பட்டி மன்றம் 58 "வேலன்டைன்ஸ் டே அவசியமானதா? இல்லையா?"

அன்பு தோழிகளுக்கு வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நடுவராக பொறுப்பேற்பதில் ரொம்பவே சந்தோஷம்.
என்ன தலைப்பு தேர்ந்தெடுக்கலாம்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் சுற்றிக் கொண்டு இருந்த போது பளீர்னு மண்டையில் பல்பு எரிஞ்சிடுச்சு :) .
வேலன்டைன்ஸ் டே வருது. லவ் பண்றவங்க எல்லாம் காதலன்/காதலிக்கு என்ன பரிசு கொடுத்து மனசுல பச்சக் னு ஒட்டிக்கலாம், எப்படி தன்னோட காதலை இப்பவாவது சம்பந்தபட்டவங்ககிட்ட சொல்லலாம்னு பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கற நேரம். அது சம்பந்தமான தலைப்பு இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். தேடிக்கிட்டு இருந்த போதே அந்த தலைப்பும் கண்ணில் பட்டிடுச்சு.
சகோ ஷேக் கொடுத்த தலைப்பான
*****காதலர் தினம் என நாம் சொல்லும் வேலன்டைன்ஸ் டே அவசியமானதா இல்லையா***** என்பதே இவ்வார பட்டி மன்ற தலைப்பு.
சீக்கிரமா வந்து டிஷ்யூம் டிஷ்யூம் ஆரம்பிங்க! அப்பதானே நடுவருக்கு சந்தோஷமா இருக்கும்.
பட்டிமன்றத்தின் விதிமுறைகளோடு அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்கள் அமைய வேண்டும். நாகரீகமான பேச்சு மிக அவசியம். வாதிடுபவர்களின் பெயர் குறிப்பிட்டு எதிர் வாதங்களை வைக்க வேண்டாம். பொதுவாக எதிரணி என்றே குறிப்பிட வேண்டும்.
ஓகே! ரெடி ஸ்டார்ட் ம்யூசிக்…..

பட்டியின் விதிமுறைகள் புதியவர்களுக்காக:

பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

அந்தந்த பட்டிமன்றங்களில் ஒருவரின் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வாதம் இருக்க வேண்டும். அந்த பட்டிமன்றத்தில் இப்படி சொன்னார் இந்த இழையில் இப்படி பேசினார் என்று குறிப்பிட்டு எதிர்வாதம் செய்யக் கூடாது.

பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு! ஒளிஞ்சு உட்கார்ந்து பார்வையிடறவங்க, வரலாமா வேணாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கறவங்க, பட்டிமன்ற புலிகள் எல்லாரும் சீக்கிரமா வாங்க. வந்து வாதத்தை கொட்டோ கொட்டுன்னு.... இருங்க இருங்க நடுவர் மண்டையில கொட்டக் கூடாது. அப்படிக்கா நடுவர் முன்னாடி கொட்டுங்க :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Valentine's Day தேவைதான்..... வேலன்டைன் என்ற ஒரு ஆள் அவர் அன்பு மகளுக்கு அன்பை காட்ட அப்படி ஒரு நாளில் பரிசு கொடுத்தார் அது அவர் பெயரில் தற்போது வேறு விதமாக கொண்டாடப்படுது இந்தியாவில.... ஆனா வெளி நாட்டில நன்றாக தான் இருக்கு.... இது இந்தியாவுக்கு தேவையா இல்லையான்னு கேட்டிருக்கலாம்!!!

வணக்கம்... வணக்கம்... வாழ்த்துக்கள் !!! நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை நடுவர் பதவியில் பார்ப்பதில் எனக்கு ஏக மகிழ்ச்சி. :) நல்ல தலைப்பை தேர்வு செய்தமைக்கு நன்றிகள். இந்த காலத்தில் சிந்திக்கப்பட வேண்டிய தலைப்பை தந்த ஷேக்குக்கு வாழ்த்துக்கள்.

நம்ம கட்சி என்னன்னு நடுவருக்கு தெரிஞ்சிருக்குமே... ;) காதலர் தினம் / வேலண்டைன்ஸ் டே என்பது தேவையே இல்லை என்பது தான்.

