மிகவும் வேதனையில் உள்ளேன் தோழிகளே

மிகவும் வேதனையில் உள்ளேன் தோழிகளே.. எனக்கு வயது 23. எனக்கு வீட்டில் ஒரு வரன் பார்த்தனர். பேசி முடிவாகும் சமயத்தில் மாப்பிள்ளை வீட்டார் சில காரணங்களால் வேண்டாம் என்று கூறி விட்டனர். முடிவாகும் முன்பே அவருடன் பேசி பழகி விட்டேன். இப்பொழுது மறக்க முடியாமல் கஷ்டபடுகிறேன். அவசரப்பட்டு எங்கள் வீட்டிலும் உறவினர்களுக்கு பொண்ணுக்கு வரன் முடிவாகி விட்டது என்று கூறி விட்டனர். இப்பொழுது எதும் இல்லை என்று முடிவாகிய பின்பு, சொந்தகாரர்கள், தெரிந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நானும், என் குடும்பமும் தவிக்கிறோம். எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல. எனக்கு இதில் இருந்து எப்படி மீண்டு வரணும்னு புரிலே. எங்க குடும்பம் கூட்டு குடும்பம். வீட்ல இருக்கவங்க முன்னாடி அழ கூடாதுன்னு எவ்வளவோ கண்ட்ரோல இருக்க. பட் அவிங்க எல்லாரும், என்னை பற்றி யோசிச்சு, என்ன விட ரொம்ப வேதனையில் இருக்காங்க. நான் இந்த பிரச்சனை எல்லா தீர என்ன செய்யணும்? அறுசுவையில் நானும் கடந்த ஒரு வருசமா உறுப்பினரா இருக்கிறேன். இந்த பிரச்சனை என்னோட உண்மையான ஐடி-யில் கேட்க முடியாத சூழ்நிலை. அதனால் தான் வேறு ஒரு ஐடி-யில் கேட்கிறேன். இது அறுசுவை விதிமுறை மீறலா-ன்னு தெரியல. தப்பு என்றால் பாபு அண்ணாவும், மற்ற தோழிகளும் என்னை மன்னித்து விடுங்கள். ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த வேதனையில் உள்ளேன். எனக்கு ஒரு நல்ல ஆலோசனை கூறுங்கள்.

இது மறக்க முடியாத ஒன்று இல்லை...நம் நெருக்கமானவர்களின் உயிரிழப்பை கூட சில காலம் எடுத்தாலும் மெல்ல இழப்பையும் பழகிக்கிறோமா இல்லையா...ஸ்கூள் முடிச்சு கல்லூரிக்கு போகும்போது தோழிகளை பிரிய முடியுமான்னு யோசிச்சதில்லையா..கல்லூரி முடிஞ்சு ஃபேர்வெல் அன்னைக்கு அழுததில்லையா பிரிவை நிசைச்சு வருந்தவில்லையா..இன்னமும் அழுதுட்டே இருக்கோமா இல்லை அவர்களை பற்றிய சிந்தனையிலேயே இருக்கோமா என்ன...நல்ல வரன் அமையும்போது சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள்..எல்லாம் நல்லபடியா முடிவான பின்பு அளவோடு பேசிபழகுங்க எல்லாம் மறந்துடுங்க...சின்ன பொண்ணு வாழ்க்கை இனி தானே உங்களுக்கு தொடங்க போகுது

