இது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்?

இது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்? தோழிகளே .வெளிநாட்டுக்கு போன என் சொந்தகார பையன் அங்கையே இன்னொரு திருமணம் செய்துக்கிட்டான் அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறது இரண்டும் கைகுழந்தைகள் அந்த குழந்தைகளை வைச்சுக்கிட்டு அந்த பொண்ணு ரொம்ப கஸ்டப்படுராங்க தோழிஸ் .இன்னொரு திருமணம் செய்த அவரு முதல் மனைவி குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டான் ......சட்டத்தின் மூலமா கொண்டுவரமுடியுமா? அவரை கொண்டு வர என்ன என்ன வழிகள் இருக்கு தோழிகளே இது மாதிரி முதல் திருமணம் செய்துட்டு திருட்டு தனமா இன்னொரு திருமணம் செய்ரவங்களை என்ன செய்யலாம் தோழிகளே என் சொந்தகார பையன் தான் தோழிகளே ரெண்டுபேரையும் சேர்த்து வாழவைக்க வழி என்ன சொல்லுங்கள் தோழிகளே அந்த பாதிக்கபட்ட பொண்ண பார்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு பா....அந்த நாட்டு தோழிகள் உதவுவிஙலா?அந்த நாடு மலேசியா யாராவது உதவ முன் வாங்க தோழிகளே.....ப்ளீஸ்......

தோழிகளே உங்களுடைய பதிலுக்காக நான் காத்துக்கிட்டு இருக்கேன் ப்ளீஸ் வாங்க.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க தோழிஸ் ப்ளீஸ்..அந்த பெண்ணுக்கு உதவ வாங்க......மலேசியா தோழிகள் யாராவது இருக்கிங்கலா...வாங்க ப்ளீஸ்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா அந்த உறவினரின் மனைவிகாகவும் குழந்தைகளுக்கவும் மிகவும் வந்துகிறோம்.
உதவின என்ன மாதிரி உதவி வேனும் உங்கலுக்கு இங்கே தோழிகள் ஆலோசனை சொல்லுவார்கள்,கருத்தை சொல்லு வார்கள் அப்படி இருக்க மலேசியா தோழிகள் என்ன உதவ முடியும் அதும் இல்லமல் இது குடுப்ப பிரச்சனைவேறு உங்கள் உறவினரை நன்கு அறிந்த நீங்கள் தான் குடும்பதினருடன் கலந்து ஆலோசித்து முடிவு பன்னனும்..உதவ முடியாதுன்றத விட உதவி உங்கள் குடுப்பத்தினர் செய்வதே சிறந்தது....தவறாக கூறி இருந்த்தால் மன்னியுங்கள்..

கவிதா முதலில் ஒரு சட்ட நிபுணரிடம் சட்ட ஆலோசனை கேளுங்கள். இரு நாட்டு விதிகள் எப்படி என்பதைப் பொறுத்துதான் அவரை எப்படி இந்தியா கொண்டு வருவது என்பதைப் பற்றி முடிவு செய்ய முடியும். அந்த ஆள் மலேஷியாவில் மணந்திருப்பவர் மலேஷிய குடியுரிமை உடையவரா இல்லை இந்திய குடியுரிமை உடையவரா? இந்திய குடியுரிமை உள்ளவர் என்றால் பலதார மண தடைச் சட்டத்தின் படி வழக்கு தொடர முடியும். மலேஷியர் என்றால் விதிகள் எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை.சட்ட ஆலோசனை பெற்று அதன் படி நடவடிக்கைகள் எடுப்பதே சிறந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி சிவா அந்த ஆள் அங்க திருமணம் செய்து அவருக்கு 1 குழந்த வேற பிறந்துருச்சு இந்திய குடியுரிமை பெற்றவர் தான் ..அங்கேயும் குடியுரிமை பெற்றிருக்கிராரா நு தெரியலை பா .சட்டத்தின் மூலமா அவங்க மனைவி சந்திச்சுக்கிட்டு தான் இருக்காங அவன் எதுக்கும் அசையுர மாதிரி தெரியலை நம்ம வனியோட அப்பா சட்டம் சம்பந்த பட்ட துறையில இருக்கிராங்கல்ல பா அவங கிட்ட கேட்டா எதாவதி ஐடியா கிடைக்குமா ???

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அந்த ஆள் முதல் மனைவிக்கிட்ட இரண்டாவது திருமணத்தை பத்தி பேசினதும் இல்ல ..மறைத்துக்கிட்டே வந்தான் ஊருக்கு வரும் போது எல்லா எவிடன்ஸ் அ காமிசு கேட்டதும் அவன் ஒத்துக்கிட்டான் 2 வது மறு நாள் சொல்லாம கோள்ளாம ஓடிட்டான் மலேசியாவுக்கு...அவனை எப்படி இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருரது யாரை தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும் பா....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வனிதா எங்க இருந்தாலும் ஓடி வாங்க ப்ளீஸ் ...உங்கலால எனக்கு ஒரு உதவி வேணும் பா.....மேலே போட்ட பதிவ படிச்சு பார்த்துட்டு எனக்கு நீங்க உதவி பண்ணமுடியுமானு பாருங்க வனி...... ப்ளீஸ்..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நன்றி சஞ்சனா உங்க பதிவுக்கு...இது குடும்ப பிரச்சினை தான் பா அவங்களுக்கு என்ன செய்ரதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்காங்க பா...அந்த பையனோட அப்பாவும் இதே வேலை செய்தவரு தான்...(அங்க போய் 2 திருமணம் செய்துக்கிட்டாரு)லாயர் கிட்ட போனதுக்கு இலுத்து அடிக்கிரானுக பா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வனிதா,கவி சிவா,யாராவது வாங்க பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவி, அந்த ஆள் மணம் செய்திருக்கும் மலேஷியாவில் உள்ள பெண்ணும் இந்தியரா?

எனக்கு சரியான விவரங்கள் சொல்ல தெரியலை கவி. இவ்வளவு நடந்த பின்னும் அந்த ஆளோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை தேவைதானா? சட்டத்தின் மூலம் அவனை இந்தியா கொண்டு வந்து இந்த பெண்ணுடன் சேர்த்து வைத்தாலும் அது என்ன மாதிரியான வாழ்க்கையாக இருக்கும்? இதையெல்லாம் யோசித்து அந்த பெண்ணை முடிவெடுக்க சொல்லுங்கள். சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லைன்னு தோணுச்சுனா அந்த ஆளை சும்மா மட்டும் விட்டுடாதீங்க.

இன்னொரு குறுக்கு வழி ஏதாவது பொய்யைச் சொல்லி அந்த ஆளை இந்தியா வர வையுங்கள். வந்ததும் பாஸ்போர்ட்டை பறித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்ககளில் இறங்குங்கள். இவனுங்களை எல்லாம் குறுக்கு வழியில்தான் மடக்கணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்