டெஸ்ட்டு டுப் பேபி

எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இனியும் குழந்தை செல்வம் இல்லை பார்க்காத வைத்தியம் இல்லை போகாத மருத்துவர் இல்லை வேண்டாத தெய்வமும் இல்லை எனக்கு போலியொவால் ஒரு கால் பாதிக்கபட்டு உள்ளது இதனால் திருமணம்(28)- 2007 மிகவும் லேட்டாக தான் நடந்தது என் கணவர் போல் ஒருவரை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும் அரிது கடவுள் எனக்கு கொடுத்த மிக மிக மிகபெரிய வரம் என் கணவர் தான் என் மீது அளவு கடந்த பிரியம் அவர் என்னிடம் கேட்பது உன்னை போலவே ஒரு குழந்தை மட்டும் தான் நம் அன்பின் சின்னமாய் நமக்கு என்று ஒரு குழந்தை ம்ட்டுமே ஆனால் நல்ல கணவர் கிடைத்தும் என்னால் அவருக்கு ஒரு குழந்தையை தர முடியாமல் போனதை நினைய்த்து நினைய்த்து மனம் மிக மிக மிக வருத்தம் அடைகிறது 28வயதில் திருமணம் நடந்ததால் ஆறு மாதம் தான் காத்திருந்தோம் (2008) ஏழாவது மாதத்தில் இருந்து அருகில் உள்ள மகளிர் மருத்துவரிடம் consult செய்து சிகிச்சை எடுத்தோம் எனக்கு ரெகுலர் பிரியட் தான் Basic test எல்லாம் எடுத்தோம் (அவருக்கு CASA Test விந்தணு Movement size motility count ) எனக்கு டுப் டெஸ்டு,ஒவரி,கருப்பை size,Hormone test follow up scan etc.,எல்லாம் எடுத்தோம் டாக்டர் எங்களுக்கு எந்த குறையும் இல்லை எல்லாம் Normalஆக உள்ளது என்று கூறிவிட்டார்கள் Normalஆக try செய்தும் நான் கன்சீவ் ஆக வில்லை என்று 6 மாதம் கழித்து லேப்ராஷ்கோபி செய்தொம் அதுவும் எல்லாம் நார்மல் பிறகு IUI செய்தோம் 8 முறை செய்தும் பலன் இல்லை டாக்டரும் ஒருசிலருக்கு காரணம் ஒன்றும் இல்லாமல் கூட கன்சீவ் ஆகமாட்டார்கள் எனவே காலம் தாழ்த்தாமல் IVF or ICSI செய்வது நல்லது என்று சொன்னார்கள் எனக்கும் 30வயது ஆகிவிட்டது ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று அதற்கும் சம்மதித்து சிகிச்சை எடுத்தோம் மூன்று முறை ICSI டெஸ்ட்டு டுப் பேபி செய்தும் குழந்தை கிடக்கவில்லை ஒரு முறை இரட்டை குழந்தை கிடைத்தும் குழந்தைக்கு ஹார்ட்டு பீட் நின்று விட்டது குழந்தையை தத்து எடுக்கவும் எங்கலுக்கு விருப்பம் இல்லை டாக்டர் எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று கூறிவிட்டார்கள் ஆனால் என் விஷயத்தில் கடவுள் தான் கண் திறக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார் இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் (2012) எனக்கு மீண்டும் டெஸ்ட்டு டுப் பேபிசெய்தொம் வேண்டாத தெய்வமும் இல்லை இனி ஒரு தோல்வியை என் மனம் தாங்காது என்ற நிலையில் மீண்டும் தோல்வி எனக்கும் குழந்தை கிடைக்குமா என்னாலும் குழந்தை பெற்று எடுக்க முடியுமா என் கணவரின் ஆசை நிறைவெறுமா டெஸ்ட்டு டுப் பேபி சக்சஸ் ஆக வழி கூறுங்கள்

மனதுக்கு வருத்தமாகவே இருக்கு... என்ன செய்ய... சிலருகு காரணமே இல்லாம இப்படி தள்ளி போகும் குழந்தை வரம்... மனசை தலர விடாதீங்க. நம்பிக்கையோட இருங்க. அது தான் ரொம்ப முக்கியம். எனக்கு தெரிஞ்சு 10 வருஷம் கழிச்சு குழந்தை பெற்றவர்கள் எல்லாம் இருக்காங்க. அவங்களுக்கு குழந்தை பிறந்த போது வயது 35 இருக்கும். எல்லாம் நம்பிக்கை தான்... மனச விட்டுட கூடாது.

தோழி ஒருவர் மகப்பேரு மருத்துவர். அவருக்கும் இது போல் காரணமே தெரியாம குழந்தை இல்லாம இருந்தது. சென்னை EV Kalyani medical centre’ல ட்ரீட்மண்ட் எடுத்ததாகவும், பின் கரு உண்டானதாவும் சொன்னாங்க. டாக்டர் கீதா அர்ஜுன் என்று ஒருவரிடம் தான் ட்ரீட்மண்ட் எடுத்தாங்க. என்னை கேட்டா நீங்க இதுவரை இங்க முயற்சிக்கலன்னா ஒரு அப்பாயின்மண்ட் வாங்கிட்டு ட்ரை பண்ணுங்க. அப்பாய்ன்மண்ட் கிடைப்பது ரொம்ப கஷ்டம்... ஆனா எப்படியாவது ட்ரை பண்ணுங்க.

நான் இதுவரை இங்கு எந்த டாக்டர் முகவரியும் சொன்னதில்லை... ஒரு மகப்பேரு மருத்துவருக்கே காரணம் தெரியாம குழந்தை இல்லாம இருந்து உங்க போய் குழந்தை கிடைச்சிருக்குன்னா... அது எனக்கென்னவோ உங்க விஷயத்தில் ஒரு நம்பிக்கை கொடுக்குது. முயற்சி செய்யுங்கள் விரும்பினால். எல்லாம் நல்லதாவே நடக்கட்டும்... இறைவன் துணை இருக்கட்டும். பிராத்தனைகள். கவலைபடாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியா ராஜ்,
கவலைப்படாதேப்பா, கண்டிப்பா உங்களின் அன்பின் சின்னமாக குழந்தைகள் பிறக்கும்.....என் சித்தி சித்தப்பாவிற்கும் இப்படிதான் காரணம் தெரியாமலே தள்ளிப்போனது.........இப்போது ஆறு மாத ஆண் குழந்தை அவர்கள் கையில் இருக்குதுப்பா.திருமணமாகி எவ்வளவு ஆண்டுதெரியுமா 12 வருடங்கள் கழித்து இக்குழந்தை கிடைத்துள்ளது....
சோ மனதை விடவேண்டாம்,தைரியத்தை வளருங்கள்,, நல்ல மருத்துவரை கன்சல்ட் பண்ணுங்க...குழந்தை ஆசிரமங்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்,மனமுருக கடவுளை பிரார்த்தியுங்கள்,,,நாங்களும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்.....நல்லதே நடக்கும்.....:-)) நம்பிக்கையுடன் இருங்கள்,.......

மனதளவில் தேறிய பிறகு கண்டிப்பாக அங்கு சென்று பார்கிறேன் நானும் கீதா அர்ஜுன் மற்றும் மிருதுபாஷினி பற்றி அவள் விகடன் புத்தகத்தில் ஒரு தொடர் படித்துஇருக்கிரேன் நன்றி

உண்மை அன்பு சாவது இல்லை

hi pa i'm shamili pudhusa join panni irukan.yennaum unga kooda join pannikonga.yenaku mrg aagi 3yrs completed pa yenaku pcod problem irukku nu 2 1/2 yrs ha doc kitta treatment ponan then 3months before cyst irukunu laproscopy pannanga thirumba cyst vandhudichinu gonadil tablet 30days ku kuduthu irukanga yenaku yedhumey purila.adhu yedhuku yenaku bayama iruku.......sorry pa yenaku tamil la type panna therila.

கடவுளிடம் தான் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடுகிரேன் டாக்டர்க்கும் மேல் உள்ள பல அற்புதங்களை செய்யும் அவன் நினைதால் முடியாததா என் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை மணம் இறங்க மறுக்கிறார்

உண்மை அன்பு சாவது இல்லை

yaan pa ipdi peysureenga.ungaluku yanna pbm nu yenakku therila kavala padadhinga yallam nalladha than nadakum.naanum ungalukaga pray pannikuran.

பிரியா,கவலைபடாதீர்கள் நீங்கள் இயர்கையாகவே கர்ப்பம் தரிக்க கடவுள் உதவி புரிவார்.நானும் 8 முறை இக்சி செய்து தோல்வியடைந்து,இனி எனக்கு குழந்தை பிரக்காது என்று நினைத்த போது 9 வருடத்திர்கு பின் ஆண் குழந்தை பெற்றென்.அது பொல் நீங்கலும் பெறுவீர்கள்.கடவுள் உதவி புரிவார்.மனதை போட்டு குழப்ப வேண்டாம்.

keep smile for goodluck.

hi nachial, i'm shamili pudhusa join panni irukan.yennaum unga kooda join pannikonga.yenaku mrg aagi 3yrs completed pa yenaku pcod problem irukku nu 2 1/2 yrs ha doc kitta treatment ponan then 3months before cyst irukunu laproscopy pannanga thirumba cyst vandhudichinu gonadil tablet 30days ku kuduthu irukanga yenaku yedhumey purila.adhu yedhuku yenaku bayama iruku.......sorry pa yenaku tamil la type panna therila.

குழந்தை இல்லை என்று ஏங்குபவர்களுக்கு தான் இந்த பிரச்சனை சிறு வயது முதலே எனக்கு குழந்தை என்றால் ரொம்ப ரொம்ப பிரியம் நான் இப்படி பிடிவாதமாக நானே பெற்ரெடுக்க வேண்டும் என்று மிக மிக மிக வெறியாக இருப்பதுக்கு காரணம் உண்டு எனக்கு வரன் பார்த்து ஒருவரை நிச்சயம் செய்தார்கள் நிச்சயம் முடிந்த அடுத்த நாள் அவர் போன் செய்து என் தங்கையிடம் உங்கள் அக்காவின் முழங்காளுக்கு மேல் பார்க்கவேண்டும் என்றும் நிச்சயதார்ததன்று எங்கள் உறவினர்கள் சேலை கட்டிவிட வந்த போது உங்கள் அக்கா தானே கட்டி கொள்வதாகவும் வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை அதனால் எங்களுக்கு சந்தேகமாக உள்ள்து என்றும் அவரது உணம் எது வரை உள்ள்து என்றும் தாம்பத்தியதிற்கும் குழந்தை பெற்று கொள்வதுக்கு ஏற்றவரா என பார்க்க வேண்டும் என்று கூறினார் மேலும் முழங்காளுக்கு மேல் பார்க்காமல் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார் நான் பிறந்தது முதல் கூச்சசுபாவம் கொண்டவள் படித்தது கூட பெண்கள் SCHOOL And COLLEGEல் அதிகம் ஆண்களுடன் பேச கூட மாட்டேன் என் தங்கையும் இப்போத இப்படி உறவினர் பேச்ச கேட்டு சந்தேகம் படும் நீங்கள் என் அக்காவுக்கு வேண்டாம் நிச்சயம் தானே நடந்துள்ளது நல்ல வேளை திருமணம் நடக்கவில்லை அது வரை என் அக்கா புண்ணியம் செய்துள்ள்து என்று கூறி அது நின்றுவிட்டது பிறகு தான் என் அன்பு கணவர் எனக்கு கிடைதார் பெண் பார்க்க வந்த அன்ரே எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உங்கள் பெண்னுடன் தான் என்றும் என்னிடம் தனிமையில் பேசும் போது நம் திருமண வாழ்கை கவிதை போல் இனிமையாக இருக்க வேண்டும் இன்றும் கூறினார் இது வரை என் கண்ணில் கண்ணிர் வந்தால் துடித்து போவார் என்னால் குழந்தை பெற்றெடுக்க முடியுமா என அவன் கேட்டதை பொய்யாக்க துடிக்கிரேன் கதறுகிரேன் அவன் சொன்னது உன்மையாகி விடுமோ என பயமாக உள்ள்து என் கணவரின் ஆசை நிறைவேறுமா ?????????????

உண்மை அன்பு சாவது இல்லை

இல்லைபா கடவுள் என்னை ரொம்ப சோதிக்கிரார் என்னயும் அம்மா என அழைக்க ஒரு குழந்தையாவது கிடைக்குமா நான் தாய்மை என்னும் அந்த அற்புத நிலைக்காக ஏங்குகிரேன் வயது ஒரு பயம் சிறந்த குழந்தை பெற்றெடுக்க அந்த குழந்தைக்கு ஏற்ற எல்லாம் செய்ய வேண்டும் தானே

உண்மை அன்பு சாவது இல்லை

மேலும் சில பதிவுகள்