காய்சல்,வயத்து போக்கு,வான்தி.அவசரம்.பதில் உடனே வேன்டும்

ஹாய் தோழி,
என் மகலுகு 11 மாதம்.2 நாலக காய்சல்,வயத்து போக்கு,வான்தி.டாக்ட்ர் சென்ற வுடன் காய்சல்,வான்தி நின்று விட்டது.ஆனால் இப்பொ பச்சை நிறதில் loose ஆக மோசன் போகிரால். நெஸ்டம் ரய்ஸ்,Zerolac,ORS கொடுகிறேன்.தண்ணீர் கொடுதலும் உடனே வெலியே வருகிரது.ஏன்ன செஇவது.

சுமதி,
முதலில் பதட்டப்படாதீர்கள் அதுகடினம்தான்.ஆனாலும் சொல்கிறேன்...குழந்தை அடிக்கடி துனி நனைக்கிறாள் என சங்கடமும் படாதீர்கள்.
காய்ச்சல்,வயிற்றுப்போக்கு வந்தபிந்தான் மருத்துவரைப்பார்த்தீங்களா...???
அப்படிதான்னா,அவர் கொடுத்த மருந்துகளை தொடர்ந்து கொடுக்கவும்.அதாவது அவர் 5நாள் முழுதும் கொடுக்க சொல்லியிருப்பார்,நாம் 2நாளில் வயிற்றூப்போக்கு நின்றூவிட்டது அல்லது கொஞ்சம் சரியாகிடுத்துன்னு மருந்தை நிருத்தியிருப்போம்.அப்ப அந்த கிருமிகள் முழுதா அழிக்கப்பட்டிருக்காது.அதனால் மறுபடியும் வயிற்றுப்போக்கு வந்திருக்கும்....

காய்ச்சல் அதிகமிருந்தால் சிறிய துணியை பச்சை தண்ணீரில் நனைத்து பிழிந்து கொண்டு தலை,அக்குள்,தொடை சந்து,அடிவயிரு போன்றா இடங்களில் துடைத்துவிடுங்கள்,ரொம்ப கெட்டியாக துணி போடவேண்டாம்,இப்படி செய்தாலே 2டிகிரி காய்ச்சல் குறாஇந்துவிடும்.பின் டாக்டர் கொடுத்த காய்ச்சல் மருந்தை கொடுக்கவும். அவர் 5எம்.எல் கொடுக்க சொன்னால் நீங்கள் 4குடுங்கள் போதும்.மேலும் மருந்து 6மணிநேரம் இடைவெளிவிட்டு அடுத்த டோஸ் கொடுக்கனும்.அதற்கு முன் கொடுக்குமாறு இருந்தால்(அதிக காய்ச்சலோ,அல்லது மருந்து கொடுத்தும் காய்ச்சல் குறையலைன்னா) இன்னும் கம்மியா 2எம்,எல் கொடுங்கள் போதும்....... குழந்தை பக்கத்தில் யாராவது இருந்து கொண்டே இருங்கள்.....நன்கு தூங்க செய்யுங்கள்.......

நெஸ்ட்டம் போன்ற உணவுகளை கொடுக்கவேணாம், 11மாதம் ஆகிடுத்துள்ள நல்ல குழைய வைத்த சோறுடன் பருப்பை நன்கு மசித்து கொடுங்கள்,அரிசியை பொடித்து கஞ்சி செய்து லிக்விட்டா ஸ்பூனில் கொடுக்கலாம்,நீங்கள் பால் கொடுத்தால் அதைத் தொடரலாம்.மேலும் டாக்டர் பவுடர் மருந்து கொடுத்திருப்பாரே(நீரில் கலந்து க்4நாள் கொடுக்கசொல்லி )அதை முழுதாக கொடுங்கள்...

காய்ச்சல் மருந்து காய்ச்சல் இருந்தால் மட்டும் கொடுங்கள்.....வெயில் காரணமாக இப்படி போகும். அரிசிமாவுடன் கொஞ்சம் பொட்டுக்கடலை பொடித்து இரண்டையும் கஞ்சி செய்து கொடுக்கலாம்....இதுவும் டாக்டர் சொன்னதுதான்.......டாக்டர் எலக்ட்ரோபியான் பவுடர் கொடுத்திருப்பாரே.....(உடலின் நீர்பதம் குறாஇயாமலும்,அடிக்கடி மலம் போவதால் கலைத்துப்போகாமல் இருக்கவும் ஆரஞ்சு டேஸ்டில் கொடுத்திருப்பார்)இதை சிறிதுசிறிதாக வெதுவெதுப்பான நீரில் அடிக்கடி கொடுக்கவும்.

சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது இப்படி ஆகும்..சுத்தமான தேன் கிடைத்தால் கொஞ்சம்போல (ஒருவிரலில் எடுத்து) நாவில் தடவி விடுங்கள். மற்றபால் கொடுக்கவேண்டாம். வயிற்று உபாதைகள் இருக்கும்போது மற்றபால்(தாய்பால் தவிர) போன்றூ கொடுத்தால் எளிதில் ஜீரணம் ஆகாது. இட்லியை தேனில் தொட்டு கொடுக்கலாம்.......இன்னும் 2நாள் அப்படியேவோ,அல்லது அவள் கலைப்படைவதுபோல தோன்றினால் டாக்டரை பாருங்கள்.......

