ஹேங்கிங் பேர்ட்

தேதி: February 11, 2012

5
Average: 5 (6 votes)

 

ஆர்காமி பேப்பர் - மஞ்சள், ஆரஞ்சு நிறம்
பென்சில்
கத்தரிக்கோல்
பெவிக்கால்
பறவையின் மாதிரி வடிவம்

 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் ஆரஞ்சுநிற ஆர்காமி பேப்பரின் மீது பறவையின் மாதிரி வடிவத்தை வைத்து அவுட்லைன் வரைந்துக் கொள்ளவும்.
பேப்பரில் வரைந்த பறவையை மட்டும் தனியே நறுக்கி எடுக்கவும். தனித்தனியாக உள்ள இரண்டு பறவையின் வால் பகுதியை தவிர மீதி இடம் முழுவதும் பெவிக்கால் தடவி ஒன்றாக ஒட்டி வைக்கவும். அதன் வால்பகுதியை 2 இன்ச் நீளத்தில் நறுக்கி விடவும்.
மஞ்சள் நிற ஆர்காமி பேப்பரை 20 செ.மீ அளவில் சதுரமாக நறுக்கி எடுத்து அதன் ஒரு மூலையிலிருந்து முன்னும், பின்னும் மாறி, மாறி மடிக்கவும்.
அதனை இரண்டாக மடக்கி நடுப்பகுதியை வெட்டி விடவும்.
வெட்டிய பேப்பரின் மடிப்பு, மடிப்பாக உள்ள மேல் முனையை பெவிக்கால் தடவி ஒட்டவும். பின்னர் இறகு போல் விரித்து விடவும்.
இறகுகளை படத்தில் உள்ளதுப்போல் சாய்வாக வைத்து ஒட்டிக் கொள்ளவும். (அல்லது ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளலாம்.)
பின்னர் கண்களுக்கு வெள்ளை மற்றும் கருப்புநிற பேப்பரிக் பெயிண்டால் புள்ளிகள் வைக்கவும். வயிற்று பகுதியில் மஞ்சள்நிற பெயிண்டால் சிறு சிறு புள்ளிகள் வைத்து விடவும்.
பறவையின் மேல் ஓரத்தின் நடுப்பகுதியில் பஞ்சிங் மிஷினால் துளையிட்டு சிறுக்குழந்தையின் வளையல்களை வளையமாக மாட்டி விடலாம். அல்லது கோல்டுநிற கம்பி வளையமாக வளைத்து மாட்டி வைக்கவும்.
ஆர்காமி பேப்பரில் செய்த ஹேங்கிங் பேர்ட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரேவதி, பத்மா... யாருங்க செய்தீங்க... சோ கியூட் :) எனக்கு அப்படியே கொடுத்துடுங்க ப்ளீஸ். உங்க கலர் செலெக்‌ஷனே எனக்கு ஒவ்வொரு முறையும் பெரிய அட்ராக்‌ஷனா இருக்கு. சுலபமான அழகான குவ்வி. ;) இரண்டு பேரும் நான் சொனேன் என் அண்ணன் திரு. பாபு கிட்ட சொல்லி பரிசு வாங்கிக்கங்க. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா. எல்லா க்ராப்ட்கும் முதல் ஆளா வந்து வாழ்த்தி உற்சாகப்படுத்துவதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. எல்லாமே டீம் வொர்க் தான் இருவருமே கலந்து பேசிகிட்டே தான் செய்வோம். இருவரது பங்களிப்பும் உண்டு. செய்து காட்டிய கை மட்டும் என்னுடையது(பத்மா) மற்றபடி ஐடியாஸ் இருவருடையது தான். இதில் பாப்பியோட பங்களிப்பும் உண்டு அந்த பறவைய வரைந்துக் கொடுத்ததே பாப்பி தான்.

அறுசுவை டீம்

டீம்.. பதிலெல்லாம் வருதே!!! ;) மகிழ்ச்சியா இருக்கு :) உங்க கையா பத்மா??? பார்த்ததும் ஹென்னா போட கிடைச்சா சூப்பரா இருக்குமேன்னு நினைச்சேன். 3 பேரும் சேர்ந்து செய்ததால் 3 பேருக்கும் அண்ணா கிஃப்ட் கொடுப்பார்... மறக்காம வாங்கிடுங்க. ஓக்கே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டீம்னா டீம்தான். சூப்பர் டீம். பறவை பளிச் வர்ணங்களில் அழ..கா இருக்கு. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அருமையாக இருக்கு கலரும் சூப்பர்,.

Jaleelakamal

கலக்கலாக இருக்கு....குருவியின் வடிவம் கச்சிதமாக இருக்கு. கலர் காம்பினேஷன் அமர்க்களம். வாழ்த்துக்க்ள்.

வனி,
விரல் நீளமா இருந்தா தான் மருதாணி போடுவீங்களா அப்போ எனக்கு இல்லையா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஏன் ஏன் ஏன் இப்படி??? அந்த இரண்டாவது படத்தில் ஒரு சின்ன மோதிரத்தோட அந்த கையை பாருங்க... சோ கியூட்... அதனால் சொன்னேன். எல்லாம் கையும் அழகு தான்... உங்களுக்கு போடாமலா? லாவி கை கியூட்டோ கியூட்டா இருக்குமே :) கண்டிப்பா போடுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்... கலக்கலா இருக்கு இந்த கலர்ஃபுல் குருவி!
எத்தனை சிம்பிளா இவ்வளவு அழகா, வாய்ப்பே இல்லை... பிரமாதம்! அழகாய் இதை செய்த மூவரணிக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