எளிய முறையில் ஹேண்ட் எம்பிராய்டரி செய்வது எப்படி?

தேதி: March 26, 2008

4
Average: 3.5 (19 votes)

 

எம்பிராய்டரி நூல் - தேவையான நிறங்கள்
வெள்ளை (அ) கலர் துணி
டிசைன்
ஃபிரேம்
ஊசி - சிறியது
கத்திரி

 

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் எம்பிராய்டரி போடுவதற்கு எளிய 2 தையல் முறைகளை தெரிந்து கொள்வோம்.
தையல் 1. சங்கிலித் தையல் : இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற அமைப்பை கொடுக்கும். படத்தில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த தையல் பூவின் மகரந்தம், தலை முடி, பறவையின் சிறகு போன்ற பகுதிகளில் பயன்படுத்தலாம்.
தையல் 2. நிரப்புவதற்கு தையல் : இது பெரிய பரப்பளவு மற்றும் சமமான பரப்பு கொண்ட பகுதிகளில் பயன்படுத்தலாம்.
முதலில் துணியில் டிசைனை டிரேஸ் எடுத்து வரையவும். பின் துணியை ஃபிரேமில் பொருத்தவும்.
இங்கே வரையப்பட்டிருப்பது பூ மற்றும் இலைகளுடன் கூடிய ஒரு டிசைன். எனவே முதலில் மகரந்ததிற்கு மஞ்சள் நிற நூலில் சங்கிலி தையல் போடவும்.
பிறகு பூவின் இதழ்களுக்கு நிரப்புத் தையல் போடவும்.
பூவின் இதழ்களை சுற்றி ஃபினிஷ் செய்வதற்கு அதே நிறத்திலோ (அ) வேறு நிறத்திலோ தையல் போடவும்.
அதே போல் இலைகளுக்கும் நிரப்புத் தையல் போட்டு, அதை சுற்றி ஃபினிஷ் செய்வதற்கு சங்கிலித்தையல் போட்டு முடிக்கவும்.
இப்போது அழகான எம்பிராய்டரி ரெடி. இதை தீம் எம்ப்ராய்டரி போல் போட்டு ஃப்ரேம் செய்து அழகிய வால் கேங்கிங் போல செய்யலாம். நம் ஆடைகளில் கூட போட்டுக் கொள்ளலாம்.
சில நேரங்களில் நமக்கு விருப்பமான ஆடையில் சிறிய ஓட்டை (அ) கிழிசல் போன்றவை ஏற்படலாம். அதை இவ்வாறு அழகுப்படுத்தி அதை மறைத்து விடலாம். இதை பேட்ச் வொர்க் போலவும் செய்யலாம். இதை போடுவதற்கு கொஞ்சம் பொறுமை அவசியம். ஆனால் முடித்த பிறகு மிகவும் அழகாக இருக்கும்.
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் கைத்திறனில் உருவானது இந்த அழகிய எம்ப்ராய்டரி பூ. அறுசுவை நேயர்கள் செய்து பார்த்திட தெளிவானப் படங்களுடன் செய்முறையை இங்கே எளிதாக விவரித்துள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மஹி எம்ராய்ட்ரரி சூப்பர், எனக்கும் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு சேலை முழுவதும் எம்ராய்ட்ரரியும், சுடுதாரில் பெயிண்டிங்கும், பீட்ஸ் வொர்க்கும் செய்து இருக்கிறேன்,
ரொமப் அருமை நீங்கள் சொவது போல் பொருமையும் அமைதியான சூழ் நிலையும் வேண்டும் இதற்கு.
இதேலாம் செய்யும்போது ஏதாவாது பட்டு கேட்டு கொண்டே செய்தால் விரு விருப்பு இன்னும் அதிகமாகும்.
ஜலீலா

Jaleelakamal

ஆமாம் ஸ்ரீகீதா, மிகவும் அழகாக இருக்கிறது. நானும் இதுபோல் நிறைய போட்டு(திருமணத்தின் முன்) தலையணை உறை செய்து வைத்திருக்கிறேன். இப்பவும் நிறைய பற்றன் சேகரித்து வைத்திருக்கிறேன் நேரம் கிடைப்பது குறைவு. அதுவும் ஊசியுடன் கூடிய வேலை என்பதால் பிள்ளைகளுடன் செய்வது கஸ்டம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிகவும் அழகான எம்பிரொய்டரி. எனக்கும் இதிலெல்லாம் ஆர்வம் உண்டு. வாழ்த்துக்கள் ஸ்ரீகீதா.
-நர்மதா :)

அட்மின் அவர்களுக்கு, படங்களில் கிளிக் செய்யும் போது அவை சிறிது பெரிதாக வருமாறு செய்ய முடியாதா ?(ஒரு pop-up window வருமாறு). அப்படி செய்தால் பார்ப்பதற்கு எளிதாகவும் இன்னும் விளக்கமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

சமையல் குறிப்புகள் எனில் பரவாயில்லை. சிறிய படமாயிருந்தாலும் பார்த்தாலே விளங்கும். தையல், கை வேலைப்படுகள் போன்ற நுணுக்கமான வெலைப்பாடுகள் சிறிய படங்களில் பார்க்கும் போது விளங்கிக் கொள்ள சிறிது கஷ்டமாக உள்ளது.

