7 மாத குழந்தைக்கு இட்லி குடுக்கலாமா? அப்படி குடுக்கலாம் என்றால் பால் அல்லது தண்ணீரில் கலந்து குடுக்க வேண்டுமா? விளக்குங்கள் தோழிகளே
7 மாத குழந்தைக்கு இட்லி குடுக்கலாமா? அப்படி குடுக்கலாம் என்றால் பால் அல்லது தண்ணீரில் கலந்து குடுக்க வேண்டுமா? விளக்குங்கள் தோழிகளே
idly
7 மாத குழந்தைக்கு இட்லி கொடுக்கலாம் ஓ கே ஆனால் தொண்டையில் சிக்காதா...மை போல ஆரைத்த உணவு தானே இப்போ குழந்தை சாப்பிடும்.அப்படியே கொடுப்பத்ன்றால் மிக்சியில் இட்லி பால் சேர்த்து அடித்து எடுத்து ஊட்டலாம்..ஒரு 8 மாதம் முடிவடைந்த பின் ஊறவைத்து அப்படியே சின்ன துண்டுகள் கொடுக்கலாம்
ரியா
தளிகா அக்கா சொல்வது சரிதான். ஆனால் பாலில் அல்லது தண்ணீரில் ஊற வைத்து கையாலேயே நல்லா பிசைந்து கொஞ்சம் செமி லிக்விட் போல தரலாம் இரண்டு முறை இட்லி ஊட்டி இடையிடையே தண்ணீர் அவசியம் கொடுங்க. குழந்தை சாப்பிடாட்டி தயவுசெய்து வற்புறுத்த வேண்டாம்
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
மிக்க நன்றி தளிகா
மிக்க நன்றி தளிகா அக்கா.
நித்யா அக்கா, நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிரேன்.. நன்றி
ரியா
ரியா தாராளமாக கொடுக்கலாம்.இட்லி ஆவியில் வேக வைத்தது.முதலில் ஒரு கால் பகுதியில் பாதி கொடுங்கள்.மறுநாள் மோஷன் போறதை பார்த்துவிட்டு கால் பகுதி கொடுங்கள்.ஒரு வயது வரை 1/2 அல்லது 3/4 இட்லி கொடுக்கலாம்.1 வயதிற்குள் எல்லாம் கொடுத்து பழக்க வேண்டும்.தொட்டுக்கொள்ள பால்,வெது வெதுப்பான நீர்,பருப்பு வேக வைத்த தண்ணீர்,காரமில்லாத பருப்பு சாம்பார் இப்படி எது வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.குழந்தை எல்லாம் சாப்பிட்டு பழக வேண்டும்.நன்றாக மசித்து கொடுங்கள்.சாப்பிட்டு முடிந்தவுடன் தண்ணீர் கொடுங்கள்.இடையில் விக்கல் எடுத்தால்,புறை போனால் மட்டும் தண்ணீர் கொடுங்கள்.இல்லையென்றால் குழந்தைகள் தண்ணீரை குடித்து சாப்பிட மறுப்பார்கள்.
மிக்ஸியில் அடித்து கொடுத்தால் குழந்தை மென்று தின்னும் முறையை கற்காமல் போய் விடும்.இது என் அருகில் உள்ள பல குழந்தைகளை கண்டு அப்படி செய்யாமல் நான் என் குழந்தைக்களுக்கு நான் மேலே கூறியதை செய்தேன்.என் குழந்தைகள் எல்லாம் சாப்பிட்டு பழகிவிட்டார்கள்.
நான் செய்வதை கூறியுள்ளேன்.தோழிகள் கூறியதற்கு மாற்று கருத்து என்று யாரும் நினைக்க வேண்டாம்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Expectation lead to Disappointment
ஹாய்,
என் குழந்தை இட்லி சாப்பிட மாட்றான்,அவனுக்கும் 7 மாதம் ஆகிறது ,இட்லி -இல் உள்ள புளிப்பு சுவை அவனுக்கு பிடிக்கவில்லை ..தொட்டுக்கொள்ள ,வெது வெதுப்பான நீர்,அதில் சிறிது சீனி கலந்து ,அல்லது ,பருப்பு வேக வைத்த தண்ணீர்,காரமில்லாத பருப்பு சாம்பார் இப்படி எது சேர்த்து கொடுத்தாலும் உண்பதில்லை ,என்ன செய்வது என்று தெரியவில்லை,உதவுங்கள் தோழிகளே .
ஹாய் திவ்யா
தேன் கலந்து கொடுத்து பாருங்கள். அது உடம்புக்கும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்கும். தேன் பட்டும் படாமலும் கொடுக்க வேண்டும். அதிகமாக இருந்தால் உமுட்டி விடுவார்கள். சாப்பிட்டான் என்ற result-யை சொன்னால் சந்தோஷப்படுவேன்
babies
hai sharmila
neengal sonnathu pol than kalanthu koduthu parthan 2vai sapitan.aanal umatugiran,idliyai vaayil vaithalay mugam sulikiran alugiran.kavalaiyaga ullathu pa
hai thoozhi
ஏழு மாத குழந்தைக்கு இட்லி பால் கலந்து கொடுக்கலாம்
ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்
hai
இட்லியை பாலில் நன்றாக மசித்து கொடுக்கவேன்டும்
ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்
மிக்க நன்றி மீனள் அக்கா
மிக்க நன்றி மீனள் அக்கா