நன்றி Thalika அக்கா. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க எனக்கு கண்டிப்பா ஆறுதல் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும். முதல் தடவையா இப்போழுது தான் உங்க கூட பேசிறேன். பட் இந்த மாதரி ஒரு பிரச்சனை-ல இருக்கும் போது பேசுகிறேன்-னு நினைக்கும் போது தான் கஷ்டமா இருக்கு. என்னோட பிரச்சனையே ஒருத்தர் மேல அளவு கடந்த பாசம் வெச்சுறேன். அவிங்க கேரக்டர் எப்புடி இருக்கும்ன்னு தெரியறதுகுள்ளேயே, அவீங்களே முழுதாக நம்பி விடுகிறேன். அதனால் தான் என்னால், ஏமாற்றங்களை தாங்கி கொள்ள முடிவதில்லை. இப்போ இந்த பிரச்சனையலே எனக்கு கல்யாணம்னவே பயமா இருக்கு. என்னால் என்னோட மனச பக்குவ படுத்திகவே முடியல கா. அடுத்த வரன் பாக்கிறது பத்தி யோசிச்சவே பயமா இருக்கு.

திவ்யா! முதலில் ஊர் என்ன சொல்லும் எப்படி ஃபேஸ் பண்ணப் போறோம் அப்படீங்கற எண்ணத்தை விடுங்க. இடறி வீழ்ந்தால் கைதூக்கி விடாமல் கை கொட்டி சிரிக்கும் உலகை பார்த்து நாம் ஏன் கவலைப் பட வேண்டும்.

ஒருவரை மனதார விரும்பிய பிறகு மறப்பது கடினம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதே தவிப்பு அவர் பக்கமும் இருக்கிறதா என்பதை யோசியுங்கள். அப்படி எதுவும் இல்லாத போது உங்கள் அன்பே விழலுக்கு இறைத்த நீர் போலத்ததானே. ஆனால் அதற்காக மனம் வேதனைப்பட்டால் என்ன பயன்?

கேட்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை தோழி. ஏன் இந்த இடம் நடக்கவில்லை என்று வேலையற்ற ஊரும் உலகமும் கேட்கும்தான். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஏதோ ஒரு காரனத்தால் தட்டி போய் விட்டது என்று சமாளித்துக் கொள்ளலாம். உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களிடம் மட்டும் உண்மையான காரணத்தை சொல்லி இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று ஆலோசியுங்கள்.

அடுத்து உங்கள் மனதுக்கு. முதலில் மனதை ஒரு முகப் படுத்துங்கள். பிடித்த வேலைகளில் உங்களை ஈடு படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் மெடிட்டேஷன் செய்யுங்கள். நிச்சயம் மனதுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். வாய் விட்டு அழ வேண்டும் போல் இருக்கிறதா? தனிமையில் அழுது தீர்த்து விடுங்கள். வேதனையை மனதினுள் அடக்காதீர்கள். அந்த அழுகையில் உங்கள் வேதனை மொத்தமும் கரைந்து போய் விடும்.

சில மாதங்களுக்குள் உங்கள் மனது சீராகி விடும். இப்போது குடும்பத்தினர் பார்க்கும் வரனை முழுவதும் உறுதியான பின் மட்டுமே மனதிற்கு நெருக்கமாக்குங்கள்.

கல்யாணம் என்றால் பயம் எல்லாம் வேண்டாம். உங்களுக்காக பிறந்த ராஜ குமாரனை விரைவில் சந்திப்பீர்கள். வாழ்க்கை சந்தோஷமாக அமையும். வாழ்த்துக்கள் தோழி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//வாய் விட்டு அழ வேண்டும் போல் இருக்கிறதா? தனிமையில் அழுது தீர்த்து விடுங்கள். வேதனையை மனதினுள் அடக்காதீர்கள். அந்த அழுகையில் உங்கள் வேதனை மொத்தமும் கரைந்து போய் விடும்.//

இந்த வார்த்தையை படிக்கும் போதே அழுது விட்டேன். நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. மனதினுள் தேவை இல்லாமல் வேதனையை வைத்து கொண்டு, நான் கஷ்டபடறது இல்லாமல், எங்க வீட்ல இருக்றவங்களையும் கஷ்டபடுத்திவிட்டேன். இப்பொழுது தான் அதை உணர்கிறேன். முழுதாக அழுது தீர்த்து விட்டேன். இனி மற்றவங்களை நினச்சு பயப்படமா, இந்த பிரச்னையை தைரியமாக ஹேண்டில் செய்கிறேன்.

