7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,

Sதோழிகள் அனைவருக்கும் வணக்கம்., நான் தற்போது 7-வார கர்ப்பம்., நேற்று ஸ்கேன் சேதெ போது இதய துடிப்பு இல்லை., குழந்தை 6 வார வளர்ச்சி தான் உள்ளது என்றும் கூரினார்., அடுத்த வாரம் மறு ஸ்கேன் எடுக்க வர சொல்லியிருக்கிரார்., எனக்கு பயமாக உள்ளது., தெரிந்தவர்கள் என்னுடைய பயத்தை தெளிவுபடுத்தவும்., என் குழந்தை நலமாக இருக்குமா?

அன்பு ஷோபனா... குழந்தை உண்டான தேதி நாம் சொல்லும் முந்தைய பீரியட்ஸ் தேதியை வைத்தே கணக்கெடுக்கபடுகிறது. அந்த கணக்கின்படி 7 வாரம் என் மருத்துவர் சொல்கிறார். ஆனால் அப்படி நடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை... கரு கூடியது தாமதமாக இருக்கலாம். அப்படி தாமதமாகி இருந்தால் 6 வார கருவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்க அடுத்த ஸ்கேன் போகும்போது போன முறை கரு இருந்த அளவு இம்முறை கரு இருக்கும் அளவு இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து 1 வாரத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என பார்ப்பார்கள். அப்படி இருந்தால் பயம் தேவை இல்லை. அப்படி வளர்ச்சியே இல்லாமல் இருந்தால் தான் வேறு விஷயங்களை யோசிக்க வேண்டும்... இப்போதைக்கு குழப்பம் இல்லாமல் மனதை அமைதியாக வைத்து, +ve எண்ணங்களை மனதில் விதையுங்கள்.... அதுவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இவ்வுலகை வந்தடைய முக்கியம். உங்களூக்காக எங்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க., உங்கலுடைய பதில் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.,

கவலைபட வேண்டாம் . உங்க குழந்தை நல்லா இருக்கும் , அடுத்த தடவை போகும் போது நல்ல இருக்கும் பா ,

கவலைபடாதப்பா, வயித்துல கை வச்சு ப்ரேயர் பண்ணுப்பா கண்டிப்பா ஒன்னும் இருக்காது. பாப்பா நல்லா இருக்கும்

இப்படிக்கு ராணிநிக்சன்

கடவுளிடம் வேண்டிக்குங்க ஒண்ணும் ஆகாது..எனக்கு இப்படியே ஆறு வாரத்தில் இதயத்துடிப்பி இல்லை ப்லீடிங் இருந்தால் உடனே ஹாஸ்பிடலுக்கு வாங்க இன்னும் 10 நாள் கழிச்சு ஸ்கேன் பண்ணி பாக்கலாம் என்று அனுப்பி விட்டார்கள்.உங்கள் வருத்தம் என்னவென்று எனக்கு நல்லாவே தெரியும்...கடவுள் புண்ணியத்தால் அடுத்த ஸ்கேனில் இதயத்துடிப்பும் தெரிந்தது தாமதமாக கரு உண்டானதால் இப்படி என்றார்கள்..இப்பொழுது என் மகளுக்கு ஐந்து வயது

நன்றி., நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிரேன்.,

கடவுளிடம் வேண்டி கொண்டு தான் இருக்கிரேன்., என் குழந்தை நலமாக இருக்க வேண்டும் என்று., ரொம்ப நன்றி.,

அப்படியா? உங்களுக்கும் அப்படித் தான் சொன்னார்களா? உங்கள் குழந்தை நலமாக இருக்கிராளா? ரொம்ப சந்தோசமாக உள்ளது., என் குழந்தையும் நலமாக இருக்க ஆண்டவனன வேண்டிக் கொள்ளுங்கள்., நன்றிங்க.,

அப்படியா? உங்களுக்கும் அப்படித் தான் சொன்னார்களா? உங்கள் குழந்தை நலமாக இருக்கிராளா? ரொம்ப சந்தோசமாக உள்ளது., என் குழந்தையும் நலமாக இருக்க ஆண்டவனன வேண்டிக் கொள்ளுங்கள்., நன்றிங்க.,

ஹாய் ஷோபனா பயப்படாதீங்க...கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள்....எனக்கு இது இரண்டாவது குழந்தை....10 வது வாரம் தொடங்குற அன்று பயங்கர வயிறு வலி இருந்ததுன்னு ஆஸ்பிடல் போனேன்....அப்ப ஸ்கேன் எடுத்துட்டு குழந்தை நல்லா இருக்கு ஆனா குழந்தை வளர்ச்சி படி 7 வாரம் 3 நாள் தான் ஆகுதுன்னு சொன்னாங்க...சில நேரங்களில் இப்படித்தான் பீரியட்ஸ் கணக்கு வேறு ,குழந்தை வளர்ச்சி வேறா இருக்கும்...பயப்படாதீங்க..

மேலும் சில பதிவுகள்