டயட் அட்வைஸ் தேவை

டயட் இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

நீங்கள் எந்த நோக்கத்திக்காக டயட் பண்ண போகிறீர்கள் ? வெயிட் குறைக்கவா? நான் 5 மாதத்தில் 20 கிலோ குறைத்தேன்.கொஞ்ச நேரம் கழித்து வருகின்றேன்.கொஞ்சம் வேலை இருக்கின்றது .உங்கள் நோக்கத்தை தெளிவாக கூறுங்கள்

எல்லாப் புகழும் இறைவனுக்கே

உடல் எடை குறையவும் தொப்பை குறையவும் தான் தோழியே

plz Rathi seekiram vanga i wait for ur advice

ellorum santhosamaga valanum

ஒரு கட்டுரை வடிவில் தயார் செய்து கொண்டிருக்கும் போது எனது வாண்டு எதையோ நசித்து தேலேடே பண்ணிவிட்டான்.தயவு செய்து சற்று பொறுங்கள் .மீண்டும் type பண்ணிக்கொண்டுள்ளேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

முதலில் சில விடயங்களை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.அதாவது நான் இப்பொது உள்ள நிறைக்கும் உயரத்திற்கும் எமது உடலிற்கு ஒரு நாளிக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் (இதனை கூகுளில் தேடி அறிந்து கொள்ள முடியும்} 1 கிலோ நிறை குறைக்க வேண்டுமெனில் 7000 கலோரிகள் குறைக்க வேண்டும் .கலோரியை இரண்டு விதமாக குறைக்க முடியும் ஒன்று உள் எடுக்கப்படும் கலோரியின் அளவை குறைத்தல் இரண்டு உடலால் எரிக்கப்படும் கலோரியின் அளவை கூட்டல் (உடற்பயிற்ச்சி மூலம் }
உதாரணமாக உள் எடுக்கப்படும் கலோரியின் அளவை 500 ஆல் குறைத்து எரிக்கப்படும் கலோரியை 500 ஆக ஆக்கினால் நாளொன்றிற்கு 1000 கலோரிகளை மொத்தமாக குறைக்கலாம் எனவே வாரத்திற்கு 7000 கலோரிகளை குறைக்கலாம் அதாவது 1 கிலோ குறைக்க முடியும் ( இது ஒவ்வொருவரினதும் உடல் நிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும் நான் GM டயட் முறையுடன் தொடங்கினேன் (இதனை பத்தி கூகுளில் அறிந்து கொள்ளலாம் ) இதன் மூலம் 8 kg குறைத்தேன். இது ஒரு பொசிடிவ் motivation இனை கொடுத்தது. இதன் பின் நாளாந்த வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தேன்.

1 . காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேன்,தேசிசாறும் சுடுநீரில் கலந்து குடிப்பேன் (இது உடலின் மெடோபோளிசத்தை கூட்டி கலோரிகள் எரிக்கப்படும் வீதத்தை கூட்டும்}
2 .இதன் பின் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வேன் ( அதற்கு மேல் என் வாண்டுகள் துயிலெழுந்து விடுவார்கள் }இன்னும் தொடரும்

