சமயல் வல்லுனர்களாக ஆவதற்க்கு உங்களுக்கு ஆர்வம் தந்தது எது

தோழிகளே சமையல் வல்லுனர்களா இருக்கும் நீங்கள் முன்பு எதுவுமே தெரியாமல் இருந்து இருக்கலாம்.அதன் பிறகு உங்களுக்கு சமையல் கற்று தந்தது எது.

அம்மா,புக்ஸ்,சமயல்தளம் இதுபோல.

அப்புறம் உங்களுக்கு அதிக ஈடுபாடு சமையலில் வந்தது எப்படி.

நமக்கு எதுவுமே தெரியலையே சமையலில் என்று நீங்கள் கவலை பட்ட காலம்.

அதன் பிறகு நாம நல்ல சமைக்கனும் என்று உங்களுக்கு ஆர்வம் தந்தது எது.

நீங்க சமைத்து முதலில் கிடைத்த பாராட்டு எப்பவுமே மறக்க முடியாதது எது

இப்ப நீங்க நல்ல சமையல் வல்லுனர்களாக ஆன பின் உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள்.

அப்புறம் நீங்க முதலில் விருந்தாளிகளுக்காக சமைத்தது.

இதே போல எல்லாவற்றையும் இந்த த்ரெட்ல வந்து சொல்லுங்க.நானும் என்னுடையதை வந்து சொல்கிறேன் இப்ப என் பையனுக்கு சாப்பாடு கொடுக்கனும்.தொழனும், கொஞ்சம் வேலை இருக்கு முடித்துவிட்டு வருகிறேன்.

அன்புடன் கதீஜா.

சந்தேகமே இல்லாமல் எனக்கு சமையலில் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியது அறு சுவை தான். அதிலும் யாரும் சமைக்கலாம் பகுதியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். முன்பு எப்படியும் சமைத்தாக வேண்டுமே என்று ஓரளவு சமைப்பேன். வாரத்தில் ஒருமுறை ஹோட்டல் தான். இப்போது வீட்டில் யாரும் ஹோட்டல் போக சொல்வது இல்லை. அவ்வளவு நன்றாக சமைக்க கற்று விட்டேன். அறு சுவையில் குறிப்புகள் அனுப்பும் தோழிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதை வுிட இந்த அருமையான இணைய தளத்தை தொடங்கிய பாபு அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

god is my sheperd

வாவ் கதிஜா அருமையான திரட்..இரு வேலையை முடிச்சுட்டு வாறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கதீஜா, சமையல் வல்லுனர்கள் என்கிறீர்கள்.. அந்த லிஸ்டில் என்னை இணைக்க முடியாது.... ஓரளவு சமையல் அனுபவமுள்ளவர் என்றுதான் சொல்லலாம். எங்கள் வீட்டில் எப்பவுமே அம்மா சமையல்தான். அம்மா நன்றாக சமைப்பா. அவரின் சமையலை சாப்பிட்டவர்கள்... சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அதன் சுவையை. ஆனால் நான் அம்மா சமைக்கிறபோது அப்படியே பார்த்துக்கொண்டு நிற்பேன், அம்மாவும் சொல்லிக் கொடுத்தபடியே சமைப்பா... இந்தக் கறி இப்படித்தான் வைக்கவேண்டும் ... இதற்கு பழப்புளி தான் போடவேண்டும்... இப்படி... அதனால் எனக்கு பொறுப்பாக சமைக்கத் தொடங்கியபோது... பெரிதாகப் பிழைக்கவில்லை. ஓரளவு நன்றாகவே வந்தது. அதிலும் ஒரு தடவை கேட்டாலே நான் ஓரளவு கிட்டத்தட்ட அப்படியே செய்துவிடுவேன்.

கேக் செய்வது, ஐசிங் போடுவது, உடைகளில் பூப்போடுவது, பெயின்ரிங், தைப்பது.... இப்படியான வேலைகள் எல்லாம்... கேட்டுக்கேட்டுத்தான் செய்தேன்... இப்போ கடும் திறமை இல்லாவிட்டாலும் ஓரளவு செய்யத்தெரியும்.

ஆனால் என்னைப் பொறுத்து சிலருக்கு சமையல் பிடிக்காது, சமைக்கும் நேரத்தில் எங்காவது போய்வந்தால் நல்லது என்று நினைப்பார்கள். சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் இருக்கும்... நானும் அப்படித்தான்.... அதிலும் இந்த அறுசுவைக்கு வந்ததிலிருந்து பார்ப்பதெல்லாம் செய்யவேண்டும் என்றுதான் தோன்றும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஏற்கனவே என் சமையல் கில்லாடிதனத்தை சொல்லி இருக்கேன் மேகி மேட்டரில் இருந்தே புரிந்து இருப்பீங்க ஹி ஹி..ஆனால் என்னிடம் கல்யாணத்துக்கு முன் ஒரு பழக்கம் உண்டு சமையல் தெரியலேனாலும் எனக்கு பிடித்த ஐட்டம் அப்புறம் யாராஅவது டேஸ்டா சமைத்து இருந்தால் அவர்களிடம் கேட்டு உடனுக்குடன் டைரியில் எழுத்திப்பேன் அதுதான் எனக்கு கல்யாணத்துக்கு பின் எனக்கு சமைக்க உதவி செய்தது அதோட என் அக்கா சமையலுக்கு ஈடு இல்லை அவ்லோ டேஸ்ட் அவங்களிடமும் கற்றதுதான் இந்த சமையல்.என் அன்பான கணவருக்கு டேஸ்டா சமைக்கனும்னு எண்ணம் எனக்குள் ஆழமா இருந்தது அதுவே என் வெற்றிக்கு மெயினான காரணம் இப்பவும் அந்த டைரி பழக்கம் போகல புக்கில் ஏதாவது புதுசா டிப்ரண்டா இருந்தால் உடனே நோட் பன்ணிடுவேன் டைம் கிடைக்குறப்ப என் டேஸ்டுக்கு ஏற்றாபோல மாற்றி சமைப்பேன் அதொட நானா யோசித்து இப்படிலாம் பண்ணினா எப்படி வரும்ம்னு யோசித்து அதை எழுதிட்டு அதை ஒரு நாள் டிரை பண்ணி பார்ப்பேன்..இப்போ அருசுவை இதில் எதுலாம் டிப்ரண்டா இருக்கோ அதை பண்ணி பார்கிறேன்..ஊருக்கு ஊர்,நாடுக்கு நாடு சமையல் வித்தியாசம்தானே எனக்கு டிப்ரந்தா பண்ணுறது ரொம்ப பிடிக்கும்..ஆர்வம் இருந்தால் வெற்றி நிச்சயம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அதே தான் சமைக்க ஆர்வம் இருந்தால் சுவை தானா வரும்..எனக்கு சமைக்க பிடிக்கும்.அதிரா சொன்னது போல அதிகம் சமைத்து பழக்கமில்லாட்டாலும் அம்மா என்னை கிளற ,பொடி போடன்னு கூப்பிடுவாங்க..அப்ப என்னெல்லாம் போடராங்கன்னு பாத்து வச்சுக்குவேன்..பிறகு என் பாட்டி அவர்கள் பின்னாடியே நடந்து காப்பி அடிப்பேன்.
பாட்டி சமைப்பதே தெரியாது..பேசிக் கொண்டே இருப்பார்கள் வேலை முடிஞ்சிருக்கும் அது என்ன வித்தையோ என அதையும் நோட் பன்னி எடுத்துட்டேன்..ஆனால் திருமணம் தானே எல்லாத்துக்கும் ஒரு முதல்படி.
அது மாதிரி எனக்கும் என் மாமனார் தான் காரணம்..என் மாமனார் ஒரு செஃப்...அதனால் அவருடைய உணவின் மகிமையை சொல்லாத ஆட்கள் இல்லை.அதனாலேயே எனக்கு மனசில் ஒரு வெறி..எக்காரணம் கொண்டும் என் மாமனாருடன் ஒன்றாக நின்று விட்டு யாரும் சாப்பிட சஹிக்கலைன்னு சொல்லிடக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன்...பிறகு திருமன மான புதிதில் என் மாமனாரே சொன்னார் புதுசா கத்துக்கரங்கர ஆனால் நல்ல எக்ஸ்பேர்ட் மாதிரி சமைக்கிரியே என்று..நமக்கு சொல்லவா வேனும் அப்படியே மேல பறந்து இடிச்சு ஒரு வழியா கீழ வுழுந்து பிறகு நிறைய தப்பு தண்டால்லாம் பன்னி தான் பழகினேன்.\
ஆனால் இப்பொழுது ஒரு party என்றாலும் என்னிடம் சமைத்துக் கொண்டு வர சொல்வார்கள்.எல்லோருக்கும் இஷ்டம்..எனக்கு பெருமை தாங்காது.என் கனவரும் போதாகுறைக்கு அடிக்கடி நீ சமச்சு சாப்பிட்டு எனக்கு இப்ப ரெஸ்டாரன்ட்ல பிடிக்கிரதே இல்லம்பார்...ஆஹா என்னன்னு சொல்ல கேக்கவே சுகமா இருக்கும் தூக்கம் தள்ளுது...நான் தூக்கத்தில் எதையாவது ஒளரியிருந்தா யாரும் கண்டுக்கதீங்க..பாய் ..குட் நைட்

/என் கனவரும் போதாகுறைக்கு அடிக்கடி நீ சமச்சு சாப்பிட்டு எனக்கு இப்ப ரெஸ்டாரன்ட்ல பிடிக்கிரதே இல்லம்பார்...ஆஹா என்னன்னு சொல்ல கேக்கவே சுகமா இருக்கும்/

Madam this is the best complement for all your hard work.
Please post lots of recipes for us too.Thanks.

/சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் இருக்கும்... நானும் அப்படித்தான்.... அதிலும் இந்த அறுசுவைக்கு வந்ததிலிருந்து பார்ப்பதெல்லாம் செய்யவேண்டும் என்றுதான் தோன்றும்./

I am also like this.

ஹஹா தளி ஆமாம் இஙும் அதேதான்..பெருமையாதான் இருக்கும்...அதோட என் மாமியார் வீட்டில் எனக்கு தனி இடம் என் நாத்தனார்,மாமி,மாமா லாம் சொல்லுவாங்க வாரவங்களிடம்லாம் அய்யோ என்னமா சமைப்பா அப்படி இப்படின்னு புகழுறப்ப சந்தோசமா இருக்கும்..அதோட ஊர் போன இவரும் சொல்லுவார் மர்ழியாவை சமைக்க சொல்லு ந்னு கொஞ்சம் எரிச்சல் வரும் ஊர் போனாலும் சமைக்கும் வேலையான்னு இருந்தாலும் அந்த டைமில் அவர் என் சமையல் மேல் வைத்து இருக்கும் லவ் தெரிஞ்சது,...

என்வீட்டில் அனைவரும் கவலை பட்டாங்க இப்படி பொருப்பு இல்லாமல் இருக்காலே கல்யாணம் ஆனா எப்படி சமைப்பாவோன்னு அப்படி சொன்னவங்கலாம் என்னிடம் டிப்ஸ்,இதை எப்படி பண்ணலாம்னு போன் போட்டு கேட்குறப்ப இன்னும் அதிகம்மதிகம் சந்தோசம்...இப்படி நமை சுற்றி இருப்பவர்கள் ஆதரவும்,நமக்குள் ஆர்வமும் இருந்தாலே போதுமே...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்கள் சமையல் ஆர்வத்தை சொன்னதுக்கு நன்றி. என்னுடையதையும் கேளுங்க.

எனக்கு சமையல் சொல்லி தந்தது அம்மாதான். ஆனால் ஆரம்பத்தில் சாப்பாடு செய்வதற்க்கு அந்த அளவுக்கு ஆர்வம் காமிக்க மாட்டேன். மற்றபடி,கேக்,ஸ்வீட்,பிஸ்கட்லாம் செய்றதுல ரெம்பவும் இண்ட்ரஸ்ட் என் அம்மா சொல்லுவாங்க கல்யாணம் ஆனால் கணவருக்கு இதையா செய்து கொடுத்துட்டு இருக்க முடியும் அதனால ஒழுங்கா சமையல் கத்துக்கோன்னு. அப்ப பார்க்கலாம்னு சொல்லிடுவேன். என் ஹஸ் சொந்தம்னால அவங்க கிட்ட சொல்லுவேன் எனக்கு சமையல்லாம் எதுவும் தெரியாதுன்னு பரவாயில்லை நானே சொல்லி தர்றேன்னு சொன்னதால எனக்கு நல்ல தைரியம். அப்புறம் கல்யாணம் முடிந்து 5 மாசத்துல ஜப்பான் போனேன் போகும் போது என் அம்மா, பாட்டி,மாமி எல்லாருடைய சமையலையும் ஒரு டைரில எழுதிட்டு போனேன் அளவு எல்லாம் எனக்கு தெரியாதா அதனால தான். சமையலாவது எப்படியும் சமாளித்துவிட்லாம் ஆனால் இந்த டிபன் அயிட்டமெல்லாம் தெரியவே செய்யாது. ஜப்பான் போய் என் ஹஸ்ஸுக்கு ஏதோ செய்து கொடுப்பேன் பாவம் எதுவுமே சொல்லமாட்டாங்க நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க நான் சாப்பிட்டு பார்த்தால் உள்ளேயே போகாது எனக்கு அழுகையாக வரும். அவங்க கிட்டயும் சொல்லுவேன் என்னால உங்களுக்கு சமையல் கூட டேஸ்டா பண்ணி தர முடியலையேன்னு அழுவேன் அதுக்கு அவக்க சொல்லுவாங்க இதுக்கு போய் அழலாமா பழக பழக சரியாகிடும்னு. இது நாளயே எனக்கு சமையல் மேல ஒரு வெறியே வந்துட்டுன்னு சொல்லலாம். நாம நம்ம கணவருக்கு நல்ல செய்யனும்னு ஆர்வம் வந்ததால எல்லாமே நல்ல வரனும்னு கேர் எடுத்து செய்வேன் அப்படி செய்து ஒரு வழியா நல்ல செய்வதற்க்கு பழகிட்டேன். இப்ப 5 வருஷம் ஆகுது அவங்களுக்கு எப்பவும் ஒரே அயிட்டமாக செய்யனும்னு நினைக்க மாட்டேன் எல்லாமே டிப்ரெண்டாக பண்ணுவேன் அவங்க சாப்பிட்டு நல்லா இருக்குதுமான்னு சொல்றதை கேட்க்க சந்தோஷமாக இருக்கும்.அந்த அளவுக்கு இப்ப என் ஹஸ்ஸுக்கு என் சமையல்னா இஷ்டம். என் வீட்டீலும் என் சமையல் எல்லாருக்கும் பிடிக்கும் என் தம்பிக்கு என் சமையல்னா ரெம்பவும் இஷ்டம் டிப்ரெண்டாக பண்ணி கொடுப்பேனா அதனால தான். என் பிசி ஆப் ஆகப்போது மற்றது பின்னாடி எழுதுகிறேன்.

அன்புடன் கதீஜா.

எனக்கு சமையல் கற்றுத்தந்தது பின் சமையல் தெரியலைன்னு நான் கவலை பட்டது, சமையலில் நான் ஈடுபட,நல்ல சமைக்கனும்னு ஆர்வம் வந்தது எல்லாம் சொல்லிவிட்டேன்.

என் ஹஸுக்கு நான் முதலில் செய்து கொடுத்து பாராட்டு வாங்கியது. நெய்சோறு,சிக்கன் 65, வட்டலப்பம்,ஜவரிசி பாயாசம்,சிக்கன் கிரேவி. இது எல்லாம் நல்ல டேஸ்டியா இருக்குன்னு சொல்லி பாராட்டினாங்க.

அப்புறம் நான் ஏதாவது செய்து நல்லா வந்தால் அதை போட்டோ எடுத்து என் ஹஸ் நியாபகமாக வைத்து இருக்காங்க. நான் முதலில் செய்து நல்லா வந்த தோசை,எப்பவும் தோசை சுட தெரியாமல் பிய்ந்து போய்டும் அப்புறம் நான் முதலில் நன்றாக செய்த இடியாப்பம் இவை எல்லாம் என் சமையலுக்கு என் ஹஸ்ஸு எனக்கு ஊக்கம் தந்தது. உண்மையில் பாராட்டாவிட்டாலும் நம்மை என்க்ரேஜ் பண்ரவங்க இருந்தால் நாம எல்லா விஷயத்திலும் முன்னேறலாம் தானே தோழிகளே அதுக்கு நானே ஒரு உதாரணம்.

என் ஹஸ் தான் எனக்கு குறிப்புகள் அறுசுவையில் கொடுக்க ஆர்வம் தந்தார்கள். நான் கூட்டாஞ்சோறில் குறிப்பு கொடுத்ததற்க்கு காரணமும் இதுதான் எனக்கு தெரியாததை போல எத்தனை பேருக்கு சமையல் கஷ்டமாக இருந்து இருக்கும். நம்மை போல தெரியாத சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவி செய்யனும்னு தான் நான் குறிப்பே கொடுக்க ஆரம்பித்தேன்.மற்றபடி எந்த வித போட்டிக்காகவும்,பாராட்டுதலுக்காகவும் இல்லை.

அப்புறம் நான் விருந்தாளிகளுக்காக முதலில் சமைத்தது என் ஹஸ் ஆபிஸில் இருந்து எங்களையும் சேர்த்து 7 பேருக்கு சமைத்தேன்.டின்னருக்குதான் 3 மணி நேரம் ஆனது புதுசா விருந்தாளிகளுக்குன்னு சமைத்ததால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.(ஆனால் இப்ப 10 பேர் சாப்பிட வந்தாலும் எல்லாம் 1 மணி நேரத்துலேயே 10 அயிட்டம் பண்ற அளவுக்கு முன்னேறி விட்டேன்) வந்திருந்த ஜாப்பனீஸ் காரங்க சாப்பிட்டுவிட்டு பாராட்டினது மறக்க முடியாது.

இப்பவும் நான் ஜப்பானுக்கு போனால் அடிக்கடி யாராவது விருந்தாளிகளுக்கு சமைக்கனும். என் ஹஸ் ஆபீஸ்க்கு லஞ்ச் எடுத்துட்டு போனாலும் கூட 4 பேருக்கு சேர்த்து தான் கொடுத்துவிடுவேன் அவங்க ஆபீஸில் என் சமையல்னா விரும்பி சாப்பிடுவதாக சொல்லி என் ஹஸ்ஸே கூட செய்துதான்னு சொல்லி கேட்பாங்க ஒரு வழியா என் கதை சொல்லி முடித்துட்டேன்.

படிக்க சுவாரஸ்யமா,போரான்னு நீங்க தான் தோழிகளே சொல்லனும்.என்னை போல நீங்களும் டீட்டெயிலா சொல்லுங்களேன் ப்ளீஸ். இது மத்த சகோதரிகளுக்கு ஒரு ஆர்வம் வர காரணமாக இருக்கும் தானே. நாமளும் அவங்களை உற்சாகப்படுத்தாலம்.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்