எனது கண்ணின் ஓரமாய் சிறிய காய் (கக்கட்டி,லம்ப்) ஒன்று இருக்கின்றது.

அன்புத் தோழிகளுக்கு என் இனிய காலை வணக்கம்.

எனது பிரச்சினை என்னவென்றால் எனது கண்ணின் ஓரமாய் சிறிய காய் (கக்கட்டி,லம்ப்) ஒன்று இருக்கின்றது.அது ஒரே அறிப்பாக உள்ளது.ஆனால் அதை சொறியவும் முடியவில்லை.வலிக்கின்றது.தயவுசெய்து வீட்டு வைத்தியம் ஏதும் தெரிந்தால் சொல்லவும் ஆனால் இது அடிக்கடி வருகின்றது..(நான் டுபாயில் வசித்து வருகின்றேன்)

உடல் சூட்டினால் கக்கட்டி வரும். அடிக்கடி வருதுன்னா கண் மருத்துவரை பாருங்கள்.

இளஞ்சூடுள்ள தண்ணீரில் சுத்தமான துணியை முக்கி ஒத்தடம் கொடுங்கள். வலியும் வீக்கமும் குறையும்.

நீங்க காஜல், மஸ்காரா ஐமேக்கப் உபயோகிப்பீங்கன்னா அதை கொஞ்ச நாள் தவிர்த்திடுங்க. அப்படியே யூஸ் பண்ணினாலும் தவறில்லை. ஆனால் அதை தினமும் சரியாக ரிமூவ் செய்த பின்னாடிதான் தூங்கணும்.

என் மருத்துவர் சொன்னது... ஐ மேக்கப் எதுவும் தினமும் போடாதீங்க. ஃபங்க்‌ஷன் எதுக்காவது போட்டீங்கன்னா வீட்டுக்கு வந்ததும் சுத்தமான துணியை இளஞ்சூடுள்ள தண்ணீரில் முக்கி கண்களை அழுத்தாமல் மெதுவாக துடைத்து நீக்க வேண்டும். இதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சதுல இருந்து எனக்கு கக்கட்டி வருவதில்லை. இப்பல்லாம் கண்மை கூட போட்டுக்கறதில்லை. ஃபங்ஷன் போகும் பொது மட்டும்தான் எல்லாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கண்கட்டிக்கு நல்ல டிப்ஸ் கவி!

எனக்கு காலேஜ் டேஸ்ல அடிக்கடி வரும், உடம்பு சூடு ஜாஸ்தியாகும் போதெல்லாம். உடல் உஷ்ணத்தை குறைப்பதுப்போலான உணவு வகைகளை எடுக்கலாம். கூடவே, நாம‌க்கட்டியை தண்ணீரில் உரசி, அந்த சாந்தை கண் இமைக்கு மேலோ, அல்லது கண் இரைப்பைக்கு கீழாகவோ (கண் கட்டிக்கு அருகில் இருக்கும் மாதிரி) தடவிட்டு இரவில் படுத்து தூங்குங்க. நல்ல குளிர்ச்சி, உடனே கேட்கும்.

அன்புடன்
சுஸ்ரீ

நண்றி தோழி.

நீங்க சொன்னது போலவே நான் காஜல், மஸ்காரா ஐமேக்கப் யூஸ் பன்றேன்.இனிமேல் இது மாதரி பன்னக்கூடாது.மிக்க மிக்க நண்றி தோழி உங்க பதிலுடன் கூடிய அட்வய்சுக்கு.

நண்றி தோழி..மிக்க மிக்க நண்றி தோழி உங்க பதிலுடன் கூடிய அட்வய்சுக்கு.

மேலும் சில பதிவுகள்