மிரர் ஒர்க்

தேதி: April 24, 2012

5
Average: 4.6 (10 votes)

 

முகம் பார்க்கும் கண்ணாடி
க்ளாஸ்கலர்
கோல்டுநிற கிலிட்டர்ஸ்
பெவிக்கால்
ஸ்டோன்
மார்க்கர்

 

தேவையான அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் உங்களுக்கு விருப்பமான டிசைனை படத்தில் உள்ளது போல் மார்க்கரால் வரைந்து கொள்ளவும்.
அந்த டிசைன் மேலே கோல்டுநிற கிலிட்டர்ஸால் அவுட் லைன் வரையவும்.
வரைந்துள்ள பூக்களுக்கு விருப்பமான க்ளாஸ் கலர் கொடுத்து நிரப்பவும். இலைகளுக்கு க்ரீன் கலர் கொடுக்கவும்.
விரும்பினால் நன்கு காய்ந்ததும் ஸ்டோன் ஒட்டி அலங்கரிக்கவும்.
இந்த மிரர் ஒர்க் செய்வதற்கு மிகவும் எளிதாக, பார்ப்பதற்கு நல்ல ரிச்சாக இருக்கும். வாஸ்துவுக்காக வாசலில் கண்ணாடி வைத்திருப்பார்கள். அதற்கு பதிலாக இதுப்போல் டிசைன் செய்தும் வைக்கலாம். அன்பளிப்பாகவும் செய்து கொடுக்கலாம். க்ளாஸ் பெயிண்டிங்கில் கருப்பு லைனருக்கு பதிலாக கிலிட்டர்ஸூம் பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டீம்...
இந்த குறிப்பு செய்து அனுப்பலாம்னு எல்லா பொருளும் வாங்கி வைச்சேன்... நீங்க செஞ்சே போட்டுட்டீங்க.... நல்லா அழகா இருக்கு........

அழகான வேலைப்பாடு பாராட்டுக்கள். எளிமையாவும் இருக்கு

நம்ம டீம் ஒர்க்... எனக்கு என்னைக்கும் ஃபேவரட் :) கலரும், ஒர்க்கும் ரொம்ப யூனிக். இதுவும் அந்த வகையில் அசத்தலான வேளைப்பாடு. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப.. ரொம்ப... ரொம்..ப அழகா இருக்கு. அதை எனக்கு பார்சல் பண்ணிருங்க.

‍- இமா க்றிஸ்

குறைவான பொருட்கள் கொண்டு அழகா செய்து இருக்கீங்க.கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கணும்.வாழ்த்துக்கள் அறுசுவை குழு.

அன்பு டீம்

அழகாக செய்து காண்பித்திருக்கீங்க. அருமையாக இருக்கு.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

Super

அழகான வேலைபாடு!! சூப்பர்!!

கை தேர்ந்த வேலைப்பாடு. வரைந்துள்ள டிசைன் அழகு, அதனுள் சிலுப்பாமல் அடித்துள்ள கலர் அழகோ அழகு. வாழ்த்துக்கள் டீம்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்கக்கிட்ட இருந்து வரவேண்டிய க்ராஃப்ட் மிஸ் பண்ணிடோம்:( கொஞ்சம் லேட்டா போட்டு இருந்தா உங்க க்ராஃப்ட்ட பார்த்திருப்போம் ப்ரியா. இந்த ஒர்க் செய்து இருந்தீங்கன்னா போட்டோ அனுப்பி வைங்க ப்ரியா நாங்கள் பார்க்கிறோம். தங்கள் வருகைக்கு நன்றி.

உமா தங்கள் பாராட்டிற்கு நன்றி.

எங்க க்ராஃப்ட் எல்லாம் உங்க ஃபேவரட்டா வனி மிக்க நன்றி.

நன்றி இமாம்மா ரொம்ப பிடிச்சிருக்கா இந்த க்ராஃப்ட் பார்சல் அனுப்பி விடுறோம். அட்ரஸ் சொல்லுங்க. இந்த சைஸ் ஒகே வா.

ஹர்ஷா தங்கள் வாழ்த்திற்கு நன்றி. குறைந்த பொருட்கள் கொண்டு செய்தாலும் பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருக்கும் கண்டிப்பா செய்து பாருங்க. இந்த சின்ன டிசைன் வரைந்து கலர் கொடுப்பதற்கு அரை மணி நேரம் போதும். காய்வதற்கு 12 மணி நேரம் ஆகும்.

நன்றி சீதாம்மா, ஹர்ஷிகா, ஜெயாராஜி

லாவண்யா தங்கள் வாழ்த்திற்கு நன்றி. //கை தேர்ந்த வேலைப்பாடு// அப்படியெல்லாம் இல்ல லாவண்யா உங்களாலும் செய்ய முடியும். இது ரொம்ப ரொம்ப சிம்பிள். க்ளாஸ் கலர் கொடுத்தும்போது கிலிட்டர்ஸ் மேல் பட்டாலும் மீண்டும் ஒரு அவுட் லைன் கொடுத்துக்கலாம். செய்து பாருங்க.

அன்பு தோழிகளே ஓர் உதவி வேண்டும். என் ஊர் கும்பகோணம் Pot பெயின்ட் செய்ய fralika 3 d painet camel கம்பெனி பெயின்ட் எங்கு கிடைக்கும்.