சார்ட் பேப்பர் தோரணம்

தேதி: September 24, 2011

4
Average: 3.5 (6 votes)

 

சார்ட் பேப்பர்
சிவப்புநிற வெல்வெட் துணி
கிச்சன் க்ளாத் அல்லது பெல்ட் துணி - மஞ்சள்நிறம்
பெவிக்கால்
பேப்பரிக் க்ளூ
பூ வடிவ சம்கி - 6
கோல்டுநிற வட்ட வடிவ சம்கி - 28
சில்வர்நிற கிலிட்டர்ஸ்
லேஸ்
கத்தரிக்கோல்
சம்கி லேஸ்
ஸ்டாஃப்ளர்
கோல்டன் மணி - 6
உல்லன் நூல்

 

சார்ட் பேப்பரை 28 செ.மீ அகலம், 34.5 செ.மீ நீளத்தில் நறுக்கி வைக்கவும். கிச்சன் க்ளீன் செய்வதற்கு பயன்படுத்துகிற இந்த துணி மிகவும் லேசான பெல்ட் துணி மாடலில் இருக்கும். இதுப்போன்ற துணி இல்லையெனில் பெல்ட் துணி அல்லது பெல்ட் பேப்பரை பயன்படுத்தி கொள்ளலாம்.
28 செ.மீ அகலம், உயரத்தின் அளவு 11. 5 செ.மீ என்ற அளவில் கிச்சன் க்ளாத்தில் 2 துண்டுகளும், வெல்வெட் துணியில் ஒரு துண்டுகள் நறுக்கி வைக்கவும்.
ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள சார்ட் பேப்பரில் மேலும், கீழும் பெவிக்கால் தடவி மஞ்சள் நிற கிச்சன் க்ளாத்தை ஒட்டவும்.
அதன் நடுவில் பெவிக்கால் வைத்து சிவப்புநிற வெல்வெட் துணியை ஒட்டி நன்கு அழுத்தி விட்டு சிறிது நேரம் காயவிடவும்.
இதன் ஓரங்களில் பெவிக்கால் வைத்து உருளை வடிவமாக சுருட்டி ஒட்டிவைக்கவும். இது எளிதில் ஒட்டிக் கொள்ளாது. சிறிது அதிகமாகவே க்ளூ தடவி நன்கு அழுத்தி ஒட்டி விட்டு, ஒட்டிய இடத்தில் (குழாயின் உள்ளே) ஏதேனும் கனமான பொருட்களை காயும் வரை வைத்திருக்கவும். நன்கு ஒட்டிக் கொண்டதும் எடுத்து விடலாம்.
குழாயின் துணி ஒட்டிய இடத்தை அலங்கரிக்க இதுபோன்ற மெல்லிய லேஸை க்ளூ தடவி ஒட்டி விடவும்.
சம்கி பூக்களை மஞ்சள்நிற துணி ஒட்டிய இடத்தில் நடுவில் இடைவெளி விட்டு மேலும், கீழும் மூன்று மூன்று பூக்களை ஒட்டி விடவும். வட்டவடிவில் உள்ள கோல்டுநிற சம்கியை வெல்வெட் துணியின் மேல், கீழ் ஓரங்களை சுற்றி நெருக்கமாக ஒட்டவும்.
சிவப்பு வெல்வெட் துணியில் 11.5 செ.மீ நீளம், 4.5 செ.மீ அகலத்தில் ஐந்து துண்டுகள் நறுக்கி வைக்கவும். அந்த துண்டுகளில் 7 செ.மீ அளவுக்கு விட்டுட்டு கீழே "v" வடிவில் நறுக்கி விடவும். சம்கி லேஸை இந்த துணியின் ஓரங்களில் அதன் வடிவத்திற்கேற்ப ஒட்டி அலங்கரிக்கவும்.
குழாயின் அடிப்பகுதி முழுவதும் 2.5 செ.மீ அளவுக்கு க்ளூ தடவி சம்கி லேஸ் ஒட்டிய வெல்வெட் துணியை இதில் வரிசையாக ஒட்டி விடவும். இது காயவதற்கு சிறிது நேரம் ஆகும். க்ளூ ஒட்ட விரும்பாவிட்டால் ஸ்டாஃப்ளர் கொண்டு ஒவ்வொரு துண்டுகளின் இரு முனையிலும் பின் செய்யவும்.
மீண்டும் வெல்வெட் துணியில் 10 செ.மீ x 5 செ.மீ அளவில் 4 நான்கு துண்டுகள் எடுத்துக் கொண்டு படத்தில் உள்ள வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
இப்போது குழாயின் மேல் ஓரத்தில் இந்த வெல்வெட் துண்டுகளை இடைவெளி விட்டு வைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். ஸ்டாஃப்ளர் பின் தெரியும் இடத்தில் கிலிட்டர்ஸால் டிசைன் செய்து விடவும்.
நான்கு துண்டுகளின் மேல் முனைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஸ்டாஃப்ளர் பின் போடவும். தேவையான அளவு உல்லன் நூலை எடுத்துக் கொண்டு இணைத்திருக்கும் வெல்வெட் துணியில் இடையில் விட்டு மற்றொரு முனை வழியாக வெளியே எடுக்கவும். இப்போது இரண்டு நூலின் முனையில் மூன்று மூன்று பெரிய கோல்டன் மணியை கோர்த்து முடிச்சுப்போட்டு வைக்கவும்.
சார்ட் பேப்பரில் செய்யக்கூடிய எளிமையான தோரணம் ரெடி. ஜோடியாக செய்து வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். வரும் வாரங்களில் நவராத்திரி தொடங்க இருப்பதால் இதுப்போல் தோரணம் அவரவர் விரும்பிய அளவில் செய்து ப்ளாஸ்டிக்கில் கிடைக்கும் சிறிய சாமி சிலைகளை தோரணத்தில் ஒட்டி அலங்கரித்து பூஜை அறையில் தொங்க விடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சிம்பிள் ஐடியால, கிராண்ட் வால் ஹாங்கிங்...... அழகான யோசனை. வாழ்த்துக்கள் டீம்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தங்கள் வாழ்த்திற்கு நன்றி சுகந்தி.

