ஆசிரியர் தினம்

இன்று சர்வதேச ஆசிரியர் தினம் . வாருங்கள் பகிர்ந்து கொள்வோம் உங்களுக்குப்பிடித்த ஆசிரியர் பற்றி.....
///மறவாதே.....
நெஞ்சத்தில் அறிவதை விதைக்கும்
அறியாமை இருளை அகற்றும்
ஆசானை என்றும் மறவாதே.

பொல்லாத பொறாமை தவிர்த்து
இன்னல் செய்தவரையும் உவக்கும்
நற்குணம் கொண்ட பெருந்தகையை
போற்றிட நீயும் மறவாதே.

உன் புகழ் பாரினில் பரிணமிக்க
ஏணியாய் இருந்துன்னை உயர்த்திட்ட
பெரியார் சேவையை மறவாதே

தன் சேயாய் உனை அரவணைத்த
தன்னலமற்ற ஆசானை
கண்ணியப் படுத்த மறவாதே

ஏட்டுக் கல்வி மட்டுமின்றி
உலகை அறிய பலவகையில்
உதவிகள் செய்த உத்தமரை
நினைத்திட நீயும் மறவாதே....

- பூங்காற்று

எனக்கு 7ம் தரத்தில் தமிழ் கற்றுத்த்தந்த ஆசிரியரை ரொம்ப பிடிக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் படி நடைமுறை விடயங்களை வைத்து விள்க்கம் சொல்வார், எங்களுக்கு ஏதாவது பாடத்திற்கு ஆசியர் ஒருவர் வராதவிடத்து அந்த ஆசிரியரை அதிபர் எங்கள் வகுப்புக்கு அனுப்பினால் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ் சம்பந்தப்பட்ட நிறைய போட்டிகள் வைப்பார் . அப்போதே எனக்கு கவிதை கொடுத்து அதற்கு நயம் எழுதச் சொல்வார் இப்போதையா எனது கவிதைகளுக்கு அவர் தமிழ் மீது எனக்கு காட்டிய ஆர்வமும் காரணமாகும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

முதலில் இந்த அறுசுவையில் எனக்கு அக்கா ப்ளஸ் ஆசிரியராக இருக்கும் இமா அவர்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
மேலும் எனக்கும் தமிழை கனியாக புசிக்கவைத்த ,மறைந்த என் முதல் தமிழ் ஆசிரியர் சொக்கலிங்கபிள்ளை அவர்களுக்கும்,என் மேல் அக்கறை கொண்டு எனக்கு அடிக்கடி அறிவுறை சொன்ன இயற்பியல் சார் மனோராஜ்,ஷெரின் டீச்சருக்கும் என் மனம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பு இமா டீச்சருக்கும் அருசுவையில் முன்பு அரட்டைக்கு வரும் ரங்கா டீச்சருக்கும் என் வாழ்த்துக்களே தெரிவித்து கொள்கிரேன்
7ஆம் வகுப்பில் நான் பெரிய பொண்ணா ஆகவும் அம்மா ஸ்கூல் அனுப்பலை பாதுகாப்பாக பாத்து கொல்கிரேன் உங்க பொன்னை என்னை நம்பி அனுப்புங்க என் பிள்ளே போல் பாத்துகொல்வேன் என்று வீட்டுக்கே வந்து எனக்காக பரிந்து பேசுன என் சார் பொண் பாஸ்க்கரன் சார்க்கு என் அன்பான வாழ்த்துக்கள்
6ஆம் வகுப்பில் முதல்முதலா கண்ணத்தில் அரை குடுத்த கண்க்கு டீச்சர் மேரி அவகளுக்கும் ஜேம்ஸ் சார் எப்ப பாத்தாலும் என்னை சொல்லுவார் ரெம்ப துருதுருன்னு இருக்கியே பாடம் எடுக்கையில் எதயும் மன்டையில் போட்டுர மாட்டியே என்று கேக்கும் ஜேம்ஸ் சாருக்கும் என் வாழ்த்துக்கள்
என் அம்மாவின் கூட்டாலி என் 1ஆம் வகுப்பு டீச்சர் செவ்வாக்கியம் டீச்சருக்கும் 5ஆம் வகுப்பு டீச்சர் சுலோஸ்னா டீச்சர் வாழ்க்கையில் நான் நன்றியுடன் இருக்கனும்னா இந்த டீச்சருக்கு இருக்கனும் பெரிய பயனை மாசமா இருக்கையில் கேள்வி பட்டு எனக்கு கருனை கிழங்கு புளிகரி மீன் கட்லட் இரச்சியே பூண்டு சின்ன வெங்காயம் போட்டு தனியா பிரட்டி வகை வகையா ஊருகாய் செய்து அவுங்க வேர ஊர் பசில் கொண்டு வந்து ஸ்கூல் பிள்ளேகலிடம் குடுத்து விடுவாங்க அதில் ஒரு சீட்டு இருக்கும் அதில் உனக்கு என்ன வேனுமோ ஒரு சீட்டி எழுதி அனுப்பு நான் குடுத்து விடுவேன் என்று அந்த சுலோஸனா டீச்சருக்கு என் பனிவான வாழ்த்துக்கள்
எங்க வாடகை வீடுகளில் ஒரு வீட்டில் வாடகைக்கு வந்து மதுரையில் இருந்து குடி வந்து என் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து என்னை பிள்ளை போல் பாத்து கொண்ட சாந்தி டீச்சர் அவர்களுக்கும் என் கண்ணீர் கலந்த வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இமா டீச்சர் க்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ..:)))))))))))))))))))))))))))

எந்தப்பகுதியில் சந்தேகம் கேட்டாலும் உடனே வந்து பதில் அளிக்கும் அன்பு இமா டீச்சருக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் .அத்துடன் அறுசுவையில் நான் அறியாத ஆசிரியர்கள் யாரவது மிருந்தால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அன்பு இமா, மற்றும் அறுசுவையில் உள்ள(யாரேனும் இருந்தால்) அனைத்து ஆசிரியை, ஆசிரியர்களுக்கும், எனது அ‌ன்பான‌ ஆசிரிய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்!!

இந்த‌‌ ந‌ல்ல‌ நாளில், என‌க்கு சிறுவயதில் சிறப்பாக பாட‌ம் க‌ற்ப்பித்த, பின் என் பள்ளி, கல்லூரி தினங்களில் திறம்பட பாடம் நடத்திய அனைத்து ஆசிரிய‌ப் பெரும‌க்க‌ளுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றியையும் மான‌சீக‌மாக‌ தெரிவித்துக் கொள்கிறேன்!

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்