அவளுக்கு உபயோகிக்கும் டம்ளர்,ஸ்பூன் ,டவள் போன்ற பொருட்களை தனியாகவும் சுடுஎநீர் கொண்டும் அலசி வைக்கவும். உங்கள் கைகள்,நகங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.......
சீக்கிரம் குணமாயிடுவா.........சரியா....:))

நன்றி ரேனு.மருந்து நிருத்த இல்லை.அப்படி தான் போகுமா.பல் முழைகிரது

ஆமாம் சுமதி,
பல் முளைக்குதா குட்டிக்கு? எதுக்கும் டாக்டரிடம் நெஸ்டம்,செர்லாக் கொடுக்கலாமான்னு கேட்டுக்கங்க,என் கருத்துப்படி இரண்டுவாரங்களுக்கு தேவையில்லைன்னுதான் சொல்லுவேன், பருப்பு,சாதத்தை நன்கு குழையவைத்து கொஞ்சம் உப்பு போட்டு நன்கு மசித்து கொடுத்தாலே போதும் சத்தும் கிடைக்கும்,ஜீரணம் நன்கு ஆகும்,பருப்பு வயிறு கட்டவைக்கும்...அரிசி,பொட்டுகடலை கஞ்சி கொடுக்கலாம். என் மகனுக்கு இப்படிதான் செய்தேன்...

ஒ கே ரேனு.டாக்டர் தான் நெஸ்டம் கொடுக்க சொன்னார்.பருப்பு கொடுத்து பார்கிறேன்..டாக்டர் ட போன் பன்னினோம்,நீங்க சொன்னதே சொன்னார்.thanks pa.ஹெல்ப் கு யாரும் இல்ல.அதனால் பயமா இருந்தது.நீங்க சொன்னவுடன் கொஞ்சம் பர வால

சுமதி என் அம்மா பெயர்,
நீங்க எங்க இருக்கீங? நான் சொன்னது என் மகனுக்கு வந்து அனுபவத்தில் தெரிந்து கொண்டதுப்பா. போன மதம்கூட அவனுக்கு நீங்கள் சொன்னதுபோல வந்தது.கிளைமெட் சேஞ்ச் காரணமாக .அம்மாகூட பயந்தாங்க,2நாள் பார்த்துவிட்டுதான் ஹாஸ்பிடல் போனேன்.....சரியாகிடும் கவலைப்படாதேப்பா....

உங்க மகளுக்கு காய்ச்சல் குறைய மருந்தும், கூடவே ரேணு சொன்னது போல் நீர் கொண்டு துணீயால், அல்லது ஸ்பாஞ்சால் துடைத்து விடவும். சுடான நீர் அல்லது ஐஸ் வாட்டர் வேண்டாம். சாதாரண ரூம் டெம்பெரேச்சர் நீர் போதும். காற்றோட்டமா படுக்க வைங்க.

பச்சை நிற ஸ்டூல் இன்ஃபெக்‌ஷன் தான் காரணம். டாக்டர் கொடுத்த மருந்தை தொடருங்க. நிக்க 1 வாரம் ஆகும், லூஸ் மோஷன் நிக்க மருந்து கொடுத்தா உள்ளே இருக்கும் கிருமி போகாது. அதனால் விட்டுடுங்க. வாந்தி நின்னுடுச்சுன்னா நல்லது... உணவு கொடுங்க, நீர் நிறைய கொடுங்க. இளனீர் கொடுங்க. டிஹைட்ரேட் ஆகாமல் பாதுகாக்கும். பழங்கள், பால், தயிர், இனிப்பு இவற்றை தொடவே கூடாது. இது டயரியாவை அதிகப்படுத்தும். கஞ்சி, மோர் போன்றவை கொடுக்கலாம்.

soya based மில்க் டின்கள் கிடைக்கும். அதை வாங்கி டயரியா நிக்கும் வரை பயன்படுத்துங்க. இதில் லாக்டோஸ் இல்லை... அதனால் இந்த நேரத்தில் நல்லது. யூரின் மட்டும் சரியா பொறாளா என்று கவனிங்க. 4 - 5 முறை போனால் பிரெச்சனை இல்லை... 1 - 2 முறை ஆனால் உடனே மருத்துவரை அனுகுங்கள். ஃப்லூயிட்ஸ் ஏற்றுவாங்க. கவலை வேண்டாம்... இன்ஃபெக்‌ஷன் தான்... சரி ஆகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேனு நாங்க சென்னை ல இருகோம்.இப்பொ தான் பதில் அனுப்ப முடிந்தது.

வனிதா யுரின் நல்லா போரா.புட் பாய்சன் நு டாக்டர் சொன்னார்.நன்றி

மேலும் சில பதிவுகள்