எந்த airways சிறந்தது

தோழிகளுக்கு வணக்கம், நான் இன்னும் 2 மாதம் கழித்து இந்தியா போலாம் நு இருக்கேன், எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு pls பதில் போடுங்க...,
1. எந்த airways ல் ticket சீப் ஆஹ இருக்கும்,
2. எதில் குழந்தைக்கு தேவையான வசதிகள் அதாவது bassinet, குழந்தையின் உணவு எல்லாம் கிடைக்கும், என் குழந்தைக்கு இந்தியா செல்லும்போது 6 மாதம் முடிந்து இருக்கும்., என் தோழிகள் சிலர் bassinet இருக்கு என்று சொன்னாலும் நேரில் போய் கேட்கும்போது இல்லை என்று சொல்லி ஏமாற்றுவார் என்று சொல்லுகின்றனர்...,
3. அதனால் நீங்கள் சென்று வந்த அனுபவத்தில் எந்த ஐர்வய்ஸ் சிறந்தது என்று எனக்கும் சொன்னால் வசதியாக இருக்கும் நான் இந்த மாத இறுதியில் டிக்கெட் புக் செய்ய உள்ளேன்,
direct flight aaga புக் பண்ணால் நல்லதா இல்லை இடையில் transit இருப்பது போல் புக் பண்ணுவது நல்லதா?
[(newyork to newdelhi) or (newyork to any gulf countries or europe countries)] குழந்தைக்கு எது கஷ்டமா இருக்கும்.., உங்கள் அனுபத்தில் நீங்கள் தெரிந்ததை சொல்லுங்கள் என்னை போல இருக்கும் மற்ற தோழிகளுக்கும் இது உதவும்!!!
அப்றம் ஒரு முக்கியமான கேள்வி, எங்களுடைய விசா validity முடிந்து விட்டது ஆனால் extension பண்ணும் form மட்டும் கையில் உள்ளது, இந்தியா சென்று திரும்பி வரும்போது extension வாங்கி வரவேண்டும், இங்கு உள்ள என் மற்ற இந்தியர்கள் ஐரோப் வழியாக சென்றால் transit விசா கேட்பார்கள் என்று கூறுகின்றனர், சிலர் தேவை இல்லை என்கின்றனர், அதனால் அமெரிக்காவில் வாழும் தோழிகள் இதை பற்றி தெரிந்தால் சொல்லவும் நாங்கள் j1, j2 visa.,

நன்றிகள் பல !!!!

ஹாய் இன்கு உங்க விசா பத்தி எல்லாம் தெரியாது. நான் கத்தார்ல இருக்கோம். ஆனா இனக்கு தெரிஞ்சு emirates airways நல்லது. இனக்கு qatar Airways direct flight இருக்கு ஆனா நான் எப்பவும் Emirates தான் போவோம். சர்வீஸ் நல்லஎ இருக்கும் அவங்களே Baby food தருவாங்க nappy bip ஸ்பூன் எல்லாம் கிடைக்கும் so நம்ம டென்ஷன் எல்லாம போகலாம். நீங்க bassinet வேனும்ன நீங்க டிக்கெட் புக் பண்ணும் பொது mention பண்ணிடுங்க and உங்க departure கு 48 hr முன்னாடி நீங்க online ல check in பண்ணிட்டு front seat புக் பண்ணிக்கலாம்.

அகிலா உங்கள் பதிலுக்கு முதலில் மிகவும் நன்றி, உங்களுக்கு தெரிந்ததையவது எனக்காக வந்து சொன்னதுக்கு மிகவும் நன்றி, emirates airways நான் பார்த்தேன் வசதிகள் லா நல்லா இருக்கு ஆனால் அதுல இங்க இருந்து டிக்கெட் விலை அதிகமா இருக்கு பா, அதான் யோசிச்சுட்டு இருக்கேன் , சரி பார்ப்போம் எது அமையுதுன்னு,