சீசனுக்கு ஏற்றமாதிரி பண்ணிக் காட்டி இருக்கீங்க டீம். அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

வாவ்...சூப்பரான ஐடியா.தோரணம் ரொம்ப அழகா செய்து காட்டி இருக்கீங்க.எல்லாருக்கும் புரியும்படியான விளக்கம்...அருமை.அறுசுவை குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

ரொம்ப அருமையான ஐடியா, அழகான படைப்பு, சூப்பர் தோரணம்! வாழ்த்துக்கள் டீம்!

அன்புடன்
சுஸ்ரீ

இமாம்மா தங்கள் பதிவிற்கு நன்றி. இந்த க்ராஃப்ட் செஞ்சதே நவராத்திரிக்காகதான். இனிவருவதும் நவராத்திரி ஸ்பெஷ்லாதான் இருக்கும்.

ஹர்ஷா, சுஸ்ரீ தங்களின் வாழ்த்திற்கு நன்றி. இந்த மாதிரி தோரணம் துணிகளில் செய்து கோயில் திருவிழாகள், தேர்களில் பெரிதாக கட்டி தொங்கவிட்டு இருப்பாங்க. சாட்டின் துணி, முழுவதும் வெல்வெட் துணி, கார்ட்போர்ட் அட்டையை பயன்படுத்தி செய்யலாம். இது அதிக பொருள் செலவு இல்லாமல் மிக எளிமையாக செய்துவிடலாம்.

Hi friends...

I am new to arusuvai..
I am in US.. I can do all types of beauty face makeup, hair massage and henna, Highlights all color and full color, facials Like organic fruit facials..

If you want any enquiry please contact me @ roobikk@gmail.com

Roobini Ganesh

Please யாராவது சொல்லுங்க .

எனக்கு கைவினை பகுதியில் வரும் பல crafts பிடிசிருகு.

அதை விருப்பமான பகுதி,மற்றும் விருப்பமான விளக்கபட பகுதியில் செற்பது எப்படி.

Pls Pls Pls anyboby answer