மதுரையில் நிலம் வாங்க .............

தோழிகளே ,
மதுரையில் இடம் வாங்க திட்டமிட்டுள்ளோம்...... கொஞ்சம் outer area அப்படினாலும் சரி தான் ... எங்களுக்கு திருமங்கலத்துல own ஹவுஸ் அண்ட் லேன்ட் இருக்கு ... எங்கு இடம் வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் ஆலோசன்னை கூறுங்கள் தோழிகளே ... என் கணவர் abroad ல இருக்கிறார் .. நான் தான் நிலம் தேடி பார்க்க வேண்டும் ... எனக்கு உதவியாக அப்பாவும் பார்க்கிறார் ..... இருந்தாலும் இடம் அமையவில்லை

மதுரை தோழிகளே .....

இதை பற்றி தெரிந்தவர்கள் ஆலோசனை சொல்லுங்கள் ..........

கரிமேடு ஏரியால வாங்கினா ரொம்ப நல்லது. இடம் கிடைச்சா அது உங்க அதிர்ஷ்டம். ஆனா அங்க வாங்குற இடம் நீங்க எதிபார்த்ததை விட கொஞ்சம் சிறியதா இருந்தாலும் பரவாயில்லைனு வாங்கிடுங்க. அங்க கிடைக்கறது ரொம்ப கஷ்டம். கிடைச்சா விட்டுடாதீங்க. அடுத்தது ஜெய்ஹிந்த்புரம், காளவாசல்ல பாருங்க. காளவாசல் மெயின் ரோட்ல பாருங்க (பாத்திமா காலேஜ் வரையும்)

ஆனையூர், கூடல்நகர் பக்கம் பாருங்க. அங்க ரயில்வே வேலைகள் நடக்குது. அந்த இடம் கூடிய சீக்கிரம் முக்கியமான இடமா இருக்கும். எலெக்ட்ரிக் லைன் போட்டு ரெடி பண்ணிட்டாங்க. லோக்கல் ட்ரெயினுக்காக அங்க வேலைகள் நடக்குது. தேனி, கம்பம், திண்டுக்கல், திருச்சிக்கு தினமும் நிறைய மாணவர்கள், உத்யோகஸ்தர்கள் போய்வராங்க. பக்கத்திலேயே பள்ளி, கல்லூரி, வானொலி நிலையம்னு முக்கியமான இடமா இருக்கு. ஆனா இடம் விலை தாறுமாரா போச்சு.

இன்னொரு இடம் அல்ட்ரா காலேஜ் பக்கம் பாருங்க. வேளாண் கல்லூரி, ஹைகோர்ட் இருக்கு. அண்ணா பல்கலைகழகம், ஐடி பார்க் ரொம்ப பக்கம். அங்க இப்போதைக்கு சீப்பா இருக்கு. அங்க வாங்கலாம். இப்போ அங்க வசதிகள் ஏதும் இல்லை. ஐடி, பல்கலைகழகத்துனால வருங்காலத்துல டெவலப் ஆகும்னு நினைக்கிறேன்.

பரவை பக்கம் நிறைய வீடுகள் வருது. என் கணவரின் நண்பர் அங்கு வீடுகட்டி குடிபோயுள்ளார். வசதி பற்றி எனக்கு சரியா தெரியல. விஸ்தாரா பக்கம் இடம் இருந்தா யோசிச்சு வாங்குங்க. ஏன்னா அங்க வசதி ஏதும் இல்லை. விஸ்தாரானு நான் சொல்ற இடம் எதுனு உங்களுக்கு தெரியுதா? அத்யாபனா ஸ்கூல் இருக்கே அங்கதான். நான் சொல்ற இடம் எல்லாம் எப்படினு அப்பாட்ட கேளுங்க.

மற்ற இடங்கள் பற்றி கேட்டுப்பார்த்து விபரம் தெரிந்தால் சொல்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)

ரெம்ப நன்றி பா .... அல்ட்ரா காலேஜ் பக்கம் பாக்குறேன்........ பரவை ஏரியா பக்கம் தண்ணீர் problem இருக்குமா ........ காளவாசல் ஏரியா ரேட் அதிகமாய்டுச்சு ... எங்க வீடு (அம்மா வீடு ) காளவாசல் பக்கம் பா... இப்ப அப்பா நாகமலை புதுகோட்டை பக்கம் பார்த்தாங்க ... விலை ஓகே தான் ...
(கொஞ்சம் outer ஏரியா ரேட் கம்மியா இருக்கும் ... விலையும் ஏறும் ... நெறைய இடம் வாங்கி போடலாம் ) .. அதான் யோசிகிறேன்...