சரி மற்ற தோழிகளும் உங்கள் பதிலை சொன்னால் எனக்கு இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும்

அன்புடன் அபி

சிங்கப்பூர் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. எமிரேட்ஸ் நன்றாக இருக்கும் என்று சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் உங்கள் ஊரிலிருந்து ட்ராவல் செய்த அம்மாக்களை கேடுப்பருங்கள். ஏனென்றால் ஒவ்வொரு இடத்திலிருந்து கிளம்பும் ஏர்வேஸ் வேறு மாதிரியாகவும் இருக்கலாம். டிக்கெட் விலை அது ஏர்வேஸ் விட சீசன் பொருத்து தான் குறையும் கூடும். அதனால் நீங்க ஆஃப்

எப்பவுமே ட்ரான்சிட் தான் நமக்கு பெஸ்ட். ஏனென்றால் ஒரேஅடியாக ட்ராவல் செய்துக் கொண்டே இருந்தாலும் ஃப்ளைட்டில் அலுத்து விடும். அதுவும் குழந்தையும் க்ராங்கி ஆகி விடும். அதனால் ட்ரான்சிட் போது கீழே இறங்கி அங்கே இங்கே வேடிக்கை பார்த்தாலாவது அவர்களுக்கு நன்றாக இருக்கும். ட்ரான்சிட் இருக்கும் படியான ஒரு ட்ரிப் சூஸ் பண்ணுங்க.

எல்லா ஏர்வேசிலும் பெஸினெட் தருவார்கள். ஆனால் நீங்கள் செக் இன் முன்னதாகவே செய்தால் தான் அது கன்ஃப்ர்ம் ஆகும். சில நேரங்களில் கூட்டம் இருந்து அதிலும் குழந்தைகள் அதிகம் இருந்தால் ஃபர்ஸ்ட் கம் ஃப்ர்ஸ்ட் பேசிஸ் தான் அதனால் எவ்வளவு சீக்கிரம் செக் இன் செய்கிறோமோ அவ்வளவு நல்லது.

ஆமாம் சில இடங்களில் ஏர் ட்ரான்சிட் விசா அவசியம். எங்கெல்லாம் அவசியம் என்பதை நீங்கள் புக் செய்யும் போது கேட்டு தெரிந்துக் கொண்டு புக் செய்யவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிகவும் நன்றி நான் எப்ப எந்த கேள்வி கேட்டாலும் எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில் போடுறீங்க, நீங்க பதில் சொல்லுவீங்க நு நம்பிக்கையில் தான் எல்லா கேள்வியும் கேட்கிறேன் நீங்களும் என் நம்பிக்கையை காப்பாத்தி பதிலும் போடுறீங்க, மிகவும் நன்றி,
நீங்கள் சொன்ன படியே நான் க்கு கால் பண்ணி கேக்க ஆரம்பிச்சுட்டேன், இப்ப இன்னொரு சந்தேகம், என் பையன் bottle ல பால் குடிக்கவே மாட்டான், formula ம் அவனுக்கு பிடிக்காது, இப்ப தாய் பால் மட்டும் தான் குடுக்குறேன் flight ல் போகும்போதும் இடையில் transit க்கு இறங்கும்போதும் நானே பால் குடுக்க முடியுமா? இல்ல, பாட்டில் பீடிங் and formula அவனுக்கு இப்பவே பழக்க படுத்தணுமா? எல்லா ஏர்போர்ட் ளையும் குழந்தைக்கு பால் குடுக்க lactation room இருக்குமா? ?

அன்புடன் அபி

அப்படியா.....எப்படியோ உங்க நம்பிக்கைக்கு நான் பாத்திரம் ஆயிட்டேன் :) இருந்தாலும் ஒரு கோவம்.....மேடம் நு கூப்பிட்டு என்னை ரொம்ப வயசானவளா ஆக்கிட்டீங்க.

