தொடை பெரிதாக உள்ளது

அன்பு தோழிகளே எனக்கு தொடை மிகவும் பெரிதாக உள்ளது,கால் முட்டியை சுற்றி அதிக சதை விழுந்து விட்டது,இதனால் என்னால் படிகள் இறங்கும் போது,கீழே உட்காரும் போது,எழும்போது வலி இருக்கிறது,தொடை சதையை குறைப்பதற்கு,யாராவது யோகா அல்லது உடற்பயிற்சி இருந்தால் கூறுங்களேன்,இந்த உடற்பயிற்சியை எத்தனை மாதங்கள் செய்தால் குறையும்
மேலும் தொடையின் பின்புறம் மட்டும் மிகவும் டிரையாகவும்,கருப்பாகவும் உள்ளது,அதற்கு ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் கூறுங்கள் தோழிகளே,பிளீஸ்

யாராவது பதில் சொல்லுங்கள் தோழிகளே

நடை பயிற்ச்சி தான் (Walking) இதற்க்கு அதிகம் உதவும் ,தினமும் வாக்கிங் போங்க ,பலன் தெரியும்.

பொதுவாக நடக்கும் போது இரு தொடைகளும் உரசுவதால் தொடையின் உட்புறம் தான் கருப்பாகும் ,ஆனால் பின் புறம் கறுக்க என்ன காரணம் என்று தெரிய வில்லை , மாய்ஸ்டரைசர் (Moisturiser)தடவுங்கள், டிரைனஸ் போய்விடும்.

நான் கொஞ்சமாக யோகா செய்வேன்..அதில் Tadasana செய்வேன்..ஒரு மாதம் கூட ஆகியிருக்காது முட்டிக்கு பின்னால் இருக்கும் சதையெல்லாம் ஒட்டி கால் மொத்தமாக இருக்கும் சதையெல்லாம் ஒட்டிபோயிடுச்சு..எனக்கே ஆச்சரியம்...இனியும் வேறயும் இருக்கானு தெரியாது..நீங்க கூகிள் பண்ணி எப்படி செய்றதுன்னு பாருங்க

ரொம்ப நன்றி தளிகா,வனி,
தளிகா நீங்க செய்த யோகாசனா நானும் செய்து பார்க்கிறேன்,இந்த ஆசனத்தை 1 நாளைக்கு எவ்வளவு நேரம் அல்லது நிமிடங்கள் செய்வீர்கள்,வாரத்தில் 7 நாட்களும் செய்ய வேண்டுமா?தளிகா,Tadasanaஎன்று குடுத்தால், standing pose mountain poseஎன்று நிறைய இருக்கிறதே,இதில் நீங்கள் எந்த pose செய்தீர்கள்?
தளிகா நீங்க செய்த Tadasana yoga லின்க் இருந்தால் குடுக்க முடியுமா?

வனி நான் வெளி நாட்டில் இருப்பதால் குளிர் அதிகம்,அதனால் குளிர் காலத்தில் சூடான தண்ணீரில் குளிப்பேன்,அதனால் எனக்கு அதிக அளவில் அரிப்பு ஏற்படுகிறது,அதனால் சில நேரங்களில் என்னையும் அறியாமல் சொரிந்துவிடுவேன்,அதனால் கருப்பு திட்டுகளாக மாறிவிட்டது,உங்களுக்கு ஏதாவது வீட்டு வைத்தியம் கருமை மாற கூற முடியுமா?

வனி எனக்கு சின்ன வயதில் இருந்தே தொடை பெரிதாகவே இருக்கும்,இப்பொழுது இன்னும் அதிகமாகிவிட்டது,நானும் நடை பயிற்சி எல்லாம் முயற்சி செய்துவிட்டேன்,சிறிது கூட குறையவில்லை,அலுத்துபோய் வாக்கிங்கையே விட்டு விட்டேன்

மஞ்சு ஆசனா ஏழு நாள்களும் செய்யுங்க.நிதானமாக மூன்று முறை செய்யவும்.

டியர் தளிகா,
உங்க பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

ஹாய் நிகிலா
ரொம்ப நன்றி நிகிலா,இந்த யோகா செய்யும் பொழுது மூச்சுவிடுவதில் எனக்கு 1 சின்ன சந்தேகம்,அதாவது கையை மேலே உயர்த்தும் பொழுது மூச்சு உள்ளிழுத்து திரும்ப கையை கீழே கொண்டு வரும் போது தான் மூச்சை வெளியே விடனுமா?

ஆம் மஞ்சு நீங்கள் சொல்வது சரியே

டியர் நிகி ரொம்ப நன்றி பதிலளித்ததற்கு

மேலும் சில பதிவுகள்