சுறா கருவாடு பற்றிய சந்தேகம்...

தோழிகளே எனக்கு இந்த சுறா கருவாட்டில ஒரு சந்தேகம் வெளி நாட்டில மட்டும் இல்ல நம்ம ஊரிலேயே நமக்கும் தெரியாம தவறு நடக்கும் இது எப்படி பார்த்து வாங்கறதுன்னு!!!
எப்படியோ நம்ம ஊரில நல்லா பார்த்து வாங்கி (கண்டிப்பாக அது சுறா தான்).
இங்கே கொண்டு வந்து சமைத்தால் ஒரே "கசப்பு" அது ஏன்னு தான் எனக்கு தெரியல! தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க... கசப்பு தன்மை எப்படி நீக்கலாம்? கொஞ்சம் சொல்லுங்க.
ஆனால் கருவாடு வாங்கும் பொழுது நல்லா ஈரம் அதை நன்றாக காயவைத்து விட்டோம் அதில் தோல் மட்டும் கொஞ்சம் உள்ளது. இது தான் நிலை. காரணமும் எப்படி நீக்கலாம் என்றும் தெரிந்தவங்க சொல்லுங்க... தெரியாதவங்களும் அக்கம் பக்கம் யாராவது பெரியவங்க இருந்தால் கேட்டு சொல்லுங்களேன்!!!

சுறா கருவாடு - ஏன் இப்படி கசக்கிறது!!!

கருவாடை புளிச்ச மோரில் 10 நிமிடம் ஊற வைத்து கழுவி செய்து பாருங்களேன்.. எனக்கு அந்த அனுபவம் இல்லை.. பக்கத்தில் பெங்காலி ஒருவர் சொன்னார்.. பெங்காலி தான் மீன், கருவாடு இல்லாமல் இருக்க மாட்டாங்களே.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா... ரொம்ப நன்றி. ஆமா பெங்காலிங்க கண்டிப்பாக மீன், கருவாடு இல்லாம இருக்க மாட்டாங்க!!! என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் ஊருக்கு போயிட்டாங்க இரண்டு குடும்பம் அதனால எனக்கு இப்போ யாரும் பக்கத்தில கிடைக்கல.

கண்டிப்பா மோரில ஊற வச்சு கழுவிட்டு செய்து பார்க்கிறேன். இதே டெக்னிக் லெமன் ஜூஸ், விநிகருக்கும் வொர்க் பண்ணும் இல்ல! ஒவ்வொன்னா
ட்ரை பண்ணனும். ஆனா இந்த தோலை என்ன பண்ணறது யாராவது சொல்லுங்களேன்.

வேற யாருக்காவது ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்களேன்!!!

உமா,

கொஞ்சம் கெமிக்கலாக பதில் சொல்லுறேன்..
பொதுவாகவே கசப்பு தன்மையை குறைக்கும் தன்மை tartaric acid ,metatartaric acid மற்றும் ascorbic acid போன்றவற்றிற்கு உண்டு.இதில் தான் hydroxyl ions குறைவாக ரியாக்ட் ஆகும்.

அதனால் இந்த ஆசிட்ஸ் அதிகமா உள்ள பொருட்களை கொண்டு கசப்பு தன்மையை குறைக்கலாம்.புளி தண்ணீர்,எலுமிச்சை,ஆரஞ்சு,புளிப்பு grape fruit,apple cidar வினிகர் இதெல்லாம் workout ஆகும்.அப்புறம் tartaric salts (potassium bitartarate ) இந்த சால்ட் இங்கு உள்ள winery section -இல் இருக்கும் அல்லது kombucha salt என்று கூட கிடைக்கும்,ஊறவைத்தால் கசப்பு கண்டிப்பாக குறையும்.
இதெல்லாம் fermenting agents மற்றும் antimicrobials தான் அதனால் கண்டிப்பாக ஒன்றும் ஆகாது.Keep trying !!

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா ரொம்ப நன்றி... நீங்க சொன்னது கொஞ்சம் புரியுது... ஆனால் கவலை படாமல் இருந்தேன்... ஏன்னா என் கெமிஸ்ட் வீட்டுக்கு வரட்டும்ன்னு தான்... அவங்க லேப்பில ஏதாவது(எல்லாமே) இருக்கும்... கொண்டு வர சொல்லலாம்ன்னு கேட்டா....... வழக்கமா ஒரு துரும்பு கூட லேப்பில இருந்து வீட்டுக்கு வராது. அதனால புளி, மோரு, வினிகர், லெமன் இவற்றையே யூஸ் பண்ணுன்னு சொல்லியாச்சு!!!

மீனை அறுக்கும் போது குடல் எடுத்து காய வைக்கும் போது அதன் பித்தப்பை அறுபட்டிருந்தால் அதன் கசப்பு அதன் உடம்பில் சார்ந்துவிடும் படு கசப்பாய் இருக்கும் ஒன்னும் செய்ய முடியாது வயிற்றுப்பகுதியை எரிந்துவிட்டு வால் பகுதியை சமைக்கலாம் ஓரள்வுக்கு ஒன்னும் தெரியாது

உமா,

ரபியதுல் சொன்னது உண்மைதான்; பித்தம் பட்டிருந்தால் கசப்பு இருக்கும்.

கவிதா சொன்ன மாதிரி செய்யுங்க. பிறகு புளி அதிகம் சேர்த்த டிஷ் ஏதாவது சமைக்கலாம். பாவற்காயே சாப்பிடுகிறோம். தக்காளி சேர்த்து சமைத்துப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி பசரியா மற்றும் இமா. எனக்கு இப்படி ஒரு விஷயம் இருக்கிறதே தெரியாது. இதை பற்றி சொன்னதும் தான் வீட்டில கேட்டா...மீனுக்கு அப்படி உண்டு என்று சொன்னாங்க.
இது தான் காரணமா இருக்குமோ என்று இப்போ எல்லோரும் யோசிக்கிறோம். சரி மேலே உள்ள சில முறைகளில் ஊறவைத்து கழுவி சமைத்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்