மிக்க நன்றி. ரொம்ப மனசு பாரமாக இருந்தது. நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. கொஞ்ச கொஞ்சமாக என்னை மாற்றி கொள்கிறேன். இன்னைக்கு தான் மனசு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. தளிகா அக்கா , கவி கா மறுபடியும் ரொம்ப தேங்க்ஸ். எனக்காக ஒரு நல்ல ஆலோசனை தந்து இருக்கீங்க. உங்களை எப்பவும் மறக்கமாட்டேன்.

ஹைய் திவ்யா இப்பத்தான் நீங்க நல்ல பொண்ணு சொன்னதும் எடுத்துகிட்டீங்க பாருங்க வெரி குட்.

நானும் உங்கள மாதிரி தான் ஏதாவது பிரட்சனை என்றால் தாங்க மாட்டேன் எல்லாத்துக்கும் சீக்கிரம் அழுகை வந்திடும் பட் அழ வெட்கம்.பாத் ரூமில் பைப் சவுண்டில் அல்லது ஏதாவது சவுண்டில் இருந்துகொண்டு கண்ணீர் தீரும் வரை அழுது தீர்த்து விடுவேன் அதன் பிறகு பிரட்சனையை திரும்பி பார்த்தால் சில நேரம் பிரட்சனை தெரியாது சில நேரம் சிறியதாக தெரியும்.

உங்களுக்காக ஒரு அழகான குடும்பம் இருக்கும் போது நீங்கள் ஏன் கவலை படனும் அவர்கள் உங்கள் வாழ்க்கயை அழகாக அமைத்து தருவார்கள்.கவி சீவா அக்கா சொன்னதுபோல் உங்களுக்கான ராஜ குமாரனை அவர்கள் உங்களுக்கு தேர்ந்து எடுப்பார்கள்.

நமக்கு நேர விருந்த ஏதோ ஒரு பெரிய கஷ்டத்தை ஆன்டவன் நீக்கி விட்டு இந்த சிறிய கஷ்டத்தை நமக்கு கொடுத்துள்ளான் என்று நினைத்து மனதை தேற்றுங்கள்.நானும் அப்படிதான் நினைப்பேன்.

இது உங்களுக்கு மட்டும் நடப்பதில்லை இப்படிபட்ட சூழ்நிலையை கடந்து தான் நிறைய பெண்கள் தனக்கு அமைந்த வாழ்க்கை துணையோடு மிக மிக சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நீங்களும் உங்கள் இராஜ குமாரனோடு சந்தோசமாக வாழ என் கோடி வாழ்த்துக்கள்.

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ஹாய் SAMEEHA. சாரி பெயர் தமிழில் கரெக்டா எழுத வரலை.

//பாத் ரூமில் பைப் சவுண்டில் அல்லது ஏதாவது சவுண்டில் இருந்துகொண்டு கண்ணீர் தீரும் வரை அழுது தீர்த்து விடுவேன்// oh நீங்களும் என்ன மாதிரி தானா? நானும் அப்படிதான்.. ரூம் நல்லா க்ளோஸ் பண்ணிட்டு, டிவி வால்யூம் சத்தமா வெச்சுட்டு, பெட்ல படுத்துட்டு நல்லா அழுவேன்.

பட் எனக்கு அழறது பிடிக்கவே பிடிக்காது(யாருக்கு தான் பிடிக்கும்?). ஆனால் எதுக்கு எடுத்தாலும் சீக்கிரம் அழுதுருவேன் .(மத்தவங்க முன்னாடி இல்ல. தனியாக தான்).