பீட் பண்றதுக்கு ரூம் தான் இருக்கணும் என்று அவசியமே இல்லை. நீங்கள் பீடிங் பண்ணுவதற்கு எதுவாக இருக்கும் டிரஸ் வாங்கிக் கொண்டு மேலே ஒரு வ்ராப் போட்டு மறைத்துக் கொண்டு கொடுக்கலாம். இதில்லேலாம் அசிங்கமே பார்க்க கூடாது. ரூம் எல்லா ஏற்போட்டிலும் இருக்கலாம் ஆனால் அதை தேடி பிடித்து அங்கே பொய் கொடுக்கறதுக்கு நமக்கு தான் டைம் இருக்கும்மான்னு தெரியாது. சில நேரங்களில் இரண்டு மூன்று மணி நேரம் ட்ரான்சிட் கூட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போக பத்தவே பத்தாது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அபி

நான் இதுவரையில் ஃபிரான்க்ஃப்ர்ட் ஜெர்மனி சென்றும், துபாய் சென்றும் தான் இந்தியா சென்று இருக்கிறேன்.இது வரையில் எனக்கு என்னவோ எமிரேட்ஸ் தான் நல்ல சர்வீசாக தோனியது.குழந்தைகளுக்கு மட்டுமின்று யாருக்காக இருந்தாலும் கனிவுடன் தேவையானதை கொடுப்பார்கள்.உணவும் சாப்பிடும் படி நன்றாக இருக்கும்.
உள்ளே சென்று உட்கார்ந்தாலே தூக்கம் வந்துவிடும் அளவில் சீட்களும், அதற்கு தேவையான பொருட்களும் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு தனி கவனிப்பு உண்டு.
முன் வரிசை சீட்டை முன்னமே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.அப்ப தான் குட்டியை வைக்க பெசிநெட் கொடுப்பார்கள்.

நீங்கள் குட்டிக்கு டிக்கெட் புக் பண்ண வேண்டியதில்லை.முன் வரிசை கிடைக்கலைனா,Flyebaby என்ற தொட்டில் கடையில் கிடைக்கும். முன் அமர்ந்து இருப்பவரின் பின் சீட்டு பக்கத்தில் இருந்து கட்டி விடலாம்.டிக்கெட் புக் செய்தால், காரில் பயன்படுத்தும் சீட்டை கொண்டும் செல்லலாம்.

லாவி சொன்னது போல.. ஒவ்வொரு இடத்தில் இருப்பவருக்கு தான் அந்தந்த விமானம் பற்றி தெரிந்து இருக்கும்.நான் சிங்கை வழியாக சென்றதில்லை என்பதால், அந்த பக்கம் போகும் விமானம் பற்றி தெரியாது.அது போல தான் ஒவ்வொருவருக்கும்.சோ நீங்க அங்க இருப்பவர்களை கேளுங்க.கத்தாரும் நல்லா இருக்கும்.டிக்கெட் சீப் என்பது சீசனுக்கு தகுந்தார் போல தான் மாறும்.. ;( .நீங்க தான் தேடி பார்த்து முன்னமே பதிவு செய்யணும்.குழந்தையை வைத்துக் கொண்டு ட்ரான்சிட் தேர்வு செய்தால், குழந்தைக்கு கொஞ்சம் வெளி காற்று கிடைக்கும். நல்லா இருக்கும்.அதே சமயம் ட்ரான்சிட் டைம், கடியா இருக்கும். குழந்தை விமானத்தில் செட் ஆகி இருக்கும் போது, திரும்பவும் கீழே இறங்கி, விமானம் ஏறும் போது மறுபடியும் அதற்கு கஷ்டமாக இருக்கும்.அதை ஏற்றுக் கொள்ள தடுமாறும். நேரா டெல்லிக்கு ஏர் இந்தியா தானே போகுது. எனக்கென்னவோ அந்த ஃப்ளைட் மேலே ஒரு நம்பிக்கை இல்லை. நல்ல விதமாக யாரும் சொன்னதும் இல்லை ..