தங்களது நேரம் மற்றும் சேவரின் சுமையை அதிகரிக்காமல் இதனை செய்ய முடியுமா?
-நர்மதா :)

நிங்க ரொம்ப நல்லா பண்னியிருக்கிங்க. எனக்கும் கைவினை பொருட்கள் செய்ய ரொம்ப பிடிக்கும். ஆனால் எம்ப்ரய்டரி மட்டும் தெரியாது. கற்றுக்கனும்ன்னு ரொம்ப ஆசை. நல்லா பண்ணிருக்கிங்க. தொடருட்டும் உங்கள் எம்ப்ரய்டரி.

எம்பிராய்டரி ரொம்ப நல்ல இருக்குங்க. அறுசுவை நிஜமாகவே ரொம்ப உதவியா இருக்கு. வாழ்துக்கள்.

ரொம்ப அழகா இருக்கு இது....சூப்பர்
நர்மதா எப்படின்னு தெரியல இன்று காலை தான் அட்மினிடம் இது பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க..
இதிலும் சரி யாரும் சமைக்கலாமில் அட்லீஸ்ட் கடைசி படமாவது க்லிக் பன்னிநால் பெரியதாக தெரியும் வண்ணம் இருந்தால் சமையல் பார்ப்பவர்களைக் கவரும்...கைவினைப் பொருட்கள் இன்னும் விளங்கும்

நான் முன்பே இதைப் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் படங்களின் அளவை பெரிதாகக் கொடுப்பது கடினமான செயல் அல்ல. ஆனால், அவற்றை செய்வதினால் பக்கங்களின் அளவு அதிகமாகும். திறப்பதற்கு நேரம் எடுக்கும். தற்போது நமது சர்வர் இருக்கும் நிலையில் அதை செயல்படுத்த இயலாது.

யாரும் சமைக்கலாமில் இடம்பெறும் படங்களைவிட நீங்களும் செய்யலாம் பகுதி படங்கள் அளவில் சற்று பெரியவை(50 pixels). கைவினைப்பொருட்கள் குறிப்புகள் மிக அதிகம் இடம்பெறப் போவதில்லை. ஆனால், யாரும் சமைக்கலாம் குறிப்புகள் அதிக அளவில் இடம்பெறும். இன்னும் சொல்லப் போனால், ஒரு காலத்திற்கு பின்பு அனைத்து குறிப்புகளும் செய்முறை படங்களுடன்தான் இருக்கும். இப்போது உள்ள 200x150 pixels அளவு பல விசயங்களை ஆராய்ந்து வைத்துள்ள அளவு. இது மிகவும் குறைந்த அளவு கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு resolution ல் screen set செய்து வைத்திருப்பார்கள். அனைவருக்கும் பிரச்சனையின்றி தெரிய இந்த அளவுதான் சரியாக இருந்தது.

அளவு பெரிதாக பெரிதாக, படங்களின் தெளிவு நன்றாக இருக்கும் என்பது உண்மை. ஆனால், அப்படி கொடுக்க நம்மிடம் நல்ல சர்வர் வசதி இருக்க வேண்டும். உங்கள் தேவை புரிகின்றது. வசதி வாய்ப்புகள் கூடும்போது கண்டிப்பாக இவற்றையெல்லாம் செயல்படுத்துவோம்.

மஹிஸ்ரீ,

உங்களின் கைவேலை மிக நன்றாக உள்ளது. நிரப்புத்தையல் என்றால் என்ன?

அப்புறம் உங்களுக்கு குரோசட் செய்யத் தெரியுமா? அப்படியெனில் tr tog (triple together) எப்படி செய்ய வேண்டும்

"Always Keep Smiling"

"Always Keep Smiling"

ஹலொ மஹி
how r u?
உங்க எம்ப்ராய்டரி பூ சுபர்.தையல் 2 தெலிவக சொன்னல் நல்லது.

hai admin
எனக்கு எப்படி craft பகுதிக்கு செல்வதுனு தெரியவில்லை.

looking good.

mahi akka, i am also residing in bangalore. your designs has cum out well. if possible teach me emroidery and designing

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta