விக்கல் விசில் சத்தத்துடன் மூச்சு மேல்வாங்குகிறது - சில சமயம் கண் எல்லாம் உள்ளே போய்விடும்

எனது மகனுக்கு மூன்று மாதம் முடிந்து 40 நாட்கள் ஆகின்றது - 2 மாதத்திலிருந்து மலம் கழிப்பதில் சிக்கல் இருந்து வந்தது, அப்போது சில சமயம் அவன் முக்குகிறான். அந்த சமயத்தில் அவனுக்கு சிலநேரம் விக்கல் விசில் சத்தத்துடன் மூச்சு மேல்வாங்குகிறது - சில சமயம் கண் எல்லாம் உள்ளே போய்விடும் - பயமாக இருக்கிறது - மருத்துவரிடம் சென்றால் அது ஒன்றும் பயம் இல்லை என்று சொல்லுகிறார்கள். சிலசமயம் பால் குடிக்கும் போதும் அது போல பண்ணும் - வீக் வீக் மேல்நோக்கியே விக்கல் வரும் (reverse whisle) - டாக்டர் 3 மாதத்துக்கு பிறகு சரியாகிவிடும் என்று சொன்னார்கள் பட் இன்னும் சரி ஆகவில்லை - அதிகம் சிரித்தாலும் அழுதாலும் இதுபோல் வருகிறது - இது என் வருகிறது - என்ன problem நு தெரியல - பிளஸ் சில சமயம் பாலும் கக்குகிறான் - அந்த சமயதிலும் அப்படி வரும் please உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்

நன்றியுடன்
Babu Natesan

திரு பாபு... உங்கள் குழந்தைக்கு seizure இருக்கோ என்று சந்தேகமா இருக்கு... பயம் வேண்டாம், சின்ன சந்தேகம் அவ்வளவு தான். அப்படி வரும் நாளில் ஒரு EEG பாருங்களேன்... இருந்தால் தெரிந்துவிடும்.

தயவு செய்து இப்படி சொல்லிட்டேன்னு என் மேல் கோபம் வேண்டாம்... மன்னிக்கனும். எதுவா இருந்தாலும் ஒரு பரிசோதனைசெய்து ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சா நிம்மதியா இருக்கலாம்... அதனால் தான் சொன்னேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்