தங்கம் வாங்கலாமா?

துபாய் Airport -ல் தங்கம் வாங்கலாமா? Airport-ல் உள்ள கடையில் தங்கம் வாங்குவதற்கும் , துபாயில் மற்ற கடைகளில் தங்கம் வாங்குவதற்கும் rate வித்தியாசம் உண்டா?உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.PLEASE HELP ME.

நான் வாங்கினதில்லை ஆனால் அதிகமாக இருக்கும் என்று தோனுது.

நாங்க 4 வருடம் முன்பு நம்ம ஊரில் இருந்த விலைக்கு துபாயில் ஏர்போர்ட்டில் உள்ள விலையை கணக்கு போட்டுபார்த்த போது விலை அதிகமாகவே இருந்தது. கேட்ட போது அங்கு உள்ளதெல்லாம் ப்ராண்டட் அதனால் அப்படின்னு சொன்னாங்க. இப்போ நம்ம ஊரிலேயே செய்கூலி இல்லை, ஆனால் துபாய் ஏர்போர்ட் விலை செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்ந்து தான். அங்க இந்த விலை எல்லாம் தனி தனியா போட்டிருக்காது... மொத்தமா இந்த நகை இந்த விலை என்றே இருக்கும். கூடவே அவங்க வொயிட் கோல்ட், 18 கேரட், 24 கேரட், 22 கேரட் என சொல்வது நம்ம ஊரோடு ஒப்பிட்டால் குழப்பமாக இருந்தது. இதை விட கோல்ட் சூக்கில் குறைவு என்றார்கள். ஆனா எங்களுக்கென்னவோ அங்கும் நம்பிக்கையாக வாங்க பிடிக்கல. பார்த்த வகையில் அங்குள்ள கடைகளிலும் நம்ம ஊர் அளவுக்கு டிசைன்ஸ் இருக்கல. அதனால் நன்றாக அங்கு உள்ள நகை பற்றீ தெரிந்த யாரிடமாவது கேட்டு வாங்குங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனிதாக்கா சொல்வது முற்றிலும் சரி.ஏர்போட்டில் நகை விலை அதிகம் அதில் போட்டிருக்கும் விலையைத்தான் கொடுக்க வேண்டும்.வெளி கடைகளில் செய்கூலியை பேரம்பேசி குறைத்து வாங்கலாம்.கோல்ட் சூக்கில் நல்ல டிசைன் இருப்பது குறைவு அரபு நாட்டவர் அணியும் நகைகலே அதிகமாக இருக்கும்.நீங்கள் சார்ஜாவில் ரோலாவிலுள்ள KM Trading க்கு சென்று வாங்கலாம் அங்கு நகை கடைகளே அதிகமாக இருக்கும்.அல்லது LULU ,MANAMA HyperMarket லுள்ள நகை கடைகளிலும் வாங்கலாம் நல்ல டிசைன்களும் தேடி வாங்கலாம்.

உடனே பதில் சொன்னதற்க்கு ரொம்ப நன்றி thalika ,Vanitha Vilvaar... ,Kifa

மேலும் சில பதிவுகள்