எனது மனைவி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள் -சௌமியன்

அன்பு உள்ளம் உடைய அறுசுவை தோழிகள் அனைவருக்கும் சௌமியன் நின் வணக்கம் .எனது மனைவி தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் பிரச்சனை அனைத்தும் நிவர்த்தி ஆகி தாய்மை பேறு அடைந்து உள்ளார்கள்.எங்களின் நிறைய doubts களை இங்கு தோழிகள் ஆகிய உங்களிடம் கே ட்டு அறிந்து கொண்டோம்.மற்றும் நிறைய தோழிகள் எங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னார்கள் .உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் இந்த சமயத்தில் எங்களின் மனம் நிறைந்த நன்றிகள் .தாய்மை பேறு பற்றி மருத்துவர் போல சொல்லும் தோழிகள் உள்ள இந்த தளத்தில் நானும் உறுப்பினர் என்று சொல்வதில் உள்ளம் மகிழ்கிறேன். எங்களுக்கு நல்ல படியாக பாப்பா பிறக்க தங்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வதங்களையும் வேண்டி நன்றியுடன் விடை பெறுவது உங்கள் சௌமியன்

ஐ சௌமி அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது. ரொம்ப நாள் காத்திருந்தற்கு ஒரு பலன் கிடைத்து விட்டது. மிக்க மகிழச்சி. நல்லபடியாக அண்ணிக்கு குழந்தை பிறக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். சீக்கிரம் பெரிய டீரிட் வைக்க வேண்டும். வாழ்த்துகள் அண்ணா. அண்ணிக்கு சொல்லிவிடுங்கள். அண்ணியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரொம்ப சந்தோசமான விஷயம் சொல்லி இருக்கீங்க, எங்களுடைய வாழ்த்தை உங்கள் மனைவிக்கும் சொல்லிடுங்க, ஆரோக்கியமான அழகான, அறிவான குழந்தை பிறக்க இறைவனை வேண்டுகிறேன்....

சரியான நேரத்திற்கு சாப்பிட சொல்லுங்கள், இரும்பு சத்து மற்றும் சத்தான உணவுகளை தாங்க. சில விஷியங்கள் அவங்க சொல்லியும், சிலதை அவங்க சொல்லாமலும் புரிந்து சந்தோசமான மனநிலையோட வைத்து கொள்ளுங்கள்.அதுவே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முதல் படி.
சில மாதங்களுக்கு ட்ராவல் அதிகமாக பண்ண வேண்டாம், உடலுக்கு சூடு தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பர்... நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க... இறைவன் என்றும் துணை இருப்பான்... நல்லபடியா குழந்தையை பெற்றெடுக்க என்றும் எங்கள் பிராத்தனைகள் உண்டு. கவலை இல்லாம, மனைவியை நல்லா பார்த்துக்கங்க. இப்போ நீங்க அவங்க மேல காட்டும் அன்பு தான் அவங்களையும் உள்ளே இருக்க உங்க குழந்தையையும் ஆரோக்கியமா வைக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சந்தோஷமான செய்தியோடு வந்திருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

வாழ்த்துகள் அண்ணா அண்ணிய பத்திரமா பாத்துக்கோங்க அவங்கள சந்தோஷமான மனநிலையில் வைச்சிகோங்க குட்டி பாப்பாவ பாக்க நாங்களும் ஆவலா காத்திருக்கோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தாய்மை அற்புதமான விஷயம். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹை செளமியன் அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷமான செய்தி சொல்லி இருக்கீங்க உங்களுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.
அண்ணிய நல்லா கவனிச்சுக்கோங்க டாக்டர் சொல்படி நடத்துங்கோங்க அண்ணா. நல்லா சத்தான உணவுடன் சரியான தூக்கம் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுங்க அண்ணா. சீக்கிரம் ஒரு குட்டி பாப்பாவின் வரவை எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்

ரொம்ப சந்தோஷமான செய்தி சொல்லிருக்கீங்க :-) வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

செளமியன் அண்ணா நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்.

ரொம்ப சந்தோசமான விஷயம் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் உங்க பாப்பா நல்ல படியா பிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் by Elaya.G

மேலும் சில பதிவுகள்