//நமக்கு நேர விருந்த ஏதோ ஒரு பெரிய கஷ்டத்தை ஆன்டவன் நீக்கி விட்டு இந்த சிறிய கஷ்டத்தை நமக்கு கொடுத்துள்ளான் என்று நினைத்து மனதை தேற்றுங்கள்.// என் தங்கையும் இதை தான் சொன்னாள். கண்டிப்பாக மனதை மாற்றி கொள்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு கஷ்டமா தான் இருக்கும். என்ன பன்றது காலம் எல்லாத்தையும் மறக்கடிக்கும்-ன்னு நம்பிக்கை இருக்கு.

//நீங்களும் உங்கள் இராஜ குமாரனோடு சந்தோசமாக வாழ என் கோடி வாழ்த்துக்கள்.// ரொம்ப தேங்க்ஸ்.

அப்புறம் உங்க profile படித்தேன். life நல்லா என்ஜாய் பண்ணி வாழரீங்கனு நன்றாக புரிந்தது. அதுவும் உங்க சுயவிபரத்தில் பணி, பொழுதுபோக்கு,அப்புறம் பிடித்த நடிகர், நடிகை இதெல்லா படிச்ச உடனே மெல்லிய புன்னகை வர வெச்சுடீங்க. நீங்களும் உங்கள் இராஜ குமாரனோடு சந்தோசமாக வாழ என் கோடி வாழ்த்துக்கள்.

டியர் திவ்யா,

கவலை படாதீர்கள் தோழியே, முற்காலத்தில் (நமது பெற்றோர்கள் காலத்தில்) திருமணத்தன்று தான் மாப்பிள்ளையும்,பெண்ணும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக பார்ப்பார்கள் .ஆனால் விஞ்ஞானம் முன்னேறி,காலமும் மாறி,காலத்திற்க்கு ஏற்ப்ப நம் வாழ்க்கை முறையும் மாறியதால் இப்படி சில பிறச்சனைகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.

என் சொந்தத்தில் ஒரு பெண்ணிற்க்கும் இப்படி தான் நடந்தது,அவளும், குடும்பமும் பட்ட கஷ்ட்டத்திற்க்கு அளவே இல்லை. எனது பள்ளி தோழி ஒருத்திக்கும் இதே நிலை தான்.
ஆனால் இறைவன் அருளால் அவர்களுக்கெல்லாம் திருமணம் ஆகி அவர்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் இவையெல்லாம் மிகவும் சகஜமாகி விட்டன,கழுத்தில் தாலி ஏறும் வரை இவன் தான் என்னவர் என்று முடிவு செய்யக் கூடாது என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.

தோழியே,உங்களுக்குரியவர் இனிமேல் பிறக்கப் போவது இல்லை,ஏற்கனவே உங்களுக்கென்று ஒருவரை இறைவன் படைத்து வைத்து விட்டான்.நிச்சயம் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

பழைய நினைவுகளை உங்கள் மனதை விட்டு அளித்து விடுங்கள்.முதலில் கடினமாகத் தான் இருக்கும்.தோழிகளோடு நேரத்தை செலவிடுங்கள்,உங்களுக்குப் பிடித்தப் பொழுது போக்குகள்,வெளியே சென்று வருவது,என்று உங்களை பிஸியாக்கி கொள்ளுங்கள்.எக்காரணத்தைக் கொண்டும் மன வேதனைப் படுத்துபவர்களை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டாம்.ஏனென்றால் நாம் நமக்காகத்தான் வாழ்கிறோம்,மற்றவர்களுக்காக அல்ல.

இன்று சிரிக்கும் இந்த உலகம் நாளை நீங்கள் உங்கள் கணவருடன் சந்தோஷமாக வழ்வதைப் பார்த்து,பொறாமையும் படும்,ஆச்சர்யமும் படும்.ஆகவே கவலைப் படுவதை விட்டு விடுங்கள்.

எனது ஒன்று விட்ட சகோதரி என்னிடம் அடிக்கடி சொல்லும் விஷயம் இதுதான். ""அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நினைத்துக் கொள்"" நடைமுறையில் கடினமாகத்தான் இருக்கும்.இன்று அநேகப் பெண்கள் இச்சூழ்நிலைகளைக் கடந்து தான் வருகிறார்கள்.

