தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கலாம்?

1.தலைமுடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம்?

2.தலைமுடி நன்றாக வளர்வதற்க்கு என்ன செய்ய வேண்டும்?

3.தலைமுடியின் முனியில் வெடிப்பு ஏற்படுகிறது.முடியில் வெடிப்பு ஏற்படாமல் இறுக்க என்ன செய்ய வேண்டும்?. நன்றி.

டியர் பானு தலைமுடியைப்பற்றிய தங்கள் கேள்விகளுக்கு எனக்கு தெரிந்ததை ஒவ்வொன்றாக விடையளிக்கின்றேன்.
தலைமுடி உதிராமல் தடுக்க முடியாது.ஒரு குறிப்பிட்ட அளவு முடியானது தினமும் உதிர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக முப்பது முடிகள் வரையில் உதிரலாம். அதற்க்கு மேல் போனால் கொஞ்சம் அதிகப்படியான பராமரிப்பு தேவை.
முதலில் தினமும் தலை குளிப்பதை நிறுத்த வேண்டும்.
கடைகளில் வாங்கும் ஷாம்பு உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். மாறாக சலூனில் கிடைக்கும் ஷாம்புவைதான் உபயோகிக்க வேண்டும். விலை சாதாரண ஷாம்புகளை விட மூன்று மடங்காவது வித்தியாசம் இருக்கும். ஆனால் முடி கொட்டுவது நிற்கும் வரையிலாவது அதை வாங்கி உபயோகிப்பது நல்லது.
ஷாம்பு மட்டும் போடக்கூடாது, கன்டிஷனரும் போட்டுத்தான் தலை குளிக்க வேண்டும்.
வாரத்திற்க்கு ஒரு முறையாவது விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயிலை சமமாக எடுத்து கைசூடு பொறுக்கும் அளவிற்க்கு சூடு படுத்தி தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு துவாளையை சுடு தண்ணீரில் முக்கி எடுத்து தலையில் இருக்கமாக முன்டாசுப் போல் கட்டி குறைந்தது அரை மணி நேரமாவது இருக்க வேண்டும். துவாளை ஆறி விட்டால் மீண்டும் மீண்டும் சுடுதண்ணீரில் முக்கி கட்ட வேண்டும். நன்கு ஆவி கொடுத்த பிறகு தலை குளிக்க வேண்டும்.
தலை முடியை துணியினால் துவட்டி காயவைப்பது நல்லது. இல்லாவிடில் blow dryer யைக் கொண்டு குளிந்த காற்று படும் படியாக செட்டிங் கை வைத்து காய வைக்கலாம்.
சாதாரணமான சீப்பு போட்டாமல் பிரஷ்ஷைக் கொண்டு வார வேண்டும். கைகளால் சிக்கு எடுக்க கூடாது. ஈரமுடியில் சிக்கு எடுக்க கூடாது. இது போன்ற முறைகளை கையான்டால் முடி உதிராமல் தடுக்கலாம்.
முடி நன்கு வளர உடனடியான நிவாரணம் Amla HAIR OIL தான். தினமும் தலையில் பூசிப் பாருங்கள் பிறகு என்னிடம் நீங்களே கூறுவீர்கள் எப்படி இருக்கிறதென்று. என்னுடைய அனுபவத்தில் நன்றாக வேலைச் செய்தது. இது ஹைர் ஆயில் மட்டுமல்ல நல்ல ஹைர் டானிக்கும் கூட.
முடிகளின் நுனியில் பிளவு ஏற்பட்டால் அடிக்கடி அதை கத்திரித்து விடவும்.முடியின் நீளத்தை குறைத்துக் கொண்டால் நன்கு அடர்த்தியாக வளரும். இது போன்ற பிரச்சனைகளும் ஏற்ப்படாது.
முடிவாக தலைமுடியைப் பற்றி அதிகம் கவலைப் படுவதை நிறுத்த வேண்டும். நம்முடைய தலைமுடியும், நகமும் கடைசி வரையில் வளர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.ஆகவே வீணாக அதை பற்றிய கவலையை விட்டு விடும் படி கேட்டுக் கொள்கின்றேன்.ஒகே, நன்றி.

டியர் மனோகரி மேடம் மிக்க நன்றி.

ஆண்களுக்கு தலைமுடி உதிர்வதை எவ்வாறு தடுக்க்கலாம்?நன்றி.

டியர் பானு,ஆண்களின் தலைமுடிக்கு சாதாரணமான பராமரிப்பே பொதுமானது என்று நினைக்கின்றேன். மற்றபடி நேரிடையாக சுடுதண்ணீரில் ஷவர் செய்வதைக் குறைக்கலாம். உச்சந்தலையில் அடிக்கடி ஏதாவது ஒரு எண்ணெயை தேய்க்கலாம்.மேலும் அவர்களே வீட்டில் போடும் நிறபூச்சுதல்களாலும் சீக்கிரத்தில் முடி கொட்ட வாய்ப்புள்ளது. மற்றபடி பெண்களை விட ஆண்கள் நிறைய்ய மன உலைச்சல்களுக்கு ஆளாவார்கள் அதை குறைத்துக் கொண்டால் கொஞ்ச காலத்திற்க்கு முடி கொட்டுவதை தள்ளிப் போடலாம்.முக்கியமாக மரபியல் காரணமாக ஆண்களின் முடி கொட்டி வழுக்கை ஏற்படுவதை யாராலும், எவற்றாலும் தடுக்க முடியாது.ஆனால் ஒன்று வழுக்கைதலை உள்ள ஆண்கள் பொதுவாக பார்க்க நல்ல ஸ்மாட்டாக இருப்பார்கள், அது ஒரு நல்ல ப்ளஸ் பாயின்ட் அவர்களுக்கு என்று தான் கூறுவேன்.பெண்களுக்கும் அது ரொம்ப பிடிக்கும், சாரி பெண்மணிகளே... ரகசியத்தை வெளியிட்டு விட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள்.நன்றி.

டியர் மனோகரி மேடம் நலமா இருக்கிறிர்களா?.உங்க பதில்கள் அணைத்தும் நல்ல பயண்ணுள்ளதக இருக்கின்றன மிக்க நன்றி.நேரிடையாக சுடுதண்ணீரில் ஷவர் செய்வதைக் குறைக்க சொன்னிர்கள் அப்ப எவ்வாறு குளிப்பது என்று சொல்லுங்கள்.நன்றி.

நான் நலமாக இருக்கின்றேன் பானு, நன்றி. ஆமாம் நேரிடையாக ஷவரின் சுடுதண்ணீரை முதலில் தலையில் கொட்டக் கூடாது.அதற்க்கு பதிலாக மிதமான தண்ணீரிலிருந்து ஆரம்பித்து பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் சூடான ஷவரில் குளிக்கலாம். காரணம் சுடுதண்ணீரை திடீரென்று தலையில் கொட்டுவதால் மயிரின் வேர்கணுக்கள் பாதிக்கப்பட்டு முடி சீக்கிரத்தில் விழ வாய்ப்பிருக்கும். அதற்க்காக உடம்பை முதலில் நனைத்து விட்டு பிறகு தலையில் தண்ணீரை கொட்டக் கூடாது.
எப்பொழுதுமே குளிக்கும் பொழுது முதலில் தலையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் உஷ்ணம் உடல் முழுவதும் ஒரே சீராக பரவும். பச்ச தண்ணீரில் குளித்தாலும் இதே முறையைத்தான் கையாள வேண்டும்.
தங்களுக்கு புரியும்படி நான் சரியாக விளக்காமல் இருந்தால் மீண்டும் தெரிவிக்கவும்.நன்றி.

டியர் மனோகரி மேடம் தாங்கள் கூறிய பதில் நன்றாக புரிந்து விட்டது மிக்க நன்றி.

Jothisvarubiny sinnathurai

1. If you are eating carrot, curryleaves, and greenleaves can`t loss hair.

2. If you are suffering/Thinking/not sleeping
can loss hair.

Jothisvarubiny sinnathurai

அருணா கிருஷ்ணமுர்த்தி, கனடா
சலுனில் எந்த வகையான சாம்பு உபயோகிப்பார்கள் என்பதை கூறுங்களேன்.பிளிஸ்.நான் சலுனுக்கு போவது கிடையாது.நன்றி.

அருணா கிருஷ்ணமுர்த்தி, கனடா

anbudan

The tips you gave for hair care is good.
thank u manaohari madam.
i have a lot of grey hair, i am 35 years old.
any special care to remove the grey hair, let me know any special diet which will reduce grey hair.

vidyavasudevan.

anbudan

மேலும் சில பதிவுகள்