கவிதை தொகுப்பு - 4

மௌனம்

விடை அறியாத சமயம்
ஆசிரியர் முன் மாணவன் மௌனம்

காதலிக்கு கணவனாகி விட்டால்
கடைப்பிடிப்பது: மௌனம்

பேச்சை முற்றிலும் தொலைத்துவிட்டு
தொலைக்காட்சி முன் மங்கையரின் மௌனம்

செய்திமட்டுமே செவிமடுக்கும் முதியவருக்கும்
சிம்ரன் தோன்றினால் வாய் பிளந்த மௌனம்

வேலைக்குப் போகும் மருமகள் என்றால்
மாமியார் கூட மௌனமோ மௌனம்

துறுதுறுத்த சிறுவன் கூட 'கார்ட்டூன்' முன்
கைகட்டி, கண்மூடா மௌனம்

இன்டெர்னெட், வெப்சைட் என்று
முகமறியா முகத்துடன் முடிவடையா மௌனம்

காதலியின் கல்யாணத்தில் கலந்து கொள்ளும்
சமயம் வாழ்த்த இயலா வாய்மூடி மௌனம்

சோகம் மிக சுமந்தாலோ
சொல்லவியலா மௌனம்

கண்கள் பேசும்போது
வாய் மட்டும் மௌனம்

அவனி எங்கும் அமைதி என்றால்
அழியாமலிருக்கும் அழகு: மௌனம்

- தேன்மொழி முகில்குமார்

படிப்பு

ஐந்து மணிக்கே அடிக்கும் அலாரம்
ஆறுமணிக்கு அம்மாவின் அலறல்
ஏழுமணிக்கு சாப்பிடும் அவதி
எட்டுமணிக்கு ஆட்டோவில் அமுங்கி

ஒன்பது மணிக்கு ஒழுங்காய் அமர்ந்து
பத்து மணிக்கு பாட்டாய் படித்து
பதினோரு மணிக்கு 'ப்ரேக்' மணி அடித்து,
பன்னிரெண்டு மணிக்கு உணவு விழுங்கி

ஒரு மணிக்கு எழுதி களைத்து
இரண்டு மணிக்கு சத்தமாய் கத்தி
மூன்று மணிக்கு அமர்ந்தே உறங்கி
நான்கு மணிக்கு வீடு திரும்பினால்

நாளைய பாடத்தை இன்றே நடத்த
நம்மோடு இங்கு அமரும் அம்மா
நாள் முழுதும் படிப்பு. சும்மாவா?
நான் படிக்கும் படிப்பு எல்.கே. ஜி!

- தேன்மொழி முகில்குமார்

பிடிவாத மனது...

பல நாள் எண்ணியிருந்த ராகம்...
சில நாளில் சேர்ந்ததிந்த பாகம்....

ராகங்கள் சேர்ந்தாலும்
தாளங்கள் சேராததேனோ..?

எழுத்துக்கள் சேர்ந்தாலும்
வார்த்தைகள் கூடாததேனோ...?

ஒன்று சேர்ந்தால்தான்
ஒன்று விலகிச் செல்லுமோ....!

விடமாட்டேன் என்று
பிடிவாதம் பிடித்தது மனது...

மனதின் திசையிலேயே சென்று
மவுனமாக ஜெயித்தது என்பேனா...!

வார்த்தைகளை வரிசையாகப் போட்டதில்
வசமானது மனது என்பேனா...!

இதோ...ஒதோ....
எண்ணிய ராகத்தில்
புடைத்த வார்த்தைகளில்
உருவான என் படைப்பு...!

வெற்றி பெறவில்லையா
என் கவிதைகள்.....!

- ரேணுகா ராஜசேகர்

மேகங்கள்

தன்னுள் பதிங்தவளை
வெளியே தேடியலைந்து
கண்ணீர் வடிக்கின்றன.....
"மழையாக............"

வழிகாட்ட...

பறவைகளுக்கும்
முகவரி உள்ளன
"சாலையோர மரங்களில்..."

களங்கம்...

முழு நிலவிலும்
களங்கமுள்ளது
"குழம்பிய குட்டை...."

நி(ல்)லாப் போர்
உரிமைப் போராட்டம்
வானுக்கும், மேகத்திற்கும்
"நிலவு யாருக்கென்பதில்...."

'இலவசம்'

அரிசி, பருப்புடன்
புழுக்களும், கற்களும்
"இலவச இணைப்புகளோ...!"

- ரேணுகா ராஜசேகர்

காதல் விதை

பாலைவனத்தில் விதைத்தாய்
உன் காதல் விதையை!
எத்தனை வீரியம் உன்
காதல் விதைக்கு!!-அசந்து போகிறேன்!!
என் மனம் முழுவதும் காதல்
பூஞ்சோலையாய் மாற்றினாய் இன்று!!
எத்தனை வீரியம் உன்
காதல் விதைக்கு-என்னவளே!!

- ரம்யா ரமேஷ்

சுமை

பத்து மாதம் ஒரு சிசுவை சுமக்கும்
சுகத்தை விட ஆயுள் முழுவதும்
உன்னை மனதில் சுமக்கும் சுமையே
எனக்கு அர்த்தத்தை கொடுக்கிறது.
உன்னைச் சுமப்பதினால் தினம் தினம்
புதியதாய் பிறப்பவள் நானே..

- ரம்யா ரமேஷ்

காலம்

இலையுதிர் காலமிது
உதிரட்டும்-உன்
தோல்விகள்!

மலர்கின்ற காலமிது
மலரட்டும்-உன்
புன்னகை!

காய்கின்ற காலமிது
பெருகட்டும்-உன்
மகிழ்ச்சிகள்!

கனிக்கின்ற காலமிது
கனியட்டும்-உன்
வெற்றிகள்!

வசந்த காலமிது
வளரட்டும்-உன்
வசந்தங்கள்!

- அனிதர்மா

மனிதனே !

ஓ ! மனிதா தோல்வி கண்டு
அஞ்சாதே!
குனிந்தால் குட்டும் உலகம்தான்
தலை நிமிர்!
கல்லை உரசித்தான் நெருப்பை
கண்டோம்
உன்னை நீயே உரசு,நீ
யார் என்று உனக்கு புரியும்
காடென்ன,மேடென்ன
இறங்கி நட
உன் காலடித்தடம் பட்ட இடமெல்லாம்
விடை கிடைக்கும் உன் வாழ்க்கைக்கு.

- கவிதா சிவக்குமார்

Comments

படிப்பு என்ற ஒரு கவிதை மட்டும் தற்போது படித்தேன், உடனே பாராட்டுகிறேன் இப்பொழுது. அருமை, அருமை தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

Don't Worry Be Happy.

எல்லா கவிதைகளும் அருமை....

காலம் -என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

மனிதனே கவிதை -தோல்வியில் உள்ளவனை உற்சாகமூட்டும்.

சுமை -கவிதை அழகோ அழகு. படிக்கும் போது மெய்சிலிர்த்தது.

//இதோ...ஒதோ...// அதோ என்பதை தான் அப்படி போட்டீங்களா? அழகான வரிகள். கைக்கூ -அனைத்தும் அருமை.

மௌனம் -சில வரிகள் சிந்திக்கவும், சில வரிகள் சிரிக்கவும் வைத்தது

படிப்பு -சூப்பர் பா..... நான் கூட 10ம் வகுப்பு புள்ளைன்னு நெனச்சேன். எல்கீஜிக்கே இந்த அளவு சுமையான்னு நினைக்கும் போது மனசு கஷ்ட்டமா தான் இருக்கு. அழகான அர்த்தமுள்ள கவிதை

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட்மின் அண்ணா நன்றிகள் அனுப்பிய கவிதையை நானே மறந்துவிட்டேன். தேன்,அனி மெளனம்,காலம் கவிதைகள் அருமையாக இருக்குப்பா....

என் கவிதைகளை வெளியிட்ட சகோதரர் அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.
அனைத்து கவிதைகளும் அருமை.அவற்றை பாராட்டியுள்ள ஜெயலஷ்மி,ஆமினா,ரேணுகா ஆகியோருக்கும் என் நன்றி.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

அழகும் அர்த்தமும் ஒருங்கே சேர்ந்த பூக்க்குடை உங்கள் கவிதைகள்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள்.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்..
ஒரு சில நேரங்களில் வாழும் வாழ்க்கையே நரகமாய் எனக்கும் தோன்றுகிறது..
மாற்ற முடியவில்லை..
வாழ்த்துக்கள் நல்ல இருக்கு உங்க கவிதைகள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அட்மின் அவர்களுக்கு எனது கவிதையை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.

Try and try again until you reach the target.

Anitha

னன்றி ஆமினா, ரேணுகா, தேன்மொழி.

வாழ்த்திய மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.

தேன்மொழி கவிதைகள் இரண்டும் மிகவும் அருமை.

Try and try again until you reach the target.

Anitha

ஊக்கம் அளிக்கும் உற்சாகமான கவிதை உங்களுடையது.வாழ்த்துகிறேன் அனி.தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

ரம்யா ரமேஷ்,கவிதா சிவகுமார்..
உங்களுடைய கவிதைகள் நன்றாக இருகின்றன
தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

தேன்மொழிக்குபாராட்டு
மௌனம் ,படிப்பு இரண்டு கவிதைகளும் அருமை.
அன்புடன்
சந்திரா

தங்கள் பாராட்டுக்கு நன்றி

Try and try again until you reach the target.

Anitha