உங்களுக்கானவர் வரும் நாள் கூடிய விரைவில் வர வாழ்த்துக்கள்.

//ஒருவரை மனதார விரும்பிய பிறகு மறப்பது கடினம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதே தவிப்பு அவர் பக்கமும் இருக்கிறதா என்பதை யோசியுங்கள். அப்படி எதுவும் இல்லாத போது உங்கள் அன்பே விழலுக்கு இறைத்த நீர் போலத்ததானே. ஆனால் அதற்காக மனம் வேதனைப்பட்டால் என்ன பயன்?// - நான் இதையே தான் சொல்ல நினைச்சேன்... கவிசிவா சொல்லிட்டாங்க. அம்புட்டு தான்... எந்த உறவுமே நாம வைக்கிற அன்பு அங்கையும் இருந்தா அதுக்காக போராடுறதுல ஃபீல் பண்றதுல அர்த்தம் இருக்கு... அங்க இல்லன்னா அதுக்காக ஃபீல் பண்றது வேஸ்ட். :) லைஃப பாசிடிவா பாருங்க... எல்லாம் நண்மைக்கே... நமக்கு எதுன்னு இறைவன் நினைக்கிறானோ அதை யாரும் தடுக்க முடியாது. இதை விட பெட்டரான வாழ்க்கை காத்திருக்கும். நம்பிக்கை வைங்க. பாசிடிவா பாருங்க, ஃபீல் பண்ணவோ அழவோ மாட்டீங்க. சிரிங்க... எப்பவும் மகிழ்ச்சியா சிரிங்க... உங்களை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியா இருப்பாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் VANI & VANITHA MADAM..

மிக்க நன்றி. என்னோட வேதனையை புரிஞ்சுகிட்டு, என்னோட மனசு தெளிவு ஆகிற மாதிரி, ரொம்ப ஆறுதலா பேசி இருக்கீங்க. உங்கள் ஒவ்வொருத்தருடைய வார்த்தைகளும், என்னோட மனசுக்கு ரொம்ப தைரியத்தையும், ஆறுதலையும் தருது.

பக்கத்துல இருக்ரவங்களே வார்த்தையை விட்ராங்க, பட் அதை எல்லா நான் காதில் வாங்குவதே இல்லை. நீங்க சொல்றது கரெக்ட்..நாம் நமக்காகத்தான் வாழ்கிறோம்,மற்றவர்களுக்காக அல்ல. கண்டிப்பாக எல்லாம் நன்மைக்கே-ன்னு நினைத்து கொள்கிறேன்.

எனக்கு இவ்வளவு தோழிகள் ஆறுதல் சொல்லுவீங்கள் என்று நினைக்கவே இல்லை. ஒவ்வொருத்தரும் உங்க வீட்டு பொண்ணுக்கு எடுத்து சொல்ற மாதிரி, ஆறுதலா பேசி இருக்கீங்க. எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. இதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்.

உங்கள் ஒன்று விட்ட சகோதரி சொன்னது போல் ""அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்". எல்லாத்தையும் மறந்து விடுகிறேன். உங்கள் அனைவருடையே வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

HAI FRIEND

TRY TO FORGET THIS INCIDENT.VERY GUD & BRIGHT FUTURE WAITING FOR U.ME ALSO CRY IN BATHROOM NOW ALSO.I THNK ITS BEST PLACE FOR ALL LADIES INCLUDING ME.

LEAVE IT.TRY TO DIVERT YOUR MIND.TRY TO JOIN ANY COURSE.DONT BE ALONE.DONT EXPOSE U R FEELING IN FRONT OF U R FAMILY MEMBERS.BCZ ITS VERY TERRIBLE PA.

PLS KEEP THIS IN YOUR MIND " ETHUVUM KADANTHU POGUM"

மேலும் சில பதிவுகள்