பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 2

அந்த த்ரெட் ரொம்ப பெரியதாக போனதால் இங்கே புது த்ரெட் ஆரம்பித்து உள்ளேன். ப்ரண்ட்ஸ் இனி இங்கே நம்முடைய பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே பகிர்ந்துக் கொள்வோம். ok lets start. யார் முதலில் ஆரம்பிக்கிறாங்கன்னு பார்ப்போம்.

அந்த த்ரெட் ரொம்ப பெரிசா இருந்துச்சு அதான் இங்க வந்துட்டன். நீங்க சொன்னது பதில் இல்லை மர்ழியா மேடம்.

ஒஹ் இல்லையா>?இப்ப வெளியே போக கிளம்பிட்டு இருக்கேன்...நல்லா யோசிக்குறேன் வந்து பதில் தாறென்..நடு ரோட்டில் புலம்பாமல் இருந்தால் சரிதான் :-0
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

யப்பா.. இங்கே உள்ள பாதி விடுகதைகள் நெட்ல இருந்து சுட்டதா இருக்குப்பா.. நிறைய பேர் நெட்ல பார்த்தே ஆன்ஸர் கண்டுபிடிச்சு சொல்லிட்டு, யோசிச்சு விடை கண்டுபிடிச்ச மாதிரி கதை விட்றாங்கப்பா... :-)

இப்ப நான் சொல்றேன் விடுகதை.. இது எல்லாம் எங்கேர்ந்தும் சுடாத விடுகதைகள். விடுகதை புலிகள், சிங்கங்கள், நரிகள் எல்லாம் இப்ப விடை கண்டுபிடிச்சு சொல்லுங்க பார்ப்போம்.

#1
கரகம் கால் மேலே
கால் சிலம்பு தலை மேலே
இடுப்பில்லா கரகாட்டக்காரி
இரவெல்லாம் ஆட்டம் போடுறா - அவள் யார்?

#2
பட்டு போல வட்ட நிலா
பகலில் மட்டும் தெரியும் நிலா
விட்டம் பார்த்து வாத்தியாரு
விரல் விட்டு எண்ணினாரு
கை விரலுக்கு நாலு
கால் விரலுக்கு ஆறு - அது என்ன?

#3
மூணு கை அஞ்சு கால் முக்கால் மனுசன்
முகத்தில் ஆறு கண் இருக்கு மூக்கும் இருக்கு
முதுகு மட்டும் ஒடிஞ்சு போயி தரையில் கிடக்கு - அவன் யார்?

#4
வளைஞ்சு திரிஞ்சு ஓடும் அது நதியுமல்ல
வழவழப்பா இருக்கும் அது பாம்பும் அல்ல
கிளையெல்லாம் தொங்கும் அது காயும் அல்ல
கிணற்றுக்குள் கிடக்கும் அது கயிறும் அல்ல - அது என்ன?

#5
அந்தரத்தில் வீடு கட்டி
அதிலே ஆறு ஜன்னல் வச்சு
கதவு அடைச்சு காத்திருக்கான்
கண் இல்லாத சூனியக்காரன் - அவன் யார்?

இன்னும் இருக்கு. இதுக்கு முதல்ல கண்டுபிடிங்க.. அப்புறம் எடுத்து விடு்றேன். :-)

என்னண்ணா சொல்லுறீங்க?நான் மண்டையை கசக்கிட்டு இருக்கேன்...அண்ணா நமக்குள் இருக்கட்டும் அது எந்த நெப்சைட்? ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னை நம்புங்க.. இதை எந்த வெப்சைட்ல இருந்தும் சுடல.. :-)

1) கொசுவர்த்தி சுருள் (+ ஸ்டேண்ட்)?
மற்றது நாளை யோசிக்கிறேன். முதல் விடை சரியா?

ம்ஹூம்.. இல்லை. :-(

கொஞ்சம் யோசிச்சிங்கன்னா நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க..

இதெல்லாம் கொஞ்சம் ஈஸிதான். அடுத்த செட் 10 விடுகதை தயாரா இருக்கு. அது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இதுக்கு விடை வந்தபிறகு அதை சொல்றேன் :-)

சீலிங் ஃபேன்?

தூக்கம் வருது அண்ணா.....இதுவும் சரி இல்லாட்டி நாளைக்குதான் போங்க....!

நீங்க வேற எங்கேயோ போறீங்க.. இதை அப்படி யோசிக்கக்கூடாது.. :-)

சரி, இன்று போய் நாளை வாருங்கள். எனக்கும் தூக்கம் கண்ணை சுத்துது. முகப்புல தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி போட்டுட்டு நானும் தூங்க போறேன்.

குட் நைட்

அப்படியா சங்கதி? பட்டுபட்டென்று பதில் சொல்றாங்களே எனக்கு மட்டும் ஏன் ஒன்றும் தெரியமாட்டேனென்கிறதே என்று எத்தனை நாள் என் தூக்கமெல்லாம் தொலைந்தது, இப்பத்தானே புரியுது.... நெட் விளையாட்டெல்லாம்.... அதுதான் நம்ம சிங்கம், அண்ணா பாபு... புறப்பட்டிருக்கிறார், இதைப் பார்த்தா நெட்டிலிருந்து வரவில்லை , தாத்தாவின் பழைய பரணிலிருந்துதான் வந்திருக்கிறது...... இருந்தாலும் நாங்கள் விட்டுவிடுவோமா? .....
அஸ்மாக்கு நித்திரை வந்திட்டுது எழும்பினதும் பாருங்க பதில்களை...

காயத்திரியின் புதிருக்கெல்லாம் பதில் வந்துவிட்டதோ தெரியவில்லை, அது பழைய threadல் இருப்பதால் எனக்குத் தெரியவில்லை....

இப்போது இதற்குப் பதில்....
#1
கரகம் கால் மேலே
கால் சிலம்பு தலை மேலே
இடுப்பில்லா கரகாட்டக்காரி
இரவெல்லாம் ஆட்டம் போடுறா---நுழம்பு வலை

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்