குழந்தைகள் விளையாட்டுக்கள்

வணக்கம் தோழிகளே.எனக்கு 1.5 வயது மகன் உள்ளான்.அவனுடன் நாம் என்ன மாதிரி விளையாட்டுக்கள் விளையாடலம்.அவனுக்கு பொம்மை எல்லாம் பிடிகவில்லை.CD போட்டால் கொஞ்ச தான் பார்பான்.இங்கு பக்கத்தில் குழந்தைகள் யாரும் விளையாட இல்லை.அவனுக்கு என்ன சொல்லி கொடுக்கலாம்...உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்...

நல்ல ஒரு இழை..நீங்க நல்ல அம்மா கூட..டிவி அதிகம் போட்டு விட வேண்டாம்.ஒளிஞ்சு விளையாட ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு.பெரிய பெரிய படம் போட்ட புத்தகத்திலிருந்து குட்டி கதை சொல்லி கேக்க ரொம்ப பிடிக்கும்.ஒரே மாதிரி ஒருக்கும் ரெண்டு மூணு கூட்டி பொம்மைகளை முன்னாடி வைத்து கைய்யால் மறைத்து ஒன்னு ரெண்டு பொம்மையை எடுத்து விட்டால் தேடுக்றாங்களான்னு பாருங்க..சில குழந்தைகள் மனசுக்குள் கணக்கு கூட வச்சிருக்கும்.
என் மகனுக்கு கிச்சன் செட் வைத்து விளையாட ரொம்ப புடிக்கும்...டாய்ஸை வாங்கி போட்டுட்டு சும்மா இருக்க கூடாது கூட விளையாடும்போது தான் எப்படி விளையாட வேண்டும் என்று தெரியும்..தோசை சுட்டு காமிங்க,டீ போட்டு காமிங்க..என் மகன் தோசை போல கைய்யால் சுத்தி சுத்தி அதை திருப்பி போட்டு கரண்டியில் எடுத்து எனக்கு தட்டில் போட்டு தருவது போல டீ போட்டு கப்பில் போட்டு தருவது போல பாவனை செய்வான்;-)
ஸ்கிப் ஸ்கிப் ஸ்கிப் டு மை லூ சொல்லி குதித்தால் ரொம்ப இஷ்டம் நமக்கும் உடம்பும் போன மாதிரி ஆச்சு...ஆக்ஷன் நிறைய வருவது போல பாட்டு பாடினால் ரொம்ப இஷ்டம் ..மிருகங்கள் ஓசை எழுப்புவதை கொண்ட பாட்டுக்களும்,எண் எழுத்து அடங்கிய பாட்டுக்களும் பாட பாடமும் மனசில் பதியும்.
அப்பப்ப டப்பில் போட்டு தண்ணியில் உல்லாசமாக விடலாம்..ரொம்ப இஷ்டமாக அடித்து விளையாடுவார்கள்..
பால் பிடிக்காத குழந்தைகளே இருக்காது..பாளை எரிந்து பிடித்து விளையாடலாம்..துணியாலான பாள் கிடைக்கிறதே குழந்தைகளுக்கு.இப்படியெல்லாம் விளையாடும்போது கேட்ச் த்ரோ ஜம்ப் இப்படி குட்டி குட்டி வார்த்தகள் படிக்க வைக்கலாம்..வீட்டில் நாம தாய்மொழியில் பேசினாலும் பள்ளியில் போனதும் சுத்தமாக ஒண்ணுமே தெரியாமல் குழந்தைகள் விழிக்கக் கூடாதல்லவா
ஓடி புடிச்சு விளையாட ரொம்ப புடிக்கும்.இதுக்கு மேலயும் நேரம் போலயா..தினம் ஒன்னு ரெண்டு மணிநேரம் ப்லே ஸ்கூள் விடலாம்

Mam , You can play games like chess ,carom , Track games . Avoid the television . Be friendly and active too.

ஹை... குட்டீஸ் விளையாட்டா... தளிகா எல்லாத்தையும் அடுக்கிட்டாங்க.. நான் எதை சொல்ல... ;)

இருந்தாலும் என் குட்டீஸ் விளையாட்டை நான் சொல்றேன்...

1. சைக்கிள் ஓட்டுறது. பெடல் போட தெரியாத வயசுல அதை தள்ள சொல்லி நம்மை கூப்பிட்டு கூட வெச்சுக்குவாங்க.

2. ஷேப்ஸ், ஃப்ரூட்ஸ், பாடி பார்ட்ஸ், கலர்ஸ் என நிறைய கத்துக்க கூடிய போர்ட் கேம்ஸ் கடைகளில் கிடைக்கும்.. அதை வாங்கி கொடுத்திருக்கேன்... முதல்ல தெரியாம தான் முழிச்சாங்க... அப்பறம் நாம கூட விளையாடினா பார்த்து கத்துகிட்டு நிமிஷங்களில் ஒரு போர்டை முடிச்சு நம்ம கை தட்டலை எதிர் பார்ப்பாங்க.

3. ப்லாக்ஸ் வாங்கி கொடுக்கலாம்... வித விதமா அதை அரேஞ் பண்ண சொல்லி கொடுக்கலாம்.

4. தளிகா சொன்ன மாதிரி ரைம்ஸ் போட்டு காட்டி சும்மா டிவி முன்னாடி உட்கார வைக்காம அது கூடவே நாமும் பாடி ஆக்‌ஷன் காட்டி ஆடினா ரொம்ப ரசிப்பாங்க... நிறைய வார்த்தைகள் கத்துக்குவாங்க.

5. நல்ல கலர் கலரா படமிருக்க புக்ஸ்... பயங்கர இண்ட்ரஸ்ட் குழந்தைகளுக்கு... நாம கூடவே உட்கார்ந்து சொல்லி குடுக்கனும், கதைகள் சொல்லனும் (எக்ஸ்ப்ரஷனோட...).

6. யானை குதிரை என முதுகில் ஏற்றி சுற்றி வரலாம்.

7. வரைய கலர் அடிக்க சொல்லி கொடுக்கலாம்.

8. சில குட்டீஸ்க்கு டாக்டர் விளையாட்டு, சில குட்டீஸ்க்கு திருடன் போலீஸ்னு ஒவ்வொரு குட்டீஸ்க்கு ஒரு ரசனை... உங்க குட்டிக்கு என்ன பிடிக்குதுன்னு நீங்க எல்லா கேமும் விளையாடி பார்த்தா உங்களுக்கே புரிஞ்சுடும் :) எஞ்சாய் தி கேம்ஸ் வித் ஹிம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் மலர் சிச்டெர் கு தங்ச் இன்த இதிழ் ஐ ஆரம்பித்துகு.பிரகு தாலிகா சிச்டெருகு தங்ச் விலகம் கொடுததுகு. நான் என் மகளுடன் கன்னாம்புசி விலயாடுவேன் அவலுகு மிகவும் பிடித விலயாட்டு

மிக்க நன்றி தோழிகளே..ரொம்ப நல்ல விளையாடுக்கள்...நானும் என் மகனும் rhymesku நல்லா dance பண்ணுவோம்..மேலும் games தெரிந்தால் update பண்ணவும்..

மேலும் சில பதிவுகள்