எல்லாப் புகழும் இறைவனுக்கே

3 . இதன் பின்பு ஒரு கப் கிரீன் டி சீனி இல்லாமல் குடிப்பேன் .அரை மணிநேரம் கழித்து ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவேன்
4. ஒவொரு நாளும் குறைந்தது 3 லீற்றர் தண்ணீர் குடிப்பேன்
5 .அடிக்கடி வெறும் சுடுநீர் குடிப்பேன். மதிய சாப்பாடிற்கு இடையில் கடுமையாக பசித்தால் டயட் யோகட் ஒன்று சாப்பிடுவேன் (வெறும் 52 கலோரிதான் }
6 . மதியம் என்ன தலைகீழாய் போனாலும் ஒரு கப் சோறுதான் நிறைய மரக்கறி .டயட் தயிர் விட்டு சாப்பிடுவேன்
7 .மாலையில் ஒரு கப் வெறும் காப்பி. இடையில் பசித்தால் ஒரு pears அல்லது ஒரு ஆப்பிள்
8 . உணவில் சாதாரண எண்ணெய்க்கு பதில் ஒலிவ் ஆயில் அல்லது பட்டர் சிறிதளவு (ஏனெனில் இவை கொழுப்பின் ஓட்சியேற்றதிட்கு உதவும்
9 . இரவில் இரண்டு ஆட்டா மா சப்பாத்தி (80 g மாவில் )
10 . இதனை விட உணவில் வெந்தயம் ,பூடு,மிளகு .கறுவா,இஞ்சி என்பவற்றை அதிகம் சேர்த்துக்கொள்வேன்
11 .தற்போது உடற்பயிற்சி இயந்திரத்தில் நாளொன்றிற்கு 750 -1000 கலோரிகள் எரிக்கின்றேன்.வாரத்தில் இரு நாட்கள் அதற்கும் லீவு
12 .எதாவது பாட்டிகளிட்கு போய் அதிகமாக சாப்பிட்டு விட்டால் அதனை அடுத்தநாள் உடற்பயிச்சியில் ஈடு கட்டிவிடுவேன்

எல்லாப் புகழும் இறைவனுக்கே

---

எங்கள் வீட்டில் உடல் எடை குறைக்க என் மாமியார் தினமும் நடந்து தவிப்பாங்க, ஆனாலும் குறைந்த பாடில்லை, ஆனால் இபோழுது என் மாமியாரும் என்னுடைய கொழுந்தனாரும் நல்ல வெயிட் குறைந்து பயங்கர slim ஆய்டாங்க, என்னனு கேட்டா herbalife நு சொல்றாங்க, என் மாமியர்க்கு sugar இருக்கிறது இந்த herbalife சாப்பிட்டதும் சர்க்கரை நோயும் கண்ட்ரோலா இருக்கு நு சொல்றாங்க, என்னுடைய தோழி நல்ல குண்டா இருப்பா, பார்க்க 30 வயது போல தோற்றம் இருக்கும்,( original age 23) அவ்வளவு குண்டா இருப்பவள் போன வாரம் FB ல recent photos upload பண்ணியிருந்தா., அதைப்பார்த்துவிட்டு எனாலய நம்ப முடியல, அவ்ளோ slim ஆ அழகா இருந்தாள்., (bcoz of herbalife)
நம்ம ஊரில் தான் அப்படினா இந்த அமெரிக்காவிலும் அந்த product வானுரதுக்கு நேற்று கடைகளில் நீண்ட வரிசையில் குண்டு குண்டு ஆளுகளா நிக்குறாங்க,

தோழிகள் யாருகாவது இது பற்றி ஏதாவது தெரியுமா,

அன்புடன் அபி

நீங்கள் சொலவதைப் பார்த்தால் எனக்கே ஆசையாக இருக்கு, இப்போதைக்கு எடை குறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ஆனால் என் குழந்தையை வைத்துக்கொண்டு சிற்றுண்டி உணவு சமைக்க முடிவதில்லை, இந்தியா போய் தான் உணவு கட்டுப்பாடு ஆரம்பிக்கணும் நு நினைத்து கொண்டிருக்கிறேன் ஆனால் என் வீட்டார் எல்லாரும் herbalife சாப்பிட சொல்றாங்க, என் பெற்றோருக்கு இதில் விருப்பம் இல்லை,

அன்புடன் அபி

herbalife -நா என்னபா ,அந்த product எங்க கிடைக்கும்னு சொல்லுங்க ,நான் இப்போ இந்தியா-ல தான் இருக்கேன் ,அருப்புகோட்டைஎனது ஊர்.எனக்கு டெலிவரி முடிந்து 3 மாதம் ஆகிறது .நான் மிகவும் குண்டாக இருகிறேன் ,தொப்பையும் குறையவில்லை ,நான் குழந்தைக்கு தாய் பால் தான் கொடுக்கிறேன் .இப்போது இந்த product use பண்ணலாமா .இது பற்றிய விளக்கம் தந்து உதவுங்கள் தோழி

மேலும் சில பதிவுகள்