பரவை பக்கம் தண்ணிர் பிரச்சன்னைலாம் இருக்காது பா ..., ஆனால் நீங்க நாகமலை பக்கம் வாங்குனா இன்னும் நல்லது..., எங்க வீடுகூட அங்க தான் இருக்கு நல்ல ஏரியா தான்.., ultra காலேஜ் பக்கம் லாம் develop ஆகா late ஆகும் நு சொன்னாங்க

அன்புடன் அபி

ஹாய் மஹா
நீங்க திருப்பரங்குன்றம் டு திருமங்கலம் NH , thirunagar ல ட்ரை பண்ணி பாருங்க,அப்புறம் காளவாசல் ல இருந்து நாகமலை புதுக்கோட்டை, university வரை ட்ரை பண்ணி பாருங்க, வடபழஞ்சி ல tidel park
வரபோரதால future ல நல்ல ரேட் போகும்.
கோச்சடை, fenner , சோழவந்தான் போற ரோடு ட்ரை பண்ணுங்க, நல்ல செம்மன் பூமி, borewater நல்லாருக்கும், தண்ணீர் பிரச்சனை இல்லை. மாட்டுத்தாவணி ல இருந்து highcourt branch , மேலூர் வரை ட்ரை பண்ணுங்க. highcourt branch பின்னால , agriculture university எதிரில் நாங்க 4 வருஷம் முன்னால வாங்கின லேன்ட் இப்போ அதை விட 5 மடங்கு அதிகமா விலை போகுது
புதூர், அழகர் கோவில் ரோடு, ஐயர் பங்களா, திருப்பாலை, சத்திரப்பட்டி, hawa valley நத்தம் ரோடு, future நல்ல ரேட் போகும், இப்போ சத்திரப்பட்டி வரை corporation லிமிட் குள்ள வந்திருச்சு.
நீங்க லேன்ட் வாங்கி future ல விக்க போற மாதிரி iruntha outer ல வாங்குங்க. பின்னால veedu கட்டி போக போறதா இருந்தா சிட்டி குள்ள வாங்குங்க. கூடல் நகர் மதுரை ரயில்வே ஸ்டேஷன் phase II வரபோறதா சொல்றாங்க, , ஆனையூர் கூடல்நகர் ஏரியா ல நல்ல ரேட் போகுது, ஆனா 10 வருஷமா development இல்ல. கரிமேடு, jaihindpuram ரொம்ப நெருக்கடியான ஏரியா.
saturday , sunday தினமலர் ல வர்ற வரிவிளம்பரம் பகுதி பாருங்க, நிறைய பிளாட் வரும்.
நீங்க இப்போ மதுரைக்கு vacation ல போயிருகீங்களா? பஹ்ரைன் எப்போ வருவீங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹாய் கார்த்திகா
நீங்க bharain தானா ?... மதுரை வந்து 3 months ஆச்சு பா.... அவருக்கு அங்க ப்ராஜெக்ட் முடிஞ்சது .. next project மலேசியா .. இப்ப மலேசியா ல இருகார் .. நான் மதுரை ல இருக்கேன் பா ..
//saturday , sunday தினமலர் ல வர்ற வரிவிளம்பரம் பகுதி பாருங்க, நிறைய பிளாட் வரும்.
இனி பாக்குறேன் பா....
high court , agriculture காலேஜ் பக்கம் வாங்கலாம் அப்டினாலும் தெரிச்சவங்க அந்த பக்கம் இல்ல .. நம்பி வாங்க பயமா இருக்கு
நல்ல ஆலோசனை சொல்லிருகீங்க .... வீடு கட்டுறதா ... இல்ல இடம் வாங்கி sale பண்றதுகாணு ...
நீங்க சொன்ன மாதிரி தான் வாங்கி விக்கிற மாதிரினா outer ல பாக்குறேன் .......

ரெம்ப நன்றி அபி... எனக்கும் ஆசை தான் நாகமலை அல்லது கோச்சடை பக்கம் இடம் வாங்கி வீடு கட்டணும் அப்டின்னு ...
atleast அந்த ஏரியா ல 5 சென்ட் ஆச்சும் வாங்கணும் .....

எனக்கும் மதுரையில் நிலம் வாங்கி விற்பனை செய்ய விருப்பம் உள்ளது.தோழிகள் ஆலோசனை கூறவும்.
-- எனது மின்னஞ்சல் முகவரி tamilnadu09@gmail.com.
சமீபத்தில் விருதுநகர் சேடப்பட்டி வழியில் நிலம் வாங்கியுள்ளேன் விற்பதற்காக.

எனது தொலை பேசி எண் 8807250449.

தோழிக்கு வணக்கம்
என்னிடம் 29.5சென்ட் அளவுள்ள பிளாட் ஒன்று உள்ளது.
அது மதுரை-கள்ளழகர் கோவிலுக்கு அருகாமையில் உள்ளது.
இந்த இடத்தில் நல்ல தண்ணீர் வளமும் சாலை வசதிகளும்
அமைதியான சூழ்நிலையும் இருக்கும். இவ்விடம் கிட்டத்தட்ட
35ஏக்கர் நிலப்பரப்பில் பிளாட் பிரிக்கப்பட்டுள்ளது.
வீடு கட்டவோ அல்லது தொழிற்சாலை தொடங்கவோ சிறந்த இடம்.
ஆர்வமிருந்தால் yazhinigroups@gmail.com அல்லது 0065 94479183
என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

நாங்க மதுரையில் இடம் வாங்க பார்த்துக்கிட்டிருக்கோம்.நாங்க இப்ப aboard ல் இருக்கோம். அதனால எந்த ஏரியாவில் எவ்வளவு விலை போகுதுனு தெரியாது.
எனக்கு கீழே உள்ள ஏரியாவில் 1 cent எவ்வளவு விலை போகுதுனு சொல்லுங்க தோழிகளே pls.
Alagappan nagar
Ponmeni
Yohiyar nagar
Muthupatti
Pamban nagar colony
Thirupparankundram

மேலும் சில பதிவுகள்