மேட் வால்ஹேங்கிங்

தேதி: November 17, 2012

5
Average: 4.7 (15 votes)

 

மேட்
உல்லன் நூல் - சிவப்பு மற்றும் பச்சை நிறம்
பச்சை நிற நூல்
நோட்டு தைக்கும் பெரிய ஊசி
கோல்டன் மணி
பச்சை நிற மணி
ஸ்டோன் (விரும்பினால்)
கத்தரிக்கோல்

 

மேட்டை 20 x 20 என்ற அளவில் வெட்டிக் கொள்ளவும் (4 துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். ஒரு வால்ஹேங்கிற்கு 2 மேட் துண்டுகள்).
மேட்டின் வெளிப்பக்க பார்டருக்கு ஊசியில் பச்சை நிற நூலை இரட்டையாகக் கோர்த்து முடிச்சுப் போட்டு மேட்டின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து கீழிருந்து மேலாக ஒவ்வொரு ஓட்டையிலும் விட்டு இழுக்கவும்.
இதேபோல் சுற்றிலும் கீழிருந்து மேலாக ஒவ்வொரு ஓட்டையிலும் விட்டு இழுக்கவும்.
இதேபோல் 4 புறமும் தைத்ததும் கடைசியாக முடிச்சு போட்டு நூலை வெட்டி விடவும்.
ஊசியில் பச்சை நிற நூலை ஒற்றையாக கோர்த்து பார்டரின் உள் பக்கத்து மூலையில் கீழிருந்து மேலாக இழுத்து X போல தைக்கவும்.
இதேபோல் அடுத்தடுத்த ஓட்டையிலும் X போல தைக்கவும்.
மேட் துண்டின் 4 புறமும் ஒவ்வொரு ஓட்டையிலும் ஊசியை விட்டு X போல தைக்கவும்.
ஊசியில் சிவப்பு நிற நூலை ஒற்றையாக கோர்த்து பச்சை நிற நூலிற்கு உள்புறம் X போல தைக்கவும். இதேபோல 2 வரிகளுக்கு தைக்கவும்.
அடுத்ததாக இதேபோல் பச்சை நிறத்தில் 2 வரிகள், சிவப்பு நிறத்தில் 2 வரிகள் போடவும். மீண்டும் பச்சை நிறத்தில் 2 வரிகள் போட்டு கடைசியாக(நடுவில்) இருக்கும் ஒரு ஓட்டையில் சிவப்பு நிறத்தில் ஒரு X போல தைக்கவும்.
பிறகு மேட்டின் பின் பக்கத்தில் கடைசியாக(நடுவில்) தைத்ததை முடிச்சுப் போட்டு நூலை வெட்டிவிடவும். 4 மேட் துண்டுகளிலும் இவ்வாறு தைத்து வைத்துக் கொள்ளவும்.
மேட்டை டைமண்ட் ஷேப்பில் வைத்து கீழ்பக்க முனையில் பச்சை நூலை கட்டி அதில் ஒரு கோல்டன் மணி, ஒரு பச்சை மணி கோர்க்கவும்.
இதே போல் மற்றொரு கோல்டன் மணி, பச்சை மணியை கோர்த்து கடைசியாக கோல்டன் மணியைக் கோர்த்து முடிச்சு போடவும்.
கீழ்பக்கம் தொங்கும் நூலில் மற்றொரு மேட்டின் மேல் பக்கத்தை இணைத்து முடிச்சு போட்டு நூலை வெட்டவும்.
மேட்டின் வலது மற்றும் இடது புற முனைகளிலும் மணிகளைக் கோர்த்து விடவும். ஆறு நூல் துண்டுகள் எடுத்து சடை பின்னல் போல பின்னி வளைத்து முதல் மேட்டின் மேல் முனையில் பின்பக்கத்தில் வைத்து தைத்துவிடவும். அடுத்த 2 மேட்டுகளையும் இதேபோல் இணைத்து மணிகள் கோர்த்து இன்னொரு மேட் தயார் செய்யவும்.
அழகிய மேட் வால்ஹேங்கிங் ரெடி! இரண்டு மேட் இணைத்தது போல உங்கள் விருப்பத்திற்கேற்ற எண்ணிக்கையிலும் மேட்களை இணைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுபத்ரா... வெளிய இதை பார்த்ததுமே நினைச்சேன், நீங்க தான்னு :) நீங்களே தான். பலரும் மறந்து போன கைவினகளை வழங்கும் உங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் சுபத்ரா...
பள்ளி நாட்களில் இதனை விரும்பி செய்வேன்...இப்பொழுது டச் விட்டு போயிடுச்சு...உங்க படைப்பை பார்த்து திரும்பவும் ஆசை வந்துடுச்சு....நல்லா பண்ணி இருக்கிங்க....

அழகான கைவினை. வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

அழகா இருக்கு...எனக்கும் பழைய நியாபகம்.வாழ்த்துக்கள் சுபத்ரா

Kalai

Simple and superb mam.......
Thank u....

Hi

I am new to this site.

The wall hanging is simple and super.

can u provide us some more designs in mat?

Thanks,
Ramya