கொஞ்சம் நேரம் கொடுங்க.. வாதத்தோட வரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னங்க இப்படி கேட்டு புட்டீங்க ...கண்டிப்பா தேவைங்க...
காதலர் தினம் கொண்டாடறவங்க நாள பிரச்சன வரதிலீங்க...கொண்டாட வேண்டாம் தடுக்கரவங்கள்ளலதான் பிரச்சினையே...
காதலை கொண்டாட ஒரு தினம் அதும் இந்தியா ல கண்டிப்பா தேவை.valantines day கி ஜெய்....:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கிட்டத்தட்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடுவர் பதவி ஏத்து இருக்கீங்க, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நானும் பல மாதங்களுக்கு பிறகு பட்டிக்கு வந்து இருக்கேன்..
வேலண்டைன்ஸ் டே தேவையே இல்லைன்னு வாதாட வந்து இருக்கேன். அன்பை எந்த நாள் வேணும்னாலும் சொல்லலாம், அதுக்குன்னு ஒருநாள் தேவையே இல்லை. சீக்கரம் வாதங்களோட வருகிறேன் நடுவரே...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பட்டிநடுவருக்கு வணக்கம்!! எல்லா சிறப்பு தினங்களும் ஏதோ ஒருவகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியை தருகிறது. அந்த வகையில் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கும், ஒரு விஷயத்தை போற்றுவதற்கும் காதலர் தினம் மட்டுமல்ல ஒவ்வொரு சிறப்பு தினமும் அவசியமானதே!!! ஆகவே நடுவரே வேலன்டன்ஸ் டே இருப்பதில் தப்பில்லை!!!, "அவசியமானதே" என்ற அணிக்காக வாதத்துடன் வருகிறேன்.

வாழ்வது சிலகாலம்!!
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!!!!
நட்புடன்;
தான்யா.

காதலர் தினம் கண்டிப்பாக வேண்டும் நடுவரே!!! நாம் அன்பை பரிமாற சின்னதா ஒரு கிப்ட், கிரீட்டிங் கார்ட் இதெல்லாம் கொடுக்கும் போது அல்லது வாங்கும் போது அதுல கிடைக்குற சந்தோஷமே சந்தோஷம்...
பொங்கல், தீபாவளி என்று ஒரு தினம் இருப்பதால் அந்த நாள் வரும் வரை எதிர்பார்ப்போடு காத்திருப்போம்.. தினம் தினம் தீபாவளி, பொங்கல் என்று கொண்டாட முடியாது.. அதைப்போலவே காதலர் தினம் என்ற ஒரு தினம் இருந்தால் தான் மனதிற்குள் என்ன செய்யலாம்.. என்ன கிப்ட் கொடுத்து அசத்தலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்... காதலர் தினத்தில் கொடுத்த பரிசு என்று சந்தோஷ படலாம்..
இதுவும் ஓர் சின்ன மகிழ்ச்சி தான்.. காதலர் தினத்தை கொண்டாடலாம்... என்பது என்னுடைய கருத்து...

"எல்லாம் நன்மைக்கே"

காதலர் தினம் கண்டிப்பாக தேவை என்பதே என்னுடைய வாதம் காதலர் தினம் அன்று கணவரிடம் இருந்து கிடைக்கும் பரிசு(அது எந்த மாத்ரி பொருளாக இருந்தாலும் சரி ) என்றும் நம் மனதில் நிற்கும் சென்ற வருடம் என் கணவர் எனக்கு காதலர் தினம் அன்று விஷ் பண்ணி அனுப்பின மெசேஜ் இன்னும் என் மொபைல் வைத்து இருக்கேன் கண்டிப்பாக காதலர் தினம் தேவை தேவை தேவையே

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நடுவரே ஒரு குட்டி கருத்தோட துவங்கிட்டு போறேன்...

இயந்திரம் போல் உறவுகளை பார்க்கும் வெளிநாட்டு உறவுகளுக்கு இது தேவைப்படலாம்... ஆனால் என்றும், எப்போதும், எதிலும் அன்புக்கு மதிப்பு கொடுக்கும், முன்னுறிமை கொடுக்கும் இந்தியருக்கு இது தேவையே இல்லை.

அவங்க வருடம் முழுக்க ஒருவரை ஒருவர் பார்த்து அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் இருக்குறதால இதுக்குன்னு ஒரு நாளை தேடுறாங்க... நாம் என்றுமே அன்போடு பழகுவதால் தினம் தினம் காதலர் தினம் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எஸ்கேப் ஆகாமல் இந்த முறையை பட்டியை தாங்கி நடத்த வந்திருக்கும் நடுவருக்கு என் அன்பான வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கங்க>

நடுவரே, அன்பை பரிமாறிக் கொள்ள நாள்,நேரம்,பொழுது என கால நேரம் தேவையில்லை. அப்படி இருக்கும் போது இந்த காதலர் தினம் மட்டும் ஏன்? தேவையே இல்லைன்னு சொல்ல வந்தேன். சீட் போட தான் வந்தேன் நடுவரே. பிறகு வாதத்துடன் வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்