எனக்கு தெரிந்து ட்ரான்சிட் விசா எல்லாம் கேட்பது இல்லை. நீங்க அங்கே போயி வெயிட் செய்து அடுத்த ப்ளைட் பிடிக்க போறிங்க. அதற்கு எந்த விசாவும் தேவை இல்லை. இருந்தாலும், அடிக்கடி ரூல்ஸ் மாறிட்டே இருக்கு. நீங்க சர்ச் பண்ணி யுரோப் பார்டர் கனைக்ஷனில் விசாரிங்க. அப்புறம் முடிவு பண்ணுங்க. ஆனா எங்களை கேட்டது இல்லை.பாருங்க.லாவி சொன்னது போல விசா கேட்கவும் செய்யலாம். நாட்டுக்கு நாடு மாறலாம்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா, குட்டிக்கு கண்டிப்பா டிக்கெட் புக் பண்ணனும். அவர்களுக்கு அம்மாவின் ட்ராவல் சார்ஜில் பத்து பெர்சென்ட் மற்றும் டாக்ஸ். நீங்கள் சொல்வது உள்ளூர் அதாவது அமெரிக்காவில் டிக்கெட் இல்லாமல் போகலாம். இரண்டு வயது வரை அவர்களுக்கு தாயின் டிக்கெட்டில் ஏதோ ஒரு பெர்சென்ட் அதற்க்கப்புறம் அவர்களுக்கு கிட்ஸ் டிக்கெட். எல்லாம் அனுபவம் தான்.

நீங்க சொல்லியிருக்கும் ஸ்லிங் லாங் ஃப்ளைட் ட்ராவல்ூக்கு ஒத்து வருமா? இல்லை பெசிநெட் இருந்தால் நீங்கள் கொஞ்சம் அக்காடன்னு இருக்கலாம். நீங்கள் எழுது ரெஸ்ட் ரூம் வரையிலும் கூட போயிட்டு வரலாம். அப்புறம் சாப்பிட வைக்கும் போதெல்லாம் இடைஞ்சலாகவே இருக்காது. இது எப்படின்னு தெரியலை....உங்களுக்கு தெரிந்தவர்கள் இதை யூஸ் பண்ணியிருந்தா கேட்டு சொல்லுங்க ரம்யா......தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கண்டிப்பாக ட்ரான்சிட் தேவை. இல்லையென்றால் ரொம்பவே கஷ்டம். இது என் சொந்த அனுபவம்.

அபி உங்களுடையது ஸ்டுடென்ட் விசா தானே அதுவும் இல்லாமல் காலமும் முடிந்துவிட்டதல்லவா? மேலும் சில ஐரோப்பிய நாடுகள் வழியாக செல்லும்போது சிலவற்றிற்கு தேவையாம். அதனால் தேவையில்லாமல் குழந்தையை வைத்துக் கொண்டு டென்ஷன் வேண்டாம். நன்றாக தெரிந்துக் கொண்டே செல்லவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவி

அப்படியா? 6 மாச குழந்தைக்குமா?ஒரு பிளாக்கில் எடுக்க தேவையில்லை என பெசிட்டாங்களே.. 2 வயதுக்கு உள் எனில். நீங்க சொன்னது போல அம்மாவின் டிக்கெட்டில் பர்சண்டேஜா இருக்கும்.
நான் சொன்ன அந்த தொட்டில் ரொம்ப சின்ன பாப்பாக்கு தான் லாவி. 8 மாதத்திற்கு உள். சர்ச் பண்ணி பாருங்களேன். அதை பயன்படுத்தி இங்கே சென்று இருக்காங்க.சும்மா அவசரத்துக்கு கையில் வைத்துக்கொள்ள வேண்டியது தான்.துணி போல இருக்கும். இந்த நெட் ஊஞ்சல் போல. பல மணி நேரம் அப்படி வைக்க முடியாது. சாப்பாடு வந்தால் கஷ்டம் தான். ஆனா.. பெசிநெட் கிடைக்காதவங்க கொஞ்சம் அதில் போட்டு அக்கடான்னு இருக்கலாம். மேலும் ரொம்ப குட்டி பாப்பானா அதற்கு முதல் உரிமை தருவாங்க.ஆனா பல குழந்தைகள் அதே வயதில் இருந்துட்டா தான் சிக்கல்.

அபி ..ஆமாம் சில யுரோப் நாடுகளுக்கு விசா இருக்கு.விசாரித்துவிட்டு போங்க. ஏர் இந்தியானா சிரமம் பார்க்காமல் ட்ரான்சிட் புக் பண்ணுங்க.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என் சொந்த அனுபவம் ரம்யா. நான்கு மாதத்தில் ஆரம்பித்து இத்துடன் மூன்று முறை போய் வந்துவிட்டோம். ஒவ்வொரு முறையும் எடுத்திருக்கிறோம். அவர்கள் உள்ளூர் ஏர்வேஸ் பத்தி பேசியிருப்பார்களோ என்னவோ எனக்கு தெரியவில்லை.

அதை பத்தி பார்த்துவிட்டு தான் உங்ககிட்டே கேட்டேன் ரம்யா. நான் பார்த்தவரையில் அதை உள்ளூரில் அதிக பட்சமாக ஐந்து மணி நேரம் ட்ராவல் பண்ண உபயோகித்திருக்கிறார்கள். அதனால் தான் கேட்டேன் ஒருவேளை உங்களுக்கு தெரிந்தவர்கள் இந்தியா வரை போய் வந்திருக்கிறார்களா என்று?

நிறைய பிள்ளைகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் போது கொஞ்சம் கஷ்டம் தான். நீங்கள் ஏற்க்கனவே பேசிநெட் புக் பண்ணியிருந்தாலும் ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் பேசிஸ் தான் அதனால் தான் சீக்கிரம் செக் இன் பண்ண சொல்லியிருந்தேன். இது எங்களுக்கு ஏர்வேஸ் சொன்னது. அதுவும் இல்லாமல் சிங்கப்பூரில் ட்ராவல் பண்ணும்போது இப்படி தான் ஆனது. நான் தனியாக வேற பயணித்தேன். லக்கிலி அவ்வளவு கூட்டம் இல்லை அதனால் காலியாக இருந்த மற்றொரு சீட்டை எனக்கு கொடுத்தார்கள் அதில் குழந்தையை படுக்க வைத்துக் கொண்டேன். இருந்தாலும் அந்த இருபத்தி நான்கு மணி நேர ஃபளைட் ட்ராவலில் இரண்டு முறை தான் என்னால் ரெஸ்ட் ரூம் செல்லவே முடிந்தது :( எல்லாம் சொந்த அனுபவம் பேசுகிறது இப்போ :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவி
அப்படியா ? கடி தான்.. அந்த தொட்டிலும் வசதி தான் லாவி.. கொஞ்சம் நேரம் குழந்தையுடன் விளையாட, தூங்க வைக்கணு கொஞ்சம் செஞ்சுக்குனு இருக்கும். .அம்மா அப்படி உக்கார வைத்து விளையாடிட்டு வருவாங்க .. இல்லைனா அப்படியே அது சாய்ந்து துங்கும்.நான் பார்த்து ரசித்து இருக்கிறேன்.நீங்க சொல்ற மாதிரி அதுவும் கொஞ்சம் மணி நேரம் தான் ..

ஆனா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.. :) எத்தனை குழந்தைகளை எடுத்திட்டு வரும் அம்மாக்களை பார்த்து பாவப்பட்டிருக்கேன்.அதுவும் ஆனா ஒரு சுகம். :)
போன முறை எங்களுடன் வந்த இவர் கொலிக்கும் அப்படி தான் வந்தார்.உதவி செய்த எங்களுக்கே அப்பப்பானு ஆச்சு :( பாவம் தான். பார்த்த அனுபவமே இப்படினா சொந்த அனுபவம் புரியுது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்