பேப்பர் ப்ரேஸ்லெட்/நெக்லஸ்

தேதி: September 3, 2012

5
Average: 4.3 (8 votes)

 

கலர்புல் மேகசின் பேப்பர்/நியூஸ் பேப்பர்
க்ளூ
கத்தரிக்கோல்
பென்சில்
ஸ்கேல்
நூல்

 

பேப்பர் ப்ரேஸ்லெட் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மேகசின் அல்லது நியூஸ் பேப்பரில், படத்தில் உள்ளது போல் முக்கோணம் வரைந்துக் கொள்ளவும். முக்கோணத்தின் உயரம், அடிப்பகுதியின் (base) அளவு 8 என்ற அளவில் இருக்க வேண்டும்.
வரைந்த முக்கோணங்களை கத்தரிக்கோலை பயன்படுத்தி வெட்டி கொள்ளவும்.
வெட்டிய ஒரு முக்கோணத்தை எடுத்து, அதன் அடிப்பாகத்தை பென்சிலில் ஒருமுறை சுற்றவும்.
சுற்றிய பின் மீதி இருக்கும் பகுதியில் க்ளூ தடவவும்.
பின், அந்த முக்கோணத்தை முழுவதும் பென்சிலில் சுற்றவும்.
சுற்றி முடித்த பின், பேப்பர் பீட்-ஐ (paper bead) பென்சிலில் இருந்து மெதுவாக வெளியே எடுக்கவும்.
இதே போல் தேவையான அளவு பீட்-ஸ் (beads) செய்துக் கொள்ளவும். பென்சிலில் இருந்து வெளியில் எடுத்த பின், பீட்-ஸை (beads) சில நிமிடங்கள் காய விடவும்.
இப்போது, ஒரு நூலில் செய்து வைத்திருக்கும் பீட்-ஸை (beads) கோர்த்து, ப்ரேஸ்லெட் அல்லது நெக்லஸ் செய்யவும். ப்ரேஸ்லெட்டை விட சின்னதாக செய்து கம்மல் / அல்லது கம்மலுக்கு தொங்கட்டானாகவும் பயன்படுத்தலாம்.
குழந்தைகள், பொம்மைக்கு அலங்காரம் செய்து விளையாடவும் பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ்!!! இந்த பகுதிக்குள்ளும் வந்தாச்சா?? :) கலக்குங்க. கூட்டீஸ்க்கு ஏற்ற க்ராஃப்ட்டோட துவங்கி இருக்கீங்க.... சூப்பர். தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேப்பர் ப்ரேஸ்லெட்/நெக்லஸ் ரொம்ப ஈஸியா செய்யலாம் போல இருக்கே... குட்டி ப்ரேஸ்லட் அழகா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ப்ரேஸ்லெட் ரொம்ப அழகா இருக்கு ஈஸியா கூட செய்துடலாம் போல இருக்கு. க்யூட் பிந்து வாழ்த்துக்கள்

supar paa. romba nalla seithirukeenga. vaazthththukkaL.

பிந்து
வெல்கம் டு க்ரேஃப்ட் வேர்ல்ட்
குறிப்பு அழகு
குழந்தைகளுக்கானது. க்யூட்டா இருக்கு
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பேப்பர் ப்ரேஸ்லெட் அழகா இருக்கு வாழ்த்துக்கள். குட்டீஸ்கேற்ற ஈஸியான க்ராஃப்ட்.

பிந்து சூப்பர் சூப்பர் சூப்பர் எளிமையா எல்லோராலயும் செய்யகூடிய விததுல இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாவ்... குட்டீஸ்களுக்கேற்ற நல்ல ஈசியான க்ராஃப்ட் வொர்க்!

ரொம்ப நல்லாயிருக்கு பிந்து! கைவினைப்பகுதியிலும் கலக்கிட வாழ்த்துக்கள்! :)

அன்புடன்
சுஸ்ரீ

வாவ்! அருமை அருமை . இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனிதா, இந்திரா, உமா, லதா, ரம்யா, வினோஜா, சுவர்ணா, சுஸ்ரீ, ஜெயந்தி,
உங்கள் அனைவரின் கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

குழந்தைகளுக்கு (என்னை போன்ற பெரிய குழந்தைகளுக்கும்) இந்த கிராப்ட் ரொம்ப பிடிக்கும்... இரண்டு மூன்று நாளாக இங்கே, பொம்மைகளுக்கு போட்டியாக, நானும் என் மகளும் கலர் கலராய் ப்ரேஸ்லட் மாட்டி கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறோம் ;-)

கைவினை பகுதியில் வெளியிட்ட அட்மினுக்கும் நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து அக்கா ரொம்ப நல்லா இருக்கு ப்ரேஸ்லட் வொர்க் ஹ்ம்ம் காகுர்றேங்க போங்க இது மாறி ஈசி ஆஹ செய்ய கூடிய கிராப்ட் வொர்க்லாம் ப்ச்ன்னி போஸ்ட் பண்ணுங்க அக்கா அபோ தான நானும் செய்ய முடியும் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பர் பிந்து பேப்பர் ப்ரேஸ்லெட்/நெக்லஸ் ரொம்ப ஈசியா இருக்கு குழந்தைகலுக்கு செய்ய சுலபமான கைவினை கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.............

கலக்குறீங்க. தொடர வாழ்த்துக்கள்.
//பொம்மைகளுக்கு போட்டியாக,// ஆஹா! ;)

‍- இமா க்றிஸ்