உதவுங்கள் PLEASE.

வணக்கம் தோழிகளே, நான் அருசுவை தளத்திற்கு புதிது. எனக்கு திருமணமாகி 4 வருடம் முடிந்துவிட்டது, இன்னும் குழந்தை இல்லை.ஒரு தடவை நான் CONCEIVE ஆனேன் ஆனால் அது 15 நாட்களில் அபார்சன் ஆயிடுச்சு. நான் TREATMENT எடுத்திட்டுருந்தேன் டாக்டர் DERMOID CYST இருக்குதுனு LAPROSCOPY
பன்ன சொன்னாங்க செய்தபிறகும் நான் CONCEIVE ஆகல.அதன் பிறகு டாக்டர் METFORMIN TABLET 5 மாதம் சாப்பிட சொன்னங்க. PERIOD ஆன மூன்றாவது நாளீலிருந்து 5 நாள் CLOMID TABLET சாப்பிட சொன்னாங்க சாப்பிட்ட பிறகு 13-வது நாள் ஸ்கேன் பன்னும்பொது கருமுட்டை வளர்ச்சி நல்லா இருந்தது அப்போது OVULATION INJECTION போட்டாங்க. கடந்த மூன்று மாதங்களாக நான் CLOMID TABLET சாப்பிட்டதனால இப்பொழுது எனக்கு நிறைய கருமுட்டை உருவாகி உடையாமல் இருக்குதுனு சொன்னாங்க அப்படி இருந்தால் CONCEIVE ஆகுறதுல பிரச்சனை இருக்குமா? நான் மலை வேம்பு சாறு போன மாதம் குடித்தேன் இந்த மாதம் ரொம்ப எதிர்பார்தோம் ஆனால் இந்த மாதமும் PERIOD வந்துவிட்டது. எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது. என்னையும் உங்களுடைய தோழியாக நினைத்து உதவுங்கள் PLEASE.

மது இந்த மாதிரி நீர்க்கட்டிகள் வரது நார்மல்பா. பயம் வேண்டாம். முதல்ல அந்த நீர்கட்டிகள் சரியாக ட்ரீட்மென்ட் எடுங்க. டாக்டர் அது சரியான பிறகு கன்சீவ் ஆக ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க. சீக்கிரமே தாய்மை அடைவீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நீர்கட்டி பிரச்சனை இல்லன்னா இந்த கட்டிகள் சீக்கிரமே கரைஞ்சிரும். ஆனால் ட்ர்ரிட்மென்ட் தொடர்ந்து எடுங்க.

மிக்க நன்றி தோழி. உங்களுடைய பதில் மிகவும் ஆறுதலாக உள்ளது.

மேலும் சில பதிவுகள்