கிறிஸ்மஸ் ஆர்னமென்ட் - 2

தேதி: December 20, 2011

5
Average: 4.6 (5 votes)

 

ஸ்டைரொபோம் பால்ஸ்(Styrofoam Balls) - சிறியது
பைப் கிளீனர்ஸ் - விரும்பிய நிறங்களில்
ஹூக் (Hooks)

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பைப் கிளீனர்களை ஒரே அளவான சிறிய துண்டுகளாக வெட்டி இதழ்கள் போல் இரண்டாக வளைத்து அடியில் முறுக்கி விடவும்.
பின்னர் இவ்விதழ்களை ஸ்டைரோபோம் பால்களில் பூவைப் போல் சுற்றிவர சொருகி விடவும்.
அல்லது ஒரு ரவுண்ட் மட்டும் நெருக்கமாக சொருகி மத்தியில் ஸ்மைலி ஸ்டிக்கர் ஒட்டவும்.
அழகான இலகுவாக பிள்ளைகளால் செய்யக்கூடிய ட்ரீ ஆர்னமென்ட் தயார். கிறிஸ்மஸ் மரத்தில் ஹூக் மூலம் அல்லது அப்படியே கொழுவி விடலாம். அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குழந்தைகளுக்கான எளிமையான குறிப்பு அழகா இருக்கு நர்மதா. வாழ்த்துக்கள்

ரொம்ப அழகா இருக்கு :-)

KEEP SMILING ALWAYS :-)

சீசனுக்கேற்ற மாதிரி க்ராஃப்ட் போடுறீங்க, சுபர்ப். ;)
க்றிஸ்மஸ் கலக்கல்தான் போல. ;)

‍- இமா க்றிஸ்

ரொம்ப நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பின் அறுசுவை டீம் மற்றும் பாராட்டிய தோழிகள் அனவருக்கும் நன்றி.
வீட்டில ஒரு சுட்டி பம்பரத்த ;) வச்சுகொண்டு என்ன பண்றது. இப்பிடி ஏதாவது செய்து கொண்டுதான் இருக்க வேணும் இமா :) இப்ப போட்டோ எடுக்க விடுறதே பெரிய விசயம். முன்ன போல படங்கள் அவ்வளவு தெளிவா வாரல்ல என்றாலும் சமாளிக்கிறன் ;)
அன்புடன்,
-நர்மதா :)