறீங்க... கலக்குங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா