blood loss and diahrea

hello all, help me for blood loss during motion and for diahrea also... having this problem for 1 year... any home medicine please...

ஹாய் ப்ரியா டாக்டர்ட்ட போனீங்களா இல்லையா.இதற்கு வீட்டு வைத்தியம் உண்டோ என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக மருத்துவரை அனுக வேண்டும்

hello thalika,
i went to the docter and taking medicines also.. but it is not cured... all the check ups were done.. blood test,motion test, urine test and scaning also too.. but everything is fine for me, the docter said...
so iam asking for any home medicine from u all... that will be helpful... thanks...

சாரிம்மா எனக்கும் இது பற்றி ஏதும் தெரியாது ஆனால் தளி சொன்னது போல டாக்டர்தான் பெஸ்ட்...இன்னும் வேறு யாராவது டாக்டரிடம் காட்டி பார்கலாமே?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹ்லோ ப்ரியா,மாதுளம்பழத்தின் தோலை எடுத்து தயிர் விட்டுஅரைத்துசாப்பிட்டால் இதுசரியாகும் என்று நினைக்கிறேன்...வயிற்றுப்போக்குக்கு இது மிகவும்நல்ல்மருந்து.அதுவும் இல்லாமல் இதன் துவர்ப்பு ருசி கண்டிப்பாக நல்லபலனைதரும்.ட்ரை பண்ணுங்க.
அன்புடன்விமலா.

THANKS A LOT VIMALA MADEM for giving one easy solution... sure i'll try this and at present i do have one pomogranate at home.. thanks to everyone.. and any other suggestions is there please tell me..

இது அனுபவத்தில் கண்ட உண்மை, ஆனால் நான் விமலா மேடம் சொல்லுவது போல் தயிருடன் சாப்பிடவில்லை. நான் மாதுளம் பழத்துடன் பால் சேர்த்து அரைத்து சாப்பிட்டேன் உடனே கண்ட்ரோல் ஆகும். அதிகமாக energy வேஸ்டாகி இருக்கும்ல அதானால அர்ரொட்டி மாவு என்று கடைகளில் விற்கும் அதை கூட வாங்கி காய்ச்சி குடிக்கலாம் ப்ரியா. அதை காய்ச்சினால் கேந்து போல இருக்கும் கூட

thanks gayathri.. i'll try ur suggestion also....

சாரி ப்ரியா.1 வருஷமா டயோரியா வா.இது டயோரியாவா டிசென்ட்ரியா.அவங்க சொன்ன மாதிரி எப்பவும் எதுவும் இல்லன்னு ஒரு மருத்துவர் சொன்னால் நாம இன்னொரு மருத்துவர் கிட்டயும் போய் பாக்கலாம்..முன்ன போன டாக்டர் ரிசல்ட் சொன்னாம அடுத்த டாக்டர்ட்ட போங்க.
எனக்குன் தெரிஞ்சு டயோரியாவுக்கு நல்ல மருந்து கேற்ரட்டும்,ஆப்பிலும்..ரெண்டையும் ஜூஸ் அடிச்சு அடிச்சு குடிங்க.வேறெதுவும் தெரியல..ஒரு வேளை டயோரியானால ஏதாவது சின்ன கீரல் அப்படி ரத்தம் வருதோ என்னவோ..அதாவது குழந்தைகளுக்கு கான்ஸ்டிபேஷன் ஆனால் சொல்லுவார்களே fissures நு..அது போல

பிரியா தளிகா , விமாலா சின்ன மாதிரி

ஆப்பில் , கேரட் இரண்டையும் துருவி நல்ல ஜூஸா அடிச்சி,அதில் தேன் , இரு பின்ச் உப்பு கலந்து குடிங்க,
அடுத்து தொடர்ந்து இரவில் மட்டும் பன் சாப்பிடுங்கள் சிலருக்கு டென்சன் அதிகமானல் அப்படி ஆகும்,
இல்லை கேரட் கஞ்சி குடிங்க.
மாதுளை ஜூஸ் அதுவும் குடிக்கலாம்.
காரமே சாப்பிடாதீங்க சுள்லுன்னு காரமா சாப்பிட்டாலும் ஒத்து கொள்ளாது.
எல்லா ஜுஸ், கஞ்சி என் குறிப்பில் இருக்கு

வயிற்றை கலக்கும் அயிட்டம் எதுவும் சாப்பிடாதீர்கள்.
ஜலீலா

Jaleelakamal

என்ன ப்ரியா இப்ப எப்படி இருக்கு உடம்புக்கு இது எல்லாம் செய்து பார்த்தீங்களா? ஆன தொடர்ந்து சாப்பிட்டு வந்தா தான் கொஞ்சமாவது குணம் தெரியும். சாப்பிடுறீங்களா இல்லையா? ஆரோக்கியத்த கவனிச்சுக்கங்க ப்ரியா. டயரியா ஆனாலே ரொம்ப லேஸியா இருக்கும் அதனால ஏதாவது ஜூஸ் குடித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு immunisation power இல்லனாலும் இப்படி ஆகும் எதையாவது நினைத்து பயப்படுறீங்களா? டோண்ட் வொரி ப்ரியா இதெல்லாம் சீக்கிரம் சரியாக கூடியது தான்.

மேலும் சில பதிவுகள்