மலரும் நினைவுகள் !!!

ஹாய் கோழீஸ், கொஞ்ச நாளாக அறுசுவை பக்கம் வரமுடியாததால் இழை எதுவும் புதுசா தொடங்க முடியல. சமீபமாக அறுசுவையில் கேட்ட சந்தேகங்களை கேட்டுக் கொண்டு, பேசியவற்றையே பேசி நானும், நம் தோழிகளாகிய நீங்களும் நிறையவே போராகி விட்டோம் ;( ஒரு குட்டி மாற்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு சிறு நம்பிக்கையில் இந்த இழையை தொடங்குகிறேன். மேட்டர் இது தாங்க..

நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் பல இக்கட்டான சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் கடந்து வந்திருப்போம். அப்படி வரும்போது அந்த இடத்தை எப்படி கடந்தீர்கள் அதாவது அந்த பிரச்சனைகளை எப்படி கடந்தீர்கள் என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். விஷயம் துக்கமானதாக இருந்தாலும் சரி, லூஸ்தனமாக ;) இருந்தாலும் சரி, நகைச்சுவையாக இருந்தாலும் சரி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். அதனால் எங்களுக்கும் ஒரு புதிய அனுபவம் கேட்கும் வாய்ப்பையும், உங்களின் ப்ளாஷ் பேக்குக்கு நீங்க போன சந்தோஷத்தையும் ஏற்படுத்தி கொள்ளமுடியும். என்ன கோழீஸ் ப்ளாஷ்பேக்கை கிண்ட ரெடியா? நாங்களும் காதை தீட்டிட்டு கேக்க ரெடியா இருக்கோம். வாங்க.. வாங்க...

பயனுள்ள இழையை தொடங்கிய கோழி கல்பனாவிற்கு நன்றி.(கொக்............கொக்.....கொக்.......கொக்கரக்கோ) விஷயத்தோட இதோ இப்ப வர்ரேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நாங்கள் பைக்கில் ஊருக்கு செல்ல திட்டமிட்டு (கோவை TO ஈரோடு 100KM) 8 மாத கைக்குழந்தையான எங்களது மகளையும் எடுத்துக்கொண்டு வீரசாகசம் செய்த பெருமிதத்துடன் போய் இறங்கினோம். திருமணத்திற்கு முன்பு நான் அடிக்கடி பைக்லயே ஊருக்கு போவனாக்கும் என்று என்னவர் கூறிய பெருமையே இதற்கு காரணம்.
என்னுடைய பிடிவாதத்தின் காரணமாக இந்த பைக் சவாரி. இப்படிக்கூட கைக்குழந்தய எடுத்துக்கிட்டு பைக்ல வருவாங்களானு அர்ச்சனை பூக்கள் அவர்மேல சொறிய அவர் என்னை முறைக்க நான் தலைய சொறிய என்று நின்ற கோலம் இப்பொழுதும் மனக்கண்ணில் திரைப்படம் போல் ஓடுகின்றது. இதுவல்ல மேட்டர்.

திரும்ப கோவை வரும் பொழுது என்னை பெருந்துறை பஸ்ஸ்டேண்டில் பஸ் ஏற்றிவிட்டு( பஸ்ஸ்டேண்ட்ல பஸ்லதான ஏறமுடியும் ஏரோபிளேன்லயா ஏறுவாங்க) கூடவே பைக்கில் வருவதாக பிளான். நாமதான் பிளான மாத்துறதில ராணியாச்சே!!!!! சரி சரினு மண்டையாட்டிட்டு திரும்ப அடம்புடிச்சு பைக்கவுட்டு இறங்கவே மாட்டேனு சொல்லிட்டேன். பப்ளிக் பிளேஸ்ங்கிறதால என்னவரும் பொறுமைய கடைபிடிச்சு அழைச்சிட்டு வந்தாரு. அதுக்காக வர்ற வழியில வாங்கினதை எல்லாத்தையுமா கடை வெக்கமுடியும்.

பாதிவழியில வந்தவுடன் நீங்க நெனச்சமாதிரியே டயர் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!
அப்புறம் என்ன என்ற புராணநாதா நெற்றிக்கண்ண தெறந்தாரு. ஆனா நாம யாரு குழந்தைய எடுத்து இடுப்பில இடுக்கிக்கிட்டு "ஏங்க அங்க பாருங்க அந்தப்பக்கமா நாலஞ்சு பேர் நிக்கிறாங்க நாம அங்க போயி நிக்கலாம் அப்புறமா என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்னு" ஓசனை வேற சொல்ல ஆரம்பிச்சிட்டேன். இவரும் சரினு சொல்லிட்டு பைக்க தள்ளிட்டு 2அடி கூட நகர்ந்திருக்கமாட்டாரு, எங்கிருந்தோ 2பேர் டி.வி.எஸ்50 ல வந்தாங்க. என்ன சார் பஞ்சருங்களானு கேட்டாங்க? சரி நீங்க எதித்தாப்பில இருக்கிற மர நிழல்ல நில்லுங்கனு சொல்லிட்டு பைக்கயும் அவங்களே தள்ளிட்டு வந்தாங்க.
என்னவரோ பரவால்லீங்க நானே தள்ளிக்கிரேன்னு சொன்னாலும் விடமாட்டேனு அவங்களே தள்ளிட்டு வந்தாங்க.(இடையிடையில சம்பாஷணைகள்).
அங்க பக்கத்தில எங்கேயுமே கடை கண்ணி ஒண்ணும் கிடையாது. சார் நீங்க இங்கயே இருங்க நாங்க போயி டியூப் மாத்திட்டு வந்தரோம்னு டயர கழட்டிடு போய்ட்டாங்க.
அந்த இடைவெளியில எனது மகளை கீழவிட்டு விளையாட்டு காட்டிட்டு இருந்தேன். அவபாட்டுக்கு ரொம்ப சந்தோஷமா மண்ண பறைக்க ஆரம்பிச்சுட்டா. அப்பதான் உட்கார்ந்து பழகியிருந்தா. நான் குழந்தையோட வளையல், செயின் எல்லாத்தையும் கழட்டி கணவர்கிட்ட கொடுத்துட்டேன்.

எல்லாம் ஒரு ஜாக்கிரதை உணர்வுதாங்க. இதெல்லாம் பைக்ல ஏர்றதுக்கு முன்னாடி இருந்திருக்கணும்னு இடையிடையில ரெண்டு திட்டு வேற. இதுக்கெல்லாம் அசர்ற ஆளா நாமனு ஸ்மூத்தா நின்னுக்கிட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு 2பேரும் டயர் கொண்டுகிட்டு வந்தாங்க. அவங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே மாட்டி விட்டாங்க.
சரிங்க ரொம்ப நன்றிங்கனு சொன்னோம். என்னவர் பணம் கொடுத்தார். ட்யூப்க்கு போய்ட்டு வந்த பெட்ரோல் செலவுக்கு மட்டும் பணத்த எடுத்துக்கிட்டு மீதிப்பணத்தை கொடுத்தாங்க. என்னவர் அதுக்கூட இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துப்போட்டு அவங்க பாக்கெட்ல எல்லாம் வெச்சுப்பார்த்தாரு. ம்ஹூம் வாங்கவே மாட்டேனுட்டாங்க. எங்களுக்கு ரொம்பவே கஷ்டமாவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆபத்பாந்தவன் மாதிரி இப்படி உதவி பண்ணிட்டு சாதரணமா இருக்காங்களேனு. என்னவர் விசிட்டிங்கார்டு கொடுத்து கோவைவந்தா என்னய வந்து பாருங்கனு சொன்னாரு.
ஆனா அந்த நல்ல உள்ளங்களை இதுவரை நாங்க பார்க்கவேயில்லை. ஒவ்வொருமுறை அந்த இடத்தை கடந்து போகும் பொழுதெல்லாம் இந்நிகழ்வு எங்கள் மனக்கண் முன் நிற்கிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள், முதல் பதிவை கொக்கரிப்போடு கூவி சொல்லி உற்சாகமான ஒரு பதிவை போட்டுட்டீங்க. நன்றிகள் :)

//திருமணத்திற்கு முன்பு நான் அடிக்கடி பைக்லயே ஊருக்கு போவனாக்கும் என்று என்னவர் கூறிய பெருமையே இதற்கு காரணம்.// கல்யாணம் ஆன புதுசுல வாய் தவறி சொன்ன விஷயம் எத்தனை வினையை உண்டாக்கியிருக்கு பாருங்க அவருக்கு ;) இனி ஆயுசுக்கும் க.மு..முன்னாடி நடந்ததை சொல்லவே மாட்டாரு :)

//அர்ச்சனை பூக்கள் அவர்மேல சொறிய அவர் என்னை முறைக்க நான் தலைய சொறிய// நல்ல பேன் சீப்பா போட்டு வாரி இருந்தா இப்படி சொறிய வேண்டி இருந்திருக்குமா உங்களுக்கு? ;)

//அதுக்காக வர்ற வழியில வாங்கினதை எல்லாத்தையுமா கடை வெக்கமுடியும்.// அதுக்கு இன்னொரு இழை தொடங்கிடலாம். நம்ம கோழீஸ் அப்ப நிறைய கடைகளுக்கு அதிபதிங்களா இருப்பாங்க :)

//ஓசனை வேற சொல்ல ஆரம்பிச்சிட்டேன்// உங்க யோசனையை கேட்டு இந்த இப்ப நட்ட நடு ரோட்ல நிக்கும் போதும் அதை மறந்துட்டு அடுத்த ஓசனையையும் கேட்டார் பாருங்க உங்க புராணநாதர்.. உண்மையாவே அவர் நல்லவர்ங்க ;))

//எங்களுக்கு ரொம்பவே கஷ்டமாவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆபத்பாந்தவன் மாதிரி இப்படி உதவி பண்ணிட்டு சாதரணமா இருக்காங்களேனு. // தர்மம் தலைகாக்கும்னு சும்மா சொல்லலைங்க.. அது தீர்க்கதரிசி வார்த்தை. எப்பவோ எங்கேயோ, யாரோக்கோ, எந்த சூழ்நிலைகளிலோ நாம செய்த உதவி, நமக்கு இப்படி திரும்ப கிடைக்கும்.

அருள், உங்க அனுபவத்தை சுவாரசியமா விவரிச்ச விதம் இண்ட்ரெஸ்ட்டா இருந்தது. நீங்க கதையே எழுதலாம். நல்ல அழகா சொல்றீங்க.. இன்னும் இருந்தா சொல்லுங்க பா..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

////// அது தீர்க்கதரிசி வார்த்தை. எப்பவோ எங்கேயோ, யாரோக்கோ, எந்த சூழ்நிலைகளிலோ நாம செய்த உதவி, நமக்கு இப்படி திரும்ப கிடைக்கும்////////

ஐயோ கல்ப்ஸ் சத்யமா சொல்ரேன் கல்ப்ஸ் இந்த வார்த்தைகளை எழுதிட்டு நான் ரொம்ப பெரிய இவளாட்டம் பேசரமோனு டெலிட் பண்ணிட்டேன்.
இன்னொரு விஷ்யம் சொன்னா நம்ப மாட்டீங்க லாவண்யா பட்டில கலந்துகிட்டப்போ பலாப்பழம், தேங்காய் எண்ணைய் தட்வி சுளை எடுக்கணும் வெளில முள்ளா இருக்கும் அப்படீனு சொல்லி இருப்பேன். ஒரு நாலஞ்சுநாள் முன்னாடி பழைய் பட்டிய படிச்சேன் அதுல நீங்க ஒரு இடத்தில இதையே சொல்லி இருந்தீங்க எனக்கு ஒரே ஷாக். இதபார்த்து காப்பி அடிச்சிருப்பேன்னு நிறையபேர் நினைச்சிருப்பாங்களோனு. நான் முதன் முதலாக கதை எழுதி இப்பதான் அனுப்பினேன். இதுவும் உண்மை.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப ரொம்ப அருமையான இழை....
மலரும் நினைவுகள் என்று சொன்னவுடன் சந்தோசம்,கவலை,கல்ப்ஸ் அக்கா சொல்ற மாதிரி லூசு தனம் போன்ற எல்லா நியாபகங்களும் வந்து குவியுது....

முதலில் இனிப்பான செய்தியிலிருந்து ஆரம்பிப்போம்....

என் வாழ்க்கையில் மாஷா அல்லாஹ் நான் பல முறை சந்தோசமான தருனங்களை அனுபவித்து உள்ளேன்....
அதை இன்று நினைத்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கும் சந்தோசம் தரக்கூடிய விஷயம் இரண்டு....

அதில் முதலாவது என் தோழர்,என் தாய்,என் பிள்ளை,என் செல்ல எதிரி, மொத்தத்தில் என் நல்ல வாழ்க்கை துணை எஸ் ஷாக்ஷாத் என் கணவர் எனக்கு கிடைத்த நாள்.எங்கள் திருமன நாள்.

இரண்டாவது நான் பத்து வருசமா படி படின்னு படித்த படிப்புக்கு பலன் கிடைத்த நாள்.
மை 10வது ரிசல்ட்...
எங்கள் வீட்டில் அவ்வளவா படித்தவர்கள் யாரும் கிடையாது....சோ என்னை ரொம்ப நல்லா படிக்கனும்ன்னு சொல்லி யாரும் என்னை கட்டாய படுத்த மாட்டார்கள்.

என் அம்மாக்கு இது நாள் வரைக்கும் நான் படித்த பள்ளி எப்படி இருக்கும் என்றே தெரியாது.அதுனாலயோ என்னவோ ஆன்டவன் எனக்கு போதுமான அளவு கல்வி அறிவு தந்தான்.
எங்கள் பள்ளியில் 10வது படிக்கும் மாணவர்கள் காலான்டு,அரையாண்டு ரேங்க் கார்ட் வாங்க பேரன்ட்ஸ்சை கூட்டிகிட்டு வரனும் ஆனால் எங்க அம்மா மட்டும் வர மாட்டாங்க நான் சொன்னாலும் அவங்களுக்கு புரியாது.சோ நான் மட்டும் என் கார்டை வீட்டுக்கு வாங்கிட்டு போயிடுவேன்....

என் அக்கா அவ்வலவா படிக்கலை என்றாலும் எனக்கு ஆர்வத்தை தூன்டிகொண்டே இருப்பாள்.என் தாத்தா...மாடல் கொஸ்ட்டீன் பேப்பருக்காகவே தினம் தினம் செய்தி தாள் வாங்கி தருவாங்க.

ஆனால் நான் படிப்பதற்க்கு உன்டான அனைத்து வசதிகளையும் எங்க அம்மா எனக்கு செய்து தருவாங்க.

10வது பப்ளிக் எக்சாம் வந்தது நாங்கள் போட்டி போட்டு கொண்டு படிக்க ஆரம்பித்தோம்....
இருட்டுனா எனக்கு ரொம்ப பயம் சோ நான் படித்து முடிக்கும் வரை என் கூட என் அம்மாவும் தூங்காமல் இருப்பாங்க.
காலையில் எழுப்ப சொல்லிட்டு படுத்தா சீக்கிரமா எழுந்து என்னை எழுப்பி விடுவாங்க...
சில நேரம் தூக்கத்தில் நான் எழும்பாமல் இருந்தால் அசந்து தூங்குறேன் சொல்லி எழுப்பாமல் போயிடுவாங்க.நான் எதற்க்கு படிக்கிறே,என்னா படிக்கிறேன்,எத்துனாவது படிக்கிறேன் ஒண்ணும் தெரியாது...

அப்பறம் தூங்கி எழுந்து எத்தனையோ முறை அழுது இருக்கிறேன்:0....என்னை ஏன் எழுப்பலை என்று:)....

எக்சாம் ஆரம்பித்தது நான் படித்தது மகளிர் பள்ளி. ஆனால் நாங்க எக்சாம் எழுத ஆண்கள் பள்ளிக்கு சென்று பாய்சுடன் தான் எழுதனும் .
அங்கே போனா அவனுங்க இந்தாப்பா ஆன்சர் தெரியாட்டி சொல்லி தரியாப்பா(ரொம்ப அப்பாவி மாதிரி)கேட்டு நச்சரிச்சி கிட்டே இருந்தாங்க:)....
எக்சாம் ஆரமித்தது நேரம் செல்ல செல்ல வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டானுங்க....
பென்ச்சை அசைப்பது,பென்னை கீழே போட்டு எடுப்பது போல் பக்கத்தில் வந்து கேட்ப்பது....
அப்போ பயம்,நடுக்கமா இருந்தது. இப்போ நினைத்தால் சிரிப்புத்தான் வருது:)

எனக்கு கணக்கில் எப்பவும் ஆர்வம் அதிகம்...கஷ்ட்டமான ப்ராப்ளத்தை மூளையை கசக்கி சால்வ் பண்ணுரதுன்னா ரொம்ப இஷ்டம்.எப்பவும் கணக்கில் நான் தான் ஃபஸ்ட் வருவேன்....
எப்படியும் சென்டம் எடுத்திடனும் என்ற ஆர்வத்தில் படித்தேன்...

மேத்ஸ் கொஸ்ட்டீன் பேப்பரும் எனக்கு ரொம்ப ஈஸிய்யா தெரிந்தது அதை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோசம் தான் எப்படியும் சென்டம் தான் என்ற நினைப்போடு வீட்டுக்கு திரும்பினேன்.வரும் வழியில் நானும் என் ஃப்ரன்டும் ஆன்சர் டிஸ்கஸ்ட் பண்ணிகிட்டு வந்தோம்...
அப்போ என் தலையில் இடியே வந்து விழுந்தது போல் இருந்தது....

ஒரு 2 மார்க் ஆன்சருக்கு ஃபார்முலா கரெக்ட்டா போட்டுட்டு அதை அப்லே பண்ணும் போது கேர்லஸ் மிஸ்டேக் பண்ணிட்டேன்...
சோ ஃபார்முலாக்கு 1 மார்க் மட்டும் தான் வரும்.அவ்வளவு தான் அங்கேயே அழுவ ஆரம்பித்து விட்டேன்:).
வீட்டிற்க்கு வரும் போது அழுதுகிட்டே வந்தேன் எங்க அம்மா பதறி போய்ட்டாங்க.
நான் விஷயத்தை சொன்னதும் 1 மார்க் தானே போனா போகட்டும்ன்னு அவங்க ஸ்டைலில் சொன்னாங்க:)

அடுத்து சயின்ஸ் எக்சாம் படிக்க மூடே இல்லை...
ஒரு வழியா எக்சாம் முடிந்தது...

அடுத்து ரிசல்ட் பயம் ஆரம்பித்து விட்டது.
முட்டாள் தனமா நானே ஏதாவது செய்து பார்த்திட்டு இது இப்படி வந்த எக்சாம்ல ஃபஸ்ட் இல்லனா அவுட்:)

இப்படி தான்.... கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஒரு தடவை வாழை பழ தோலை குப்பை தோட்டியில் போடும் போது கரக்ட்டா போய் விழுந்தா ஃபஸ்ட்டுன்னு நினைத்து கொண்டு அதிக தூரத்திலிருந்து தூக்கி வீசினேன்...
ஆச்சரியம்! கரக்ட்டா போய் விழுந்து விட்டது:)

அவ்வளவு தான் நான் ஃபஸ்ட் நான் ஃபஸ்ட்டுன்னு கத்த ஆரம்பித்து விட்டேன்...எங்க அக்கா எல்லோரும் எனக்கு ரிசல்ட் தான் வந்திடுச்சோன்னு ஆசையா வந்தாங்க நான் விஷயத்தை சொன்னதும் லூசுன்னு திட்டு தான் விழுந்தது:)

விடிந்தா நாளைக்கு ஜூன் 4 ரிசல்ட் நாள்.அந்த இரவெல்லாம் தூங்கவே இல்லை தொழுது,ஓதி அல்லாஹ் கிட்ட துஆ கேட்டு கிட்டே இருந்தேன்.பொழுது விடிந்தது நான் ரிசல்ட் பார்க்க ஸ்கூலுக்கு கிளம்பிகிட்டு இருந்தேன்...

அதற்க்குள் என் அக்காக்கு அவசரம் நான் ஸ்கூலுக்கு ஃபோன் போட்டு நீ பாஸான்னு கேட்கிறேன்னு சொல்லுரா நான் பயத்தில் வேனாம்ன்னு தடுத்தேன்.

ஆனால் அவள் என் பேச்சை கேட்க்கலை.ஸ்கூலுக்கு ஃபோன் போட்டு என் பேரை சொல்லி ஃபாஸான்னு கேட்டாள்....

அதற்க்கு அங்கு உள்ள க்ளர்க் மிஸ் என்னம்மா! பாஸான்னு கேட்க்குறீங்க! அந்த பொண்ணு தான்ம்மா ஃபஸ்ட் மார்க்கே:) :) :) :)
இப்பத்தான் நாங்க ஃபோன் நம்பரை எடுத்திகிட்டு ஃபோன் போட வந்தோம் ஷமீகாவை வர சொல்லுங்க அப்படீன்னு சொல்லி இருக்காங்க.

அதற்க்குள் ஃபோனில் அவங்க என்ன சொல்லுராங்களோன்னு எனக்கு திக்கு திக்குன்னு நெஞ்சி அடிக்குது.
(இப்போ சொல்லும் போது கூட அந்த பட படப்பு இன்னும் எனக்கு வருது:))
என் அக்கா....என்ன!அவள் தான் ஃபஸ்ட்டா அப்படீன்னு அவள் கேட்டதும் என் நெஞ்சி இன்னும் வேகமா துடிக்க ஆரம்பித்து விட்டது.ஆனால் பயத்தில் நான் நம்பவே இல்லை.

என் பெரியம்மா பையன்.....ஷமீகா.... உன்னை விஷ் பண்ணி உங்க ஸ்கூலுக்கு வெளியே போர்ட் போட்டு இருக்காங்கன்னு வந்து சொன்னான்:)

நானும் என் பக்கத்து வீட்டு ஃப்ரன்டும் ஸ்கூலுக்கு போனோம்.அவள் நான் ஸ்கூலுக்கு வருவதை முன் கூட்டியே என் ஃப்ரன்ட்ஸ்சிடம் சொல்லிவிட்டால்.நான் ஸ்கூல் காம்பவுன்டில் நுழைந்த உடனே பபூல்ஸை புஸ்ஸுனு அடிச்சி ஓன்னு கத்தி விஷ் பண்ணுனாலுங்க.:)

அப்பா !!!!!!!!அந்த நொடியை என்னால் இன்னும் மரக்க முடியாது.பயம்,பட படப்பு,சந்தோசம் எல்லாம் சேர்ந்து கடைசியில் எனக்கு அழுகையே வந்து விட்டட்து:)
(இது தான் ஆனந்த கண்ணீரோ!)
அப்பறம் ஸ்கூல் மேம்,மிஸ் எலோரும் வந்து விஷ் பண்ணுனாங்க:)

என்னோட பெஸ்ட் ஃப்ரன்டுன்னு கூட சொல்லலாம் எங்கள் க்ளாஸ் மிஸ் விஜய லக்ஷ்மி மேம். செம்ம சூப்பரா இருப்பாங்க.அன் மேரீட்.அப்படியே என்னை கட்டி பிடித்தி நெற்றியில் முத்தமிட்டார்கள்:)
(ரொம்ப தேங்க்ஸ் கல்ப்ஸ் அக்கா நான் அவங்களை நினைத்து பார்த்து ரொம்ப நாள் ஆகுது...அவங்க நியாபகத்தை தந்ததற்க்கு:))

அப்பறம் என்ன ஒரே பாராட்டு மழையும் பரிசு மழையும் தான்.எங்க பெரியப்பா,சித்தப்பா,பெரிம்மா வீட்டு அண்ணாஸ்,எல்லா அக்காஸ் ஹஸ்பன்ட்ஸ்,ஊர் லயன்ஸ் கிளப், எல்லோரும் ஃபோன் போட்டு விஷ் பண்ணி லம்ப்பா ஒரு அமவுன்ட் தந்தாங்க:)

அப்பறம் தமிழ் நாடு முஸ்லீம் கிராஜுவேட்ஸ் அசோசியேசன் சார்பில் சென்னைக்கு கூப்பிட்டு ஸ்கூலுக்கு தகவல் வந்தது.தமிழ் நாடு ஃபுல்லா உள்ள 90%க்கு மேல மார்க் எடுத்த முஸ்லீம் மாணவ மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்கள்.

இதற்க்காக நான் எங்கல் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றேன்.அந்த நிகழ்ச்சி சென்னை நியூ காலேஜில் நடந்தது.அங்கு நான் என் பெரிம்மா வீட்டு அண்ணனோடு சென்றேன்.அங்கே எங்கள் இருவருக்கும் மதிய உணவு பிரியானி தந்தாங்க:).

அங்கு போனதில் எனக்கு நிறைய ஃப்ரன்ட்ஸ் கிடைத்தார்கள்.அதில் சஃப்ரீன் -கும்பகோனம்,செய்யது அலி ஃபாத்திமா - சென்னை,தக்ஷின் - சென்னை நாங்க நாலு பேரும் நல்லா பேசி பழகினோம்.
அப்படியே சென்னைய கொஞ்சம் சுத்தி பார்த்திட்டு ஊருக்கு வந்தோம்.

அந்த பரிசுகலை எல்லாம் ப்ரேயரில் வைத்து மேம் எனக்கு தந்தாங்க.....:)

நான் சொன்ன இது எல்லாத்தையும் & என்னை பற்றியும் எங்க தாத்தா ஒரு டைரி மாதிரி எழுதி எனக்கு கல்யானம் முடிந்த இரவு இவர்கல்(my has) கையில் கொடுத்தார்கள்.ஆனால் இப்போ என் தாத்தா இல்லை இறந்து 2 வருடம் ஆகிரது:(

இந்த கதைய படிச்சதுலேந்து ஒண்ணு மட்டும் நீங்க என்னை பற்றி புரிந்து இருப்பீங்க! நான் ஒரு ப்லேடுன்னு....ஹா...ஹா..ஹா...:)

இதெல்லாம் இப்போ நடந்த மாதிரி உள்ளது.இதை மீண்டும் என் கண் முன்னே கொண்டு வந்ததற்க்கு கல்ப்ஸ் அக்காக்கு மீண்டும் என் நன்றிகள்.

ம்ம்ம்ம்...வாங்க ஃப்ரன்ட்ஸ் வந்து உங்க நியாபகங்களை வந்து கொட்டுங்க.........

நியாபகம் வருதே....நியாபகம் வருதே....பொக்கிஷமாக நெஞ்சுக்குள் புதைந்த நினைவுகளெல்லாம் கல்ப்ஸ் அக்காவால் நியாபகம் வருதே:).........

(இன்னும் நிறைய இருக்கு சொல்லுறேன்....{நீங்கள் அழுவது எனக்கு விளங்குது:) }பாவம் நீங்களெல்லாம் கல்ப்ஸ் அக்காவால் என்னிடம் மாட்டி கொண்டீர்கள்:))

SSaifudeen:)

ஹலோ ஆப்பிரிக்க காட்டுப்புலிங்கோ இழைய தொடங்கின உங்களோட காங்கோ அனுபவங்களை எங்களோட பகிர்ந்துக்கலாமே?
(காங்கோல வலதுகால எடுத்து வச்சதிலருந்து சொல்ல ஆரம்பீங்க) இழைய தூக்கிவிட இந்த பதிவு.
மற்ற தோழிகளும் வாங்க வாங்கனு இரு கைகூப்பி கல்ப்ஸ் சார்பில வரவேற்கிறேன்.(ஏன்னா கல்ப்ஸ் கைய சுட்டுக்கிட்டாங்களாம்)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கேள்வி செல்வி, எனக்கு வலக்கரமா இருந்து எனக்கு பதிலா இருகரம் கூப்பி மத்த தோழிகளையும் அழைச்சதற்கு நன்றிகள் :) நாங்க காங்கோல வலது கால் வச்சு வந்த கதையை பிறகு சொல்றோம். இந்தியால 2 காலையும் வச்சுட்டு இருந்தப்ப நடந்த கதைகள்ல ஒன்றை எடுத்து விடுறேன் வேலைகளை முடிச்சுட்டு ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் ஒரு அனுபவததை சொல்கிறேன் எங்க வீடும் எங்க பெரியம்மா வீடும் பக்கத்தில் தான் பெரியம்மா பொன்னு நள்ளா தையல் தைப்பாங்க எனக்கு போர்ரடிக்கும் போதெல்லாம் நான் அவங்க வீட்டுக்கு போயிருவேண் அப்படி ஒரு நாள் போயிருந்தப்ப அக்கா ரெம்ப மிம்பரமா தையல் தச்சிகிட்டுருந்தாங்க நானும் ஆர்வத்தோட எப்படி கட்டிங் பிட்டிங் பண்றதுன்னு கேட்டுகிடுருந்தேன் நான் கேக்குற கேள்விக்கேல்லாம் பொருமையாய் பதில் சொல்லிகிட்டுருந்தாங்க திடிர் நு என் இடுப்ப ஏதோ ஒன்னு சொரன்ரமாதரி இருந்தது எங்க பெரியம்மா வீட்டுல பூனை வலக்குராங்க அந்த பூனை நான் எப்ப போனாலும் பாசமா என் மடியில ஏரி உக்காந்துக்கும் அதுதான் சொரன்டுது போல நு விட்டுடேன் மருபடியிம் சொரன்டுச்சு அதை பூனை குட்டி தானான்னு திரும்பிகூட பாக்காம சட்டுன்னு கயை வச்சி தட்டி விட்டுடேன் உடனே அது என் முதுகு மேல ஏரி என் கழுத்துகிட்ட வந்துருச்சு அதுக்கப்புரம் மெல்ல என்னன்னு திரும்பி பாத்தா பாம்பு........ அய்யோ அம்மா நு அலரிஅடிச்சு ஓடிட்டோம் நானும் அக்காவும் என் கால் எல்லாம் நடுங்கி என் வாய் உதடு எல்லாம் பயத்துல கடகடன்னு தந்தியடிச்சு என் இதயம் துடிச்சது பக்கத்து வீடு வரைக்கும் கேட்டுருக்கும் படக்கு படக்கு நு. அக்கா சொன்னாங்க அதை நீ கயை வச்சி பத்தி விட்டும் பாம்பு உன்ன கடிக்காம உன் முதுகு மேல ஏரி வந்திருக்குன்னா நீ பன்னுன புன்னியாமோ இல்லை அந்த பாம்பு நல்ல மூடுல இருந்ததோ தெரியலன்னு புலம்பிகிட்டு இருந்தாங்க. நாங்க போட்ட சத்தத்துல பாம்பு ஓடிருச்சு அடிகல, என்னால மரக்க முடியாத சம்பவம் இது,

மஹாசிவா... என்னங்க நீங்க பாம்பும் ஆர்வமா தையல் கத்துக்க வந்திருக்கு. சட்டை உரிச்ச அப்புறம் அதுக்கும் சட்டை தைக்கணும்ல அதான். உங்க அக்கா வேற உங்களுக்கே ரொம்ப பொறுமையா சொல்லிக் கொடுக்கறாங்க நமக்கும் கத்து தருவாங்கன்னு வந்திருக்கு. நீங்க கத்துன கத்துல பயந்து ஓடி இப்போ எங்கே சட்டையில்லாம சுத்திகிட்டு இருக்கோ பாவம் :)

எங்க வீட்டுலயும் பாம்பு வந்துச்சுங்கோ. இங்கே அறுசுவையில் முன்னாடியே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். ஆனா ரெண்டுவாட்டி வந்தவங்களும் ரொம்ப குட்டி. தூங்கிட்டு வேற இருந்தாங்க. செக்யூரிட்டி கார்டுக்கு சொல்லி அவங்க வந்து அடிச்சு தூக்கிட்டு போயிட்டாங்க ஆனாலும் பாம்பு பாம்புதானே பயத்துல கைகாலெல்லாம் வெடவெடத்து போச்சு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//திடிர் நு என் இடுப்ப ஏதோ ஒன்னு சொரன்ரமாதரி இருந்தது எங்க பெரியம்மா வீட்டுல பூனை வலக்குராங்க அந்த பூனை நான் எப்ப போனாலும் பாசமா என் மடியில ஏரி உக்காந்துக்கும் அதுதான் சொரன்டுது போல நு விட்டுடேன் மருபடியிம் சொரன்டுச்சு அதை பூனை குட்டி தானான்னு திரும்பிகூட பாக்காம சட்டுன்னு கயை வச்சி தட்டி விட்டுடேன் உடனே அது என் முதுகு மேல ஏரி என் கழுத்துகிட்ட வந்துருச்சு அதுக்கப்புரம் மெல்ல என்னன்னு திரும்பி பாத்தா பாம்பு........//
நீங்க இந்த நிகழ்ச்சியை சொல்லிட்டு இருக்கும் போது, நா கூட ஏதோ பூச்சியாய் இருக்கும்ன்னு நெனச்சேன்.... ஆனா
பாம்புன்னு படிச்ச அப்பறம் அய்யையோன்னு கத்தனும் போல ஆகிடுச்சு.... எனக்கு டைப் செய்யும் போதே முதுகுல எதுவோ ஏறுறா மாதிரி உடம்பு சிலிர்க்குது... பாவம்க நீங்க, உங்க இதயம்மாவது பக்கத்து வீடு கேக்குற அளவுக்கு துடிச்சு இருக்கு, என் இதயமா இருந்தா எகிறி வாய் வழியா கீழ விழுந்தே இருக்கும்.... அம்மாடி..... நெனைக்க கூட பயமா இருக்கு... உங்க அக்கா சொன்ன மாதிரி நிஜமாவே உங்க நேரம் அப்ப நல்லா இருந்திருக்கணும்..... :)

இந்த கதையை படிச்ச அப்பறம் எனக்கு சின்ன வயசுல நடந்த கதை ஞாபகத்துக்கு வருது.... நாங்க சின்ன வயசுல எங்க தாத்தா ஊருக்கு லீவுக்கு போய் இருந்தோம்.... எங்க சித்தப்பா காலையில் கரும்பு காட்டுக்கு போறேன்னு கிளம்பினாரு... என் தம்பி தானும் வருவேன்னு அடம்பிடிச்சு அவர் பின்னாடியே தூங்கி எழுந்து அப்படியே ஓடிட்டான்... காலுல செருப்பு கூட இல்லாம...

கரும்பு காடு முள்ளு குத்தும்னு என் சித்தப்பா அவரோட ரப்பர் செருப்பை இவனுக்கு கலட்டி கொடுத்து இருக்கார்... தம்பி அப்போ ஐந்து வயது சிறுவன்... அந்த ஸ்லிப்பர் இவன் காலுக்கு மாகா மெகா சைஸ்... இவன் ஸ்லிப்பரில் மெதுவாக கரும்பு காட்டுக்குள்ள இருக்கும் வரப்பில் நடந்து போய் இருக்கான்.... அந்த நேரம் பார்த்து ஒரு பாம்பு, அந்த பக்கம் இருந்து இந்த பக்கம் கிராஸ் செய்ய கரும்பு காட்டுக்குள் இருந்து வந்து இருக்கு... இவன் நடுவுல நிக்கறத அது பெரிய விஷயமா எடுத்துக்கவே இல்ல.... இவன் கால் வைத்திருப்பதற்கு போக ஏகத்துக்கு மிச்சமிருக்கும் ஸ்லிப்பர் வலயத்துக்குள் பூந்து அந்த பக்க காட்டுக்குள் போய் விட்டதாம்....

எங்க சித்தப்பா பாம்பு செருப்புக்குள் வரும்போதே பார்த்து இவனை அசையாம நில்லுன்னு எச்சரிச்சு இருக்கார்... அதனால பாம்பார் எதுவும் செய்யாமல் அவர் வேலையை பார்த்துட்டு போய் இருக்கார்....
இல்லன்னா நெனச்சு பார்க்கவே பயமா இருக்கு... :(

மேலும் சில